உலகம்

லிபியாவில் ஏற்பட்ட பேரழிவு : அரசாங்கம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு!

  • September 16, 2023
  • 0 Comments

லிபியாவின் டெர்னா அணை உடைந்தமையினால்  ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11000 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இது குறித்து அரசாங்கத்திற்கு எதிரான பல  குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக டெர்ணா அணை குறித்து நீண்டகாலமாக ஆய்வுகளை மேற்கொண்ட நீரியல் நிபுணர் அப்துல் வானிஸ் அஷூர் இந்த பேரழிவை நீண்ட காலத்திற்கு முன்பே கணித்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக அணையில் ஏற்பட்டிருந்த விரிசல்கள் குறித்து அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பொது நீர் ஆணையத்தின் நிபுணர்கள் மூலமாகவோ அல்லது […]

வட அமெரிக்கா

ஒத்திவைக்கப்பட்ட கனடா வர்த்தகத்துறை மந்திரியின் இந்தியாவிற்கான பயணம்…

  • September 16, 2023
  • 0 Comments

ஜி20 உச்சிமாநாட்டின் போது இந்திய பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ட்ரூடோ இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, கனடாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும், காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் கனடாவில் உள்ள இந்து மத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல்கள் வருவதாகவும் இது தொடர்பாக கனடா அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ட்ரூடோவிடம் மோடி வலியுறுத்தினார். காலிஸ்தான் விவகாரத்தில் கனடாவுக்கு இந்தியா கண்டனம் […]

இலங்கை

கொரியாவில் இலங்கை இளைஞரக்களுக்கு அதிக தொழில்வாய்ப்பு!

  • September 16, 2023
  • 0 Comments

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கொரிய வேலைக்காக இலங்கையில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இரு மடங்காக அதிகரித்துள்ளதாக கொரிய குடியரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் லீ ஜங்சிக் தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் கொரிய தூதுவர் லீ மியுங் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் டெம்பிள் ஹவுஸில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே லீ ஜங்சிக் மேற்கண்டவாறு தெரிவித்தார். கொரிய மொழி அறிவு கொண்ட திறமையான தொழிலாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் […]

தமிழ்நாடு

சீமான் மீது அளித்த புகாரை நள்ளிரவில் வாப்பஸ்பெற்ற விஜயலட்சுமி !

  • September 16, 2023
  • 0 Comments

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி நள்ளிரவில் பொலிஸ் நிலையத்திற்கு நேரில் வந்து வாபஸ் பெற்றதால் பரப்பரப்பு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் நடவடிக்கை வேண்டாம் என தெரிவித்து விட்டு சென்ற நிலையில் கடந்த மாதம் மீண்டும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க […]

இலங்கை

கொழும்பு துறைமுக நகரில் உள்ள உணவகங்களை அகற்ற நடவடிக்கை!

  • September 16, 2023
  • 0 Comments

2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கொழும்பு துறைமுக நகரில் உள்ள உணவகங்களை அகற்றவுள்ளதாக கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக நகரமானது வெளிநாட்டு முதலீடுகளுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான ஹோட்டல்களை நடத்துவதன் சட்டபூர்வ தன்மை தொடர்பில் அரசாங்கத்தின் நிதிக்குழு எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு மேற்படி தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக நகரத்தில் கட்டப்பட்டுள்ள அனைத்து உணவகங்களும் கொழும்பு துறைமுக நகர பொருளாதாரத்துடன் இணைந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளின் கீழ் […]

இலங்கை

03 மாதகாலப்பகுதியில் யாழ் வந்த 6000 இந்திய பயணிகள்!

  • September 16, 2023
  • 0 Comments

கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையை ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில்,   இந்தியாவில் இருந்து 6000க்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் யாழ்ப்பாணம் வந்துள்ளதாக இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய துணைத்தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கடந்த ஜூன் 16ஆம் திகதி அதன் ஆரம்ப வருகையிலிருந்து 9 தடவையாக மேற்கொள்ளப்பட்ட அடுத்தடுத்த பயணங்களின் போது சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாண நகரத்தில் ஒரு மறக்க முடியாத விடுமுறை அனுபவத்தைத் தொடங்கினர். அதன் வளமான வரலாற்றுடன்,  யாழ்ப்பாணம் தென்னிந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளும் […]

இலங்கை

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளை சந்தித்த ஆளுநர் செந்தில்

  • September 16, 2023
  • 0 Comments

கிழக்கு மாகாணத் தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் தனியார் வைத்தியசாலை அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஊடாக தனியார் வைத்தியசாலை பிரதிநிதிகளுக்கு மேலதிக உதவிகள் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை

நல்லூரில் யாசகம் பெற வந்த பெற்றோர்களுடன் வந்த பெண் குழந்தை மாயம்

  • September 16, 2023
  • 0 Comments

நல்லூரில் யாசகம் பெற வந்த பெற்றோர்களுடன் வந்த பெண் குழந்தையை காணவில்லை என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இருந்து , நல்லூர் ஆலய தேர் திருவிழாவிற்கு யாசகம் இரண்டு பிள்ளைகளுடன் பெற்றோர் வந்துள்ளனர். அவர்கள் தேர் மற்றும் தீர்த்த திருவிழாவின் போது நல்லூரில் யாசகம் பெற்றுள்ளனர். அதன் போது , அவர்களின் இரண்டரை வயது பெண் பிள்ளை நல்லூர் வளாகத்தில் நேற்றைய தினம் தீர்த்த திருவிழாவின் போது காணாமல் […]

இலங்கை

யாழில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய நபர்

  • September 16, 2023
  • 0 Comments

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் யாழ் நகர்ப் பகுதியில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டார். ஒரு கிலோ கிராம் 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 70 வயதுமிக்க ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ள நிலையில் சந்தேக நபரை இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளனர்.

செய்தி

யாழில் ஒருதலை காதலால் விபரீதம் – காதலன் செய்த அதிர்ச்சி செயல்

  • September 16, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம், தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதோடு வீட்டு உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த தாக்குதலில் ஐந்து பேர் காயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் உள்ள யுவதியை காதலித்ததாகவும் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறிய போது பெற்றோர் மறுத்திருந்த நிலையில் குறித்த இளைஞன் தனது […]