திருகோணமலையில் பௌத்த விகாரை – பிக்குவிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
திருகோணமலை- பொரலுகந்த ரஜமஹா விகாரை அமைப்பதற்கு முன்னின்று செயற்பட்ட பௌத்த பிக்குவிற்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மொரவெவ- தெவனிபியவர இந்ரா ராம விகாரையின் விஹாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி 2023/09/11 ம் திகதி இம்முறைப்பாட்டினை செய்துள்ளார். அம்முறைப்பாட்டில் சொகுசு வெள்ளை வேனில் நான்கு பேர் தனக்கு சொந்தமான இரண்டு விகாரைகளுக்கும் தேடிச் வந்ததாகவும், குறித்த வேனில் வருகை தந்தவர்கள் யார் என்று தெரியாது எனவும் தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் […]