இந்தியா

கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் – இருவர் பலி!

  • September 13, 2023
  • 0 Comments

இந்தியாவின் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் 4 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 9 வயது சிறுவன், 4 வயது சிறுவனும் அடங்குவார்கள். சுகாதாரத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் 75 பேர் உள்ளனர். 130 பேர் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளனர். நிபா வைரஸால் மூளை செல்கள் அழிந்து, உமிழ்நீருடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களிடையே பரவுவதாக […]

இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் கையடக்க தொலைப்பேசிகளை பயன்படுத்த தடை!

  • September 13, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க பணியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். குறிப்பாக கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கையடக்க தொலைபேசியை பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமிக்கு இடது கை மாணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் அண்மையில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதனையடுத்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை

ஆஸ்திரேலியாவுக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே நியமனம்!

  • September 13, 2023
  • 0 Comments

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக கடமையாற்றி வரும் கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே விரைவில் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கோபால் பாக்லேவுக்குப் பதிலாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பொழுதுபோக்கு

அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியை எப்படி வளைத்து போட்டார்? வீடியோ வந்தது

  • September 13, 2023
  • 0 Comments

இன்று நட்சத்திர தம்பதியர்கள் ஆக நடிகர் அசோக் செல்வன்- கீர்த்தி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த ஸ்பெஷல் டேவில் இவர்கள் இருவரின் ரொமான்டிக் லிரிக்ஸ் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது இன்று திருமணமான அசோக் செல்வன்- கீர்த்தி இருவரின் திருமண புகைப்படம் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளது. அது மட்டுமல்ல இவர்களது திருமணத்திற்கு திரை பிரபலங்கள் மட்டுமல்ல ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியை எப்படி வளைத்து போட்டார் என்ற […]

இலங்கை

ரணிலுக்கு அழைப்பு விடுத்துள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜி

  • September 13, 2023
  • 0 Comments

கொல்கத்தாவில் நடைபெற உள்ள தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்க வருமாறு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இந்திய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் அழைப்பு விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தாவில் நவம்பர் 21,22 ஆகிய திகதிகளில் தொழில் முனைவோர் மாநாடு பெற உள்ளது. இதையொட்டி மாநிலத்திற்காக முதலீடுகளை ஈரப்பதற்காக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானார்ஜி, 12 நாள் பயணமாக டுபாய் மற்றும் ஸ்பெயினுக்குச் சென்றுள்ளார். டுபாய் விமான நிலையத்தில் புதன்கிழமை (13) […]

வட அமெரிக்கா

மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்ட ஏலியன் சடலங்கள்…!(வீடியோ)

  • September 13, 2023
  • 0 Comments

மெக்ஸிகோவில் இரண்டு அன்னிய சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒரு வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. “மனிதர் அல்லாத” வேற்றுகிரகவாசிகளின் சடலங்கள் என்று நம்பப்படும் இரண்டு சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த சடலங்கள் குறைந்தது 1,000 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது. இந்த தகவலை மெக்சிகன் பத்திரிகையாளர் மற்றும் யூஃபாலஜிஸ்ட் ஜெய்ம் மௌசன் வழிநடத்தி வந்துள்ளார். பல தசாப்தங்களாக வேற்று கிரக நிகழ்வுகளை ஆராய்ந்து வரும் அவர், மெக்சிகன் விஞ்ஞானிகளுடன் இணைந்து இதை கண்டுப்படித்துள்ளார். https://twitter.com/i/status/1701783291659968887 அந்த […]

இலங்கை

இலங்கையில் அரச நிறுவனங்களை குறிவைத்து சைபர் தாக்குதல்கள் – விசாரணைகள் ஆரம்பம்!

  • September 13, 2023
  • 0 Comments

அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகளை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இணைய தாக்குதல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தொழிநுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் கனக ஹேரத், சைபர் தாக்குதலில் ஈடுபட்ட குழுவின் தகவல்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆகஸ்ட் 26ஆம் திகதி பல அரச நிறுவனங்கள் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் தரவுகள் காணாமல்போயுள்ளதாகவும், அதனை மீட்டெடுக்க […]

ஐரோப்பா

மகளின் மீதான பாசத்தால் கின்னஸ் சாதனை படைத்த தந்தை! அப்படி என்ன செய்தார்?

  • September 13, 2023
  • 0 Comments

கின்னஸ் சாதனைக்காக பல்வேறு வகைகளிலும் தங்களது திறமைகளை நிரூபித்து சாதனை படைப்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் தனது மகளின் பெயரை உடலில் 667 முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரது பெயர் மார்க் ஓவன் எவன்ஸ். 49 வயதான இவர் ஏற்கனவே தனது மகளின் பெயரான லூசி என்பதனை 267 முறை பச்சை குத்தி கடந்த 2017-ம் ஆண்டு சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் 2020-ம் ஆண்டு […]

இலங்கை

பதுளை பிரதேசத்தில் சிறுமிகள் இருவர் பலரால் பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம்

  • September 13, 2023
  • 0 Comments

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பதின்ம வயது சிறுமிகள் இருவர் பலரால் பல தடவைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக பணியக பதுளை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மூவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மூத்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய நபர் […]

இலங்கை

ஆயுத விநியோகம் தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்துமாறு பிரித்தானியா வலியுறுத்தல்!

  • September 13, 2023
  • 0 Comments

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விநியோகிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவருமாறு பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்,  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு இடையிலான சந்திப்பு இன்று (13.09) இடம்பெற்றுள்ள நிலையில் பிரித்தானியா மேற்படி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தி தொடர்பாளர், ரஷ்யாவுடனான ஆயுதப் பேச்சுவார்த்தையை நிறுத்துமாறும், ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்கக் கூடாது என்று பியாங்யாங் செய்துள்ள பொது உறுதிமொழிகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் பிரித்தானியா தெரிவித்துள்ளார். […]