வடகொரியா – ரஷ்யா இடையே புதிய உடன்பாடா? கிரெம்ளின் விளக்கம்
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் தற்போதைய ரஷ்யப் பயணத்திற்கிடையே உடன்பாடுகள் ஏதும் கையெழுத்திடப்படவில்லை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டு கிரெம்ளின் விளக்கியுள்ளது. வடகொரியாவும் ரஷ்யாவும் ஆயுதங்கள் தொடர்பான உடன்பாட்டுக்குத் தயாராகி வரக்கூடுமென அமெரிக்கா அண்மையில் கவலை தெரிவித்திருந்தது. ஆனால் அப்படி ஏதும் திட்டமில்லை என்று கிரெம்ளின் பேச்சாளர் கூறினார். கிம் செவ்வாய்க்கிழமை ரஷ்யாவுக்குச் சென்றார். விளாடிமிர் புட்டினை புதன்கிழமை சந்தித்தபோது இருவரும் துப்பாக்கிகளைப் பரிசாகப் பரிமாறிக்கொண்டனர். வடகொரியாவுடனான மேம்பட்ட ஒத்துழைப்புக்குச் சாத்தியம் இருப்பதாகத் புட்டின் […]