உலகம்

புலம்பெயர் மக்களின் படகில் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு!

  • September 16, 2023
  • 0 Comments

வட ஆபிரிக்காவில் இருந்து வந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில், இத்தாலியின் லம்பேடுசா தீவில் மீட்புப் பணியின் போது ஐந்து மாத ஆண் குழந்தை ஒன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. லம்பேடுசாவில் புலம்பெயர்ந்தோர் தரையிறங்கியதால் இந்த சோகம் நிகழ்ந்தது, புதன்கிழமை சுமார் 1,850 பேர் தரையிறங்கினர், இது லம்பேடுசாவில் குடியேறியவர்களின் மொத்த எண்ணிக்கையை 6,700 க்கும் அதிகமாகம் என தெரிவிக்கப்படுகின்றது. குழந்தை பயணித்த படகு இத்தாலிய கடலோர காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்படுவதற்கு சற்று முன்னர் கவிழ்ந்தது. குழந்தையின் […]

ஐரோப்பா

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சொத்து உட்பட பலரின் சொத்துக்களை ஏலம் விட ரஷ்யா முடிவு!

  • September 16, 2023
  • 0 Comments

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உட்பட நூற்றுக்கணக்கான உக்ரைனியர்களுக்கு சொந்தமாக கிரீமியாவில் உள்ள சொத்துகளை விற்கப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டு ரஷ்ய படைகள் கிரீமிய தீபகற்பத்தை கைப்பற்றின. உலக நாடுகள் அதனை அங்கீக்கரிக்காத போதும் ரஷ்ய அதிகாரிகள் அங்கு தேர்தல் நடத்தி அரசை நிர்வாகித்து வந்தனர். அங்கு உக்ரைன் நாட்டு அரசியல் தலைவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் சொந்தமான 500 சொத்துகளை தேசியமையமாக்கிய ரஷ்ய அதிகாரிகள், 815 மில்லியன் ரூபிள் மதிப்பிலான அந்த சொத்துக்களை ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ளனர்.

இலங்கை

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது!

  • September 16, 2023
  • 0 Comments

இலங்கைக்கு சட்டவிரோதமாக சிகெரட் குச்சிகளை கொண்டுவர முற்பட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கட்டுநாயக்கா பண்டார்நாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். துபாயில் இருந்து வருகை தந்த குறித்த பெண் 17 ஆயிரம் சிகரெட் குச்சிகளை கடத்தியதாக கூறப்படுகிறது. இதன் பெறுமதி 1.7 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த விடயம் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை

தேர்தல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நீடிப்பு!

  • September 16, 2023
  • 0 Comments

தேர்தல் செலவுகள் தொடர்பான சட்டமூலத்தின்படி தேர்தல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை 21 நாட்களில் இருந்து 42 நாட்களாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குடியியல் வழக்கு நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைக்கான திருத்தம் மற்றும் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பில் நீதி மற்றும் சட்டம் மீதான துறைசார் மேற்பார்வை குழுவில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேர்தல் சட்டமூலங்களால் நிர்ணயிக்கப்பட்ட அபராதத் தொகை போதுமானதாக இல்லாததால், தற்போதைய நிலைமைக்கு உரியவாறு அபராதத் தொகையை […]

ஐரோப்பா

ஹங்கேரி-பல்கேரியா இடையே இயற்கை எரிவாயு ஒப்பந்தம்

  • September 16, 2023
  • 0 Comments

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 5வது மக்கள்தொகை உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இத்தாலி, பல்கேரியா, ருமேனியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பல்கேரியா நாட்டின் அதிபர் ருமென் ராதேவை ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் சந்தித்து எரிசக்தி பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். இதனையடுத்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் எண்ணெய் நிறுவனங்களும் கையெழுத்திட்டன. மேலும் இந்த உச்சி மாநாட்டில் தான்சானியா துணை அதிபர் பிலிப் எம்பாங்கோவிடம் சுற்றுலா, […]

இலங்கை விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

  • September 16, 2023
  • 0 Comments

2023 ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் நாளை (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்‌ஷன காயம் காரணமாக அணியில் இடம்பெறமாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவருக்கு பதிலாக அணியில் சஹான் ஆராச்சிகே இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியா

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை :பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை

  • September 16, 2023
  • 0 Comments

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். பாரமுல்லா மாவட்டத்தின் ஹத்லங்கா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரின் பதில் தாக்குதலில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் இந்த வாரத்தில் நடந்த 3-வது என்கவுண்டர் சம்பவம் இது. இதற்கு முன் ரஜோரி மற்றும் அனந்தநாக் […]

பொழுதுபோக்கு

இதுவே இப்படி இருக்கே… அப்ப படம் எப்படி இருக்கும்????

  • September 16, 2023
  • 0 Comments

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ‘ஜப்பான்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வீடியோ 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. […]

இலங்கை

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி!

  • September 16, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டை விட 3.1% குறைவடைந்துள்ளது என  மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான தேசிய கணக்கு மதிப்பீடுகளை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி இரண்டாவது காலாண்டிற்கான கணக்கியல் மதிப்பீடுகளை வெளிப்படுத்திய திணைக்களம், விவசாயத் துறையில் வளர்ச்சி காணப்பட்டதாகவும், ஆனால் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் […]

பொழுதுபோக்கு

My3 Web series: ரோபாவாக ஹன்சிகா…. சீனுக்காக அலையும் சாந்தனு..

  • September 16, 2023
  • 0 Comments

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட சூப்பரான காமெடி படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த ராஜேஷ் எம் இயக்கத்தில் சாந்தனு, பிக் பாஸ் முகேன், ஹன்சிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி வெப் சீரிஸ் My3 விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்நிலையில், அந்த வெப்சீரிஸின் பிரத்தியேக புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் இயக்குநர் ராஜேஷ். எம் தயாரிப்பாளரின் டார்ச்சர் […]