இலங்கை

இலங்கையில் மின் கட்டணத்தில் திருத்தம் : ஜனவரி முதல் வரவுள்ள மாற்றம்!

  • September 18, 2023
  • 0 Comments

இலங்கை மின்சார சபை மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என பொறியியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் இவ்வருடத்தில் இரு முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெற்று தொடர்ந்து மின்சாரம் வழங்குவதன் மூலம் மின்சார சபை நஷ்டம் அடைவதாகவும் பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும் இந்த […]

ஆசியா

புதிய தொலை உணர்வு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்னுக்கு ஏவிய சீனா..!

  • September 18, 2023
  • 0 Comments

வானில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் யோகன்-39 என்னும் தொலை உணர்வு செயற்கைக்கோளை ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று ஏவியது. இந்த செயற்கைக்கோள் அதிநவீன புவி கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் என்றும், யோகன் 39 லாங் மார்ச்-2D கேரியர் ராக்கெட் மூலம் 12:13 மணிக்கு (பெய்ஜிங் நேரம்) ஏவப்பட்டது மற்றும் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கை

ஐநா வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் எரிசக்தி அமைச்சருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

  • September 18, 2023
  • 0 Comments

இலங்கைக்கான ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche திங்கட்கிழமை (செப். 18) காலை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகரவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, அரசின் கொள்கைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள், மின்சாரத் துறை சீர்திருத்தக் கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான நிதி உதவி மற்றும் பசுமை நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தரப்புக்கும் இடையே விவாதிக்கப்பட்டது. மேலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய உதவும் பொறிமுறையை […]

ஐரோப்பா

மத்திய இத்தாலியில் மிதமான நிலநடுக்கம்!

  • September 18, 2023
  • 0 Comments

மத்திய இத்தாலியில் 4.8 ரிக்டர் அளவில் மிதமான  நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மத்திய இத்தாலியில் புளோரன்ஸ் நகருக்கு வடக்கே நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளதுடன், ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் இதுவரை எவ்வித உடமைகளுக்கும் உயிர்களுக்கும் சேதம் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இலங்கை

திலீபனின் உருவச்சிலை தாங்கிய ஊர்தி மீது தாக்குதல்: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

  • September 18, 2023
  • 0 Comments

திருகோணமலை-சர்தாபுர பகுதியில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை தாங்கிய ஊர்தி மீது தாக்குதல் நடாத்தியதுடன் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட 14 பேரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் இன்று (18) குறித்த சந்தேக நபர்களை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை -கொழும்பு வீதியினூடாக வாகனம் ஒன்றில் […]

பொழுதுபோக்கு

ஹாலிவுட்டுக்கு டஃப் கொடுக்கப் போகும் லியோ… தயாரிப்பாளர் வெளியிட்ட சூப்பர் நியுஸ்

  • September 18, 2023
  • 0 Comments

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு, அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை லியோ படத்தில் இருந்து விஜய்யின் போஸ்டர் வெளியாகி வைரலானது. இன்னொரு பக்கம் லியோ ஹாலிவுட் படங்களுக்கு சாவல் விடும் என தயாரிப்பாளர் லலித் குமார் கூறியுள்ளது, ரசிகர்களின் ஹைப்பை எகிற வைத்துள்ளது. விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், கெளதம் மேனன், மிஷ்கின், […]

ஆசியா

சீனாவில் ஆடை கட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!

  • September 18, 2023
  • 0 Comments

சீனாவில்  தேசத்தின் “உணர்வுகளை புண்படுத்தும்” ஆடைகள் விரைவில்  தடை செய்யப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்திய வரைவு திருத்தங்கள் சட்டத்தின் படி,  “சீன மக்களின் உணர்வுகளுக்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்படும ஆடைகளுக்கும், பேச்சுக்களுக்கும் அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறி தொடர்ச்சியாக மேற்படி இரு செயல்களையும் புரிபவர்களுக்கு அதிகபட்சமாக சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சீன அரசின் இந்த உத்தரவிற்கு எதிராக எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. குறிப்பாக குடியிருப்பாளர்கள் ஆடைகள் என்பது […]

இலங்கை

ஆபாச படங்கள், வீடியோவை வெளியிடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

  • September 18, 2023
  • 0 Comments

பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கும் முயற்சியில், அனுமதியின்றி அந்தரங்கமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிரும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கும் வகையில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த இலங்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், இது தொடர்பான சட்டங்கள் அடங்கிய உத்தேச சட்டமூலம் தொடர்பான குறிப்பாணையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். காதல் உறவுகளின் போது எடுக்கப்பட்ட தனிப்பட்ட, நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை அந்த உறவு முறிந்த பின்னர் சிக்கலை ஏற்படுத்துவதற்காக வேறு […]

ஐரோப்பா

நீண்ட போரை எதிர்கொள்ள தயாராக வேண்டும் – ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்!

  • September 18, 2023
  • 0 Comments

உக்ரைனில் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்க முடியாது, எனவே நீண்ட போரை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறியுள்ளார். ஜேர்மன் செய்தித்தாள் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், அனைத்து போர்களும் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் நீடித்ததாக குறிப்பிட்டார். பிப்ரவரி 2022 இல், ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனை ஆக்கிரமித்தபோது, ​​பல தசாப்தங்களுக்குப் பிறகு ஐரோப்பா மீண்டும் போர் சூழலை எதிர்கொண்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் […]

இலங்கை

திருகோணமலை பன்குளம் பகுதியில் வாகன விபத்தில் இருவர் படுகாயம்!

  • September 18, 2023
  • 0 Comments

திருகோணமலை பன்குளம் பகுதியில் கெப் ரக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் இன்று (18) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை – அனுராதபுரம் ஏ12 வீதியினூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் பன்குளம் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த இருவரும் வேலையின் நிமிர்த்தம் அம்பாறை – காரைதீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கையில் சாரதியின் தூக்கம் காரணமாக வாகனம் பாதையை விட்டு விலகி […]