ஐரோப்பா

உக்ரைனுக்கு வாகனங்களை வழங்கும் நோர்வே!

  • September 19, 2023
  • 0 Comments

நோர்வே இராணுவம் உக்ரைனுக்கு 50 சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை நன்கொடையாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. “சாலைகள் இல்லாத பகுதிகளுக்கு பொருட்களை கொண்டுச் செல்ல இந்த வாகனங்கள் முக்கியமானவையாக கருதப்படுகிறது. இந்நிலையில் குறித்த வாகனங்கள் உக்ரைனுக்கு பேருதவியாக இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.

இலங்கை

தியாகி திலீபனின் ஊர்தி மீதான தாக்குதல் திட்டமிட்ட அரச பயங்கரவாதத்தின் கோரம்: அருட்தந்தை மா.சத்திவேல்

  • September 19, 2023
  • 0 Comments

இலங்கையில் தமிழர்கள் அகிம்சை வழியிலும் வாழ முடியாது என்பதை சர்வதேசமும் மனித பேரவையும் உணர்ந்திருக்கும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (19.09.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”தியாகி திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய மக்கள் அஞ்சலி ஊர்தியையும் அதில் பயணித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி நடராஜா காண்டீபன் உட்பட […]

இலங்கை

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு கொழும்பில் தடை..

  • September 19, 2023
  • 0 Comments

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை கொழும்பு நகரத்தில் பல பகுதிகளில் நடாத்த முடியாதவாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்குமுகமாக, இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (19) கொழும்பு கோட்டை, கொம்பனித்தீவு மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திலீபனின் நினைவேந்தலை பல அமைப்புக்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பொழுதுபோக்கு

மகளின் உடலை கண்டு கதறிய விஜய் ஆண்டனி… கண்ணீருடன் வரும் சோகம்

  • September 19, 2023
  • 0 Comments

விஜய் ஆண்டனி மகள் மீராவின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 16 வயதே ஆகும் மீராவின் இந்த விபரீத முடிவு பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மீராவின் மறைவால் நடிகர் விஜய் ஆண்டனியும், அவரது குடும்பத்தினரும் மனமுடைந்து போகினர். அவர்களுக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் நேரிலும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். விஜய் ஆண்டனியின் […]

ஆசியா

கொலைகார ட்ரோன்கள்- மத்தியகிழக்கு நாடுகளுக்கு விற்பனை செய்த சீனா!

  • September 19, 2023
  • 0 Comments

தன்னிச்சையாக முடிவெடுக்கும் கொலைகார ரோபோக்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு சீனா விற்பனை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் இந்த கொலைகார ட்ரோன்களை உலகின் பல நாடுகள் மற்றும் ராணுவங்கள் வாங்கிக் குவிப்பதாக கூறப்படுகிறது. போர்க்களத்தில் இந்த ரோபோக்களை களமிறக்குவது, உண்மையில் கொடூரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றே அஞ்சப்படுகிறது. AI தொழில்நுட்பத்தில் செயல்படும் இந்த கொலைகார ரோபோக்கள் அல்லது ட்ரோன்களை மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியா முதல் பர்மா வரையிலும், ஈராக்கு முதல் எத்தியோப்பியா வரையிலும் […]

உலகம்

அமெரிக்காவின் அதி நவீன ரக போர் விமானம் மாயம்!

  • September 19, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் அதி நவீன போர் விமானம் ஒன்று மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 80 மில்லியன் டொலர் மதிப்பிலான எஃப் 35 ரக விமானம் ஒன்றே இவ்வாறு மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கரோலினா கடல் பகுதியில் குறித்த விமானம் பறந்துகொண்டிருந்த போது விமானத்திற்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் குறித்த விமானத்தின் விமானி பரசூட்டின் உதவியுடன் குதித்து தப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் விமானம் விபத்துகுள்ளானதா, என்பது தொடர்பில் தகவல்கள் […]

இலங்கை

திருகோணமலையில் நடுவீதியில் அமர்ந்து மாணவர்கள் போராட்டம் : விரைந்த அதிகாரிகள்

  • September 19, 2023
  • 0 Comments

திருகோணமலை- கிண்ணியா வலய கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட காக்காமுனை அப்துல் ஹமீது வித்தியாலய மாணவர்கள் பெற்றோர்கள் இணைந்து பாடசாலை மைதானத்தை பெற்றுத்தருமாறு கோரி காக்காமுனை றஹ்மானியா பள்ளிவாசலுக்கு முன்னாலுள்ள சந்தியில் இன்று (19) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலைக்கு சொந்தமான காணியை தனி நபரொருவர் அத்துமீறி தன்னுடைய காணி என எல்லையிடுவதைக் கண்டித்து இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 25 வருட காலமாக மைதானமாக பயன்படுத்தி வந்த குறித்த இடத்தை தனி நபரொருவர் தன்னுடைய காணி என […]

இலங்கை

வெளிநாடு ஒன்றில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள இலங்கையர்கள்!

  • September 19, 2023
  • 0 Comments

நீண்ட காலமாக விசா இன்றி குவைத்தில் தங்கியிருந்த 31 பேர் இன்று (19.09) நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL-230 விமானம் மூலம் குவைத்தில் இருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் 03 ஆண்களும் 28 பெண்களும் உள்ளடங்குவதுடன். அவர்களில் பெரும்பாலானோர்,  அனுராதபுரம், குருநாகல், காலி, மாத்தரை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களாவர். மேலும் சுமார் 2,000 பேர் இலங்கைக்குத் திரும்புவதற்காக குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்துள்ளதாகவும்,  அவர்கள் எதிர்காலத்தில் […]

பொழுதுபோக்கு

மார்க் ஆண்டனி 4 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

  • September 19, 2023
  • 0 Comments

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் விநாயாகர் சதுர்த்தி விடுமுறையுடன் அதிகபட்ச வசூல் வேட்டையை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் நாளே தமிழ்நாட்டில் 8 கோடி ரூபாய் வசூலையும் உலகளவில் 12 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டிய மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் முதல் ஏகப்பட்ட விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை வழங்க ஆண்டனி திரைப்படம் மாஸ் காட்டி வருகிறது. கடைசி வரை நடிப்பு அரக்கனுக்கு டஃப் கொடுக்க கடும் உழைப்பை விஷால் […]

இலங்கை

வத்தளை -கடற்கரையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு!

  • September 19, 2023
  • 0 Comments

வத்தளை, பள்ளியாவத்தை கடற்கரையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் ஒன்று கடற்கரையில் கா ணப்படுவதாக நேற்று (18) மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் வத்தளை பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. உயிரிழந்தவர் 65 முதல் 70 வயதுக்கு உட்பட்ட, 5 அடி 5 அங்குல உயரமும், மெலிதான உடலைக் கொண்டவர் என பொலிஸஸார் தெரிவித்தனர்.