இலங்கை

மீண்டும் அதிகரித்துள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை

  • June 17, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறக்குமதியாளர்கள் விலைகளை உயா்த்தியுள்ளதால் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பருப்பு ஒரு ஒலோ கிராமின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கும் என வியாபாரிகள் தொிவிக்கின்றனா். இதேவேளை டொலரின் பெறுமதி அதிகரிப்பால் பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

வட அமெரிக்கா

ஆதரவாளர்களை ஏமாற்றி விட்டு இரகசியமாக வெளியேறிய ட்ரம்ப் !

  • June 17, 2023
  • 0 Comments

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தேர்தல் பரப்புரையின் இடையே தமது ஆதரவாளர்களுக்கு உணவு இலவசம் என அறிவித்துவிட்டு, பின்னர் பணம் தராமல் உணவகத்தில் இருந்து ரகசியமாக வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். முதலில் மியாமி நீதிமன்றம் வரை சென்ற டொனால்டு ட்ரம்ப், சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளார். இதனையடுத்து தமது ஆதரவாளர்களுடன் Little Havana பகுதிக்கு சென்ற ட்ரம்ப் அங்குள்ள புகழ்பெற்ற Versailles உணவகத்திற்கு சென்றுள்ளார். […]

ஐரோப்பா

மேற்கு லண்டனி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலங்களாக மீட்பு

  • June 17, 2023
  • 0 Comments

மேற்கு லண்டனில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு லண்டனிலுள்ள Hounslowவில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், தங்கள் 30 வயதுகளிலிருக்கும் ஒரு ஆணும், ஒரு பெண்ணும், 11 வயது சிறுமி ஒருத்தியும், மூன்று வயது சிறுவன் ஒருவனும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை 3.12 மணியளவில் அந்த வீட்டுக்கு பொலிஸார் அழைக்கப்பட்ட நிலையில், வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த பொலிஸார் […]

பொழுதுபோக்கு

பெண்ணை வீடியோ எடுத்து சர்ச்சையில் மாட்டிய பிரபல வில்லன்!

  • June 17, 2023
  • 0 Comments

மலையாள சினிமாவில் வில்லன் மற்றும் முக்கிய வேடங்களில் நடித்து பிரபலமாக இருந்துவரும் நடிகர் விநாயகன் சக பெண் பயணியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு இருப்பது கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மலையாள சினிமாவில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் இருந்துவரும் விநாயகன் பல்வேறு திரைப்படங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமாக இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு சினிமாவில் அறியப்பட்ட நடிகராக இருந்துவரும் விநாயகன் மீது தற்போது பரபரப்பு புகார் ஒன்று எழுந்துள்ளது. கடந்த […]

இலங்கை

மாணவனின் முதுகில் தாக்கிய அதிபருக்கு நேர்ந்த நிலை

  • June 17, 2023
  • 0 Comments

மாத்தறை – அக்குரஸ்ஸ பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட பாடசாலை ஒன்றில் நான்காம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை அதிபர் தாக்கியதில் அந்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் கடந்த 15ஆம் திகதி நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாணவனிடம் ஏ4 தாளினை கொண்டு வருமாறு கூறியும் அவர் கொண்டு வராமை காரணமாக அதிபர் மாணவனின் முதுகில் தாக்கியதாக தெரியவந்துள்ளது. அதன்பின்னர் வீட்டுக்குச் சென்ற மாணவன் திடீரென வாந்தி எடுத்ததையடுத்து பெற்றோர் அது குறித்து வினவியுள்ளனர். இதன்போது அதிபர் […]

ஐரோப்பா

பாரிஸில் ஒன்றாக சந்தித்துக்கொண்ட உலக பெருங்கோடீஸ்வரர் இருவர்

  • June 17, 2023
  • 0 Comments

உலக பெருங்கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்கும், இரண்டாம் இடத்தில் உள்ள பெர்னார்டு அர்னால்ட்டும் பாரிஸில் ஒன்றாக சேர்ந்து மதிய உணவருந்திய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. ஆடம்பர பொருட்களுக்கு பெயர் பெற்ற லூயி வீட்டோன் நிறுவனத் தலைவர் பெர்னார்டு அர்னால்ட் உடன் அவரது இரு மகன்களும் வந்திருந்தனர். அதேபோல எலான் மஸ்க் உடன் அவரது தாயார் வந்திருந்தார். அதை தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்ற தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கருத்தரங்கிற்கு சென்று இருவரும் உரையாற்றினர். […]

வட அமெரிக்கா

மலை உச்சியிலிருந்து 300அடி ஆழத்தில் தவறி விழுந்த நாய்

  • June 17, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் ஆரிக்கன் மாநிலத்தில் மலை உச்சியிலிருந்து தவறி பாறைகள் மீது விழுந்த நாயை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். சுற்றுலா பயணி ஒருவர் மலை உச்சியில் தனது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் விளையாடியபோது அது கால் தவறி 300 அடி ஆழத்தில் கடலை ஒட்டியுள்ள பாறைகள் மீது விழுந்ந்து. காயமடைந்த நாய், கால்நடையாக சென்றடைய முடியாத பாறைகள் நிறைத்த பகுதியில் பரிதவித்தபடி நின்றது. தகவலறிந்து வந்த கடலோர காவல்படையினர் ஹெலிகாப்டரில் ஸ்டிரெட்சருடன் இறங்கி நாயை மீட்டனர்.

இலங்கை

அதிகரித்து வரும் இருதய நோய் ; இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

  • June 17, 2023
  • 0 Comments

காற்று மாசுபாடு உலகின் ஏனைய பகுதிகளைப் போன்று இலங்கையிலும் இதய நோய் அபாயத்தை அதிகரித்துள்ளதாக உயர் இருதயநோய் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் டாக்டர் அனிது பத்திரன, காற்று மாசுபாடு ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் கவலையாக நீண்ட காலமாகக் கருதப்பட்டது, ஆனால் மனித ஆரோக்கியத்தில் அதன் தாக்கம் இப்போது அதிகரித்து உள்ளது” என்றார்.”இதனால், காற்று மாசுபாடு இதய நோயை உருவாக்கும் முக்கிய ஆபத்து காரணியாக […]

பொழுதுபோக்கு

ரிலீசுக்கு முன்பே 9 சர்வதேச விருதுகளை வென்றதா? ‘கண்டதை படிக்காதே’ படம்!!

  • June 17, 2023
  • 0 Comments

ஜோதி முருகன் இயக்கத்தில் ஆதித்யா, சுஜி, சீனிவாசன், வைஷாலி, ஜெனி பெர்னாண்டஸ் ஆகியோர் நடித்துள்ள கண்டதை படிக்காதே திரைப்படத்திற்கு சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. இது ஒரு சூப்பர் நேச்சுரல் ஹாரர் த்ரில்லர் திரைப்படமாகும். இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஜோதி முருகன். புல்லி மூவிஸ் சார்பில் எஸ். சத்யநாராயணன் தயாரித்துள்ளார். மனித புலன்களுக்கு அகப்படாத வகையில் நடக்கும் அமானுஷ்யக் கதைகளைத் திரைப்படத்தில் சரியாகச் சொன்னால் தமிழ் ரசிகர்கள் வெற்றி பெற வைப்பார்கள். இந்த நம்பிக்கையில் உருவாகி இருக்கும் படம் […]

ஐரோப்பா

சுவிஸில் 11 வயதிலும் டயப்பர் அணியும் மாணவர்கள்

  • June 17, 2023
  • 0 Comments

வளர்ந்த பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும் பொழுது டயப்பர் அணிவது அனைவரையும் திகைப்படைய செய்துள்ளது. சுவிட்சர்லாந்தில் 11 வயதாகும் மாணவர்கள் பள்ளிக்கு டயப்பர் அணிந்து வருவதாக வெளியான தகவலால் அங்குள்ள ஆசிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.இந்த தகவல்களை சுவிஷ் ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் ரோஸ்லட் என்பவரே தெரிவித்துள்ளார். மருத்துவ காரணங்களுக்காக இவ்வளவு மாணவர்கள் டயப்பர் அணிவதாக கூறமுடியாது எனவும் ரோஸ்லட் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் மாணவர்களின் இந்த செயற்பாட்டிற்கு பின்னால் தீவிர மனநிலை பாதிப்பும், மோசமான குடும்ப சூழ்நிலையும் நிலவும் சாத்திய கூறுகள் அதிகளவில் […]

You cannot copy content of this page

Skip to content