இலங்கை

தனிப்பட்ட தகவல்களை மற்றுமொரு தரப்பினருக்கு வழங்க வேண்டாம் என இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

  • June 17, 2023
  • 0 Comments

சமூக வலைத்தளங்களினூடாக இடம்பெறுகின்ற மோசடி சம்பவங்கள் தொடர்பில்,   கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதன்காரணமாக தனிப்பட்ட தகவல்களை மற்றுமொரு தரப்பினருக்கு வழங்க வேண்டாம் எனவும் கணனி குற்றத்தடுப்பு பிரிவினர் மக்களின் வலியுறுத்தியுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (16.06) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி. ஜெயநெத்சிறி இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் விளம்பரங்கள் […]

இலங்கை

இலங்கையில் நியமனக் கடிதங்கள் கிடைத்தும் சேவையில் இணையாத மருத்துவர்கள்!

  • June 17, 2023
  • 0 Comments

இந்த வருடம் வைத்தியர்களாக நியமிக்கப்பட்ட 1300 பேரில் 100 பேர் பணியில் இணையவில்லை என தரவுகள் வெளியாகியுள்ளன. நியமனம் பெற்ற சுமார் 50 வைத்தியர்கள் நியமனக் கடிதங்களை பெற்றுக் கொள்ள வரவில்லை எனவும் சுமார் ஐம்பது பேர் நியமனக் கடிதங்களை ஏற்று பணிக்கு சமூகமளிக்கவில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் சுகாதாரத் துறை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகவதை தவிர்க்க முடியாது என்றும் அவர் […]

ஆப்பிரிக்கா

சூடானில் வான்வழித் தாக்குதல் : 17 பேர் கொல்லப்பட்டதாக அறிவிப்பு!

  • June 17, 2023
  • 0 Comments

சூடானின் கார்டோமில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  யர்மூக் மாவட்டம் வான்வழித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இதில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன. அத்துடன் 25 வீடுகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. சூடான் இராணுவம் மற்றும் துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கு இடையிலான சண்டையானது மூன்றுமாதங்களாக நீடித்து வருகிறது. இந்த உள்நாட்டு மோதல் காரணமாக இதுவரை 2.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

ஐரோப்பா

இங்கிலாந்தில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக களத்தில் இறங்கிய ரிஷி சுனக் : 105 பேர் கைது!

  • June 17, 2023
  • 0 Comments

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சட்டவிரோத குடியேறிகள் குறித்து மேற்கொண்ட சோதனையில் 105 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். ரிஷி சுனக் இந்த வார தொடக்கத்தில், உள்துறை அலுவலக அமலாக்க அதிகாரிகளுடன் இணைந்து சட்டவிரோத குடியேறிகள் தொடர்பான சோதனையை மேற்கொண்டார். இந்த நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக இங்கிலாந்தில் தங்கியிருந்த சுமார் 20 நாடுகளைச் சேர்ந்த 105 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் ரிஷி சுனக் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தனது அரசாங்கத்தின் முதன்மையான வாக்குறுதியான […]

ஐரோப்பா

சுவிட்சர்லாந்தில் வெப்பக் காற்று பலூன் தீப்பிடித்ததில் 7 பேர் காயம்!

  • June 17, 2023
  • 0 Comments

மத்திய சுவிட்சர்லாந்தில் வெப்பக் காற்று பலூன் ஒன்று தீப்பிடித்தில் ஏழு பேர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூரிச்சின் தென்மேற்கே உள்ள ஹூனென்பெர்க் கிராமத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பலூனில்  28 முதல் 62 வயதுக்குட்பட்ட நான்கு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் என ஏழுபேர் பயணித்துள்ளனர். இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் பலத்த காயம் அடைந்துள்ளதுடன், மற்ற நான்கு பயணிகளும் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் தனியார் நபர்களால் மருத்துவமனைக்கு கொண்டு […]

ஆசியா

பாதுகாப்பு உத்திகளை மறுபரிசீலனை செய்யும் வடகொரியா!

  • June 17, 2023
  • 0 Comments

பாதுகாப்பு உத்திகளை மறுபரிசீலனை செய்வது மற்றும் பொருளாதார சவால்கள் குறித்து வடகொரியாவில் முக்கிய அரசியல் மாநாடு நடைபெற்றுள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 2023 முதல் பாதியில் நாட்டின் பொருளாதார பிரச்சாரங்களை மதிப்பாய்வு செய்துள்ளதுடன்,  “மாற்றப்பட்ட சர்வதேச சூழ்நிலையை சமாளிக்க” வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு உத்திகள் பற்றி விவாதித்துள்ளனர். அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா தென் கொரியாவிற்கு அனுப்பியதால் ஏற்பட்ட பதற்ற நிலைகளை அடுத்து இந்த மாநாடு […]

இந்தியா

வட இந்தியாவில் நிலவும் கடும் வெப்பம் : 34 பேர் உயிரிழப்பு!

  • June 17, 2023
  • 0 Comments

வட இந்தியாவில் நிலவுகின்ற கடும் வெப்பம் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் பெரும் பகுதியில் நிலவுகின்ற வெப்பத்தின் காரணமாக 60 வயதிற்கு மேற்பட்ட மக்கள் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என வைத்தியவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், கடுமையான உடல்நலப் பாதிப்பு கொண்டவர்கள் எனவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உத்தரபிரதேச மாநில தலைநகரான லக்னோவிற்கு தென்கிழக்கே 300 கிலோமீட்டர் (200 மைல்) தொலைவில் உள்ள பல்லியா மாவட்டத்தில் […]

ஐரோப்பா

கெர்சன் பிராந்தியத்தில் ஷெல் தாக்குதல் : 23 பேர் காயம்!

  • June 17, 2023
  • 0 Comments

உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் ரஷ்யா மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 23 போர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம தெரிவித்துள்ளது. “பொது மக்களுக்கு எதிராக பீரங்கி பயன்படுத்தப்பட்டது,”உள்துறை அமைச்சகம் டெலிகிராமில் இட்டுள்ள பதிவில் தெரிவிதக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்களில்,   15,11 வயதுடை இரு ஆண்குழந்தைகளும்,   16 வயது சிறுமியும், அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பா

லண்டனில் வேலை தருவதாக கூறி அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியர்

  • June 17, 2023
  • 0 Comments

வடக்கு லண்டனில் மசாஜ் செய்யும் தொழிலை முன்னெடுத்துவரும் இந்தியர் ஒருவர் மீது நான்கு பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. தமது மசாஜ் பார்லர்கள் ஒன்றில் வேலை தருவதாக கூறி நான்கு பெண்களை துஸ்பிரயோகம் செய்த வழக்கிலேயே குறித்த நபர் சிக்கியுள்ளார். தற்போது 50 வயதாகும் ரகு சிங்கமனேனி என்பவர் Luton பகுதியில் வசித்து வருபவர்.இவரே வேலை தருவதாக கூறி நான்கு பெண்களிடம் அத்துமீறியுள்ளார். இவர் இரண்டு மசாஜ் பார்லர்களை இருவேறு பகுதிகளில் […]

இலங்கை

மீண்டும் அதிகரித்துள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை

  • June 17, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறக்குமதியாளர்கள் விலைகளை உயா்த்தியுள்ளதால் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பருப்பு ஒரு ஒலோ கிராமின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கும் என வியாபாரிகள் தொிவிக்கின்றனா். இதேவேளை டொலரின் பெறுமதி அதிகரிப்பால் பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

You cannot copy content of this page

Skip to content