இலங்கை

இலங்கையின் பணவீக்கத்தின் தற்போதைய நிலை!

  • September 21, 2023
  • 0 Comments

இலங்கையில் பணவீக்கம் மேலும் குறைந்துள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 2.1% ஆக உள்ளது. ஜூலை மாத பணவீக்கம் 4.6 சதவீதமாக பதிவாகியுள்ளது. அதேசமயம், ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பணவீக்கம் -5.4% ஆகக் காணப்படுகிறது. ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை -2.5% ஆக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியுடன் அதிகரித்த பணவீக்கம், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்தது. கடந்த ஜனவரி மாதம் பணவீக்கம் […]

தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வட இந்தியர்களுக்கு நேர்ந்த கதி!

  • September 21, 2023
  • 0 Comments

தமிழக மாவட்டம், கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வட இந்தியர்கள், வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி அருகே குருபரப்பள்ளி பகுதியில் டெல்டா எலக்ட்ரானிக் தனியார் நிறுவனத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு கொல்கத்தாவை சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அங்கு வேலை செய்யும் 150 தொழிலாளர்களுக்கு ஆனந்தன் என்பவர் நேற்று கிருஷ்ணகிரி கே தியேட்டர் சாலையில் சேட்டு என்கிற சென்னயன் என்பவரது தனியார் உணவகத்தில் சிக்கன் ரைஸை […]

இலங்கை

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ! மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

  • September 21, 2023
  • 0 Comments

உலக சமாதான நாளான இன்றைய தினம் வியாழக்கிழமை(21) மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை இலங்கை அரசு ஒப்புக் கொண்டு நீண்ட காலங்களாகியும் அவற்றை உரியவாறு நடைமுறைப்படுத்தவில்லை. எனவே உண்மையைக் கண்டறிதல்,நீதி மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் மிகுந்த கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பதுடன், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று […]

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளில் மைத்திரியும் ஒருவர் – சரத் பொன்சேக்கா!

  • September 21, 2023
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டு பிரதான சூத்திரதாரிகளில் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என முன்னாள் இராணுவதளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். . உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (21.09) இடம்பெற்ற விவாத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதனையடுத்து கருத்து வெளியிட்ட மைத்திரிபால சிறிசேன முன்னாள் இராணுவதளபதியால் தனது இராணுவதலைமையகத்தை கூட பாதுகாக்க முடியவில்லை எனவும்,  சரத்பொன்சேகா தாக்கப்பட்டவேளை அவரது […]

இலங்கை

யாழில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள்

  • September 21, 2023
  • 0 Comments

யாழ்.மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் புத்திஜீவிகள் வெளியேறுவதை தடுப்பதிலும், அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு உள்ள தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதிலும்,தரமான மருந்துகள் அரச வைத்தியசாலைகளில் இருப்பதை உறுதிப்படுத்துவதிலும் அரசாங்கத்தின் மெத்தன போக்கை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்தினர். யாழ். போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் 12 மணி முதல் 1 மணி வரையில் போராட்டம் நடைபெற்றது.

இந்தியா

அதிகரிக்கும் இராஜதந்திர பிரச்சினைகள்: கனேடியர்களுக்கு விசா சேவைகளை நிறுத்திய இந்தியா

  • September 21, 2023
  • 0 Comments

மறு அறிவிப்பு வரும் வரை கனடா நாட்டினருக்கு விசா வழங்குவது இன்று (செப்.21) முதல் நிறுத்தம் செய்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தின் விசா வசதி இணையதளத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கும் “இந்திய அரசாங்கத்தின் முகவர்களுக்கும்” இடையே “சாத்தியமான தொடர்புகள்” இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை

தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது!

  • September 21, 2023
  • 0 Comments

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் இன்று (21.09) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், ஒருகோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐந்தரை  தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமாக கொண்டுவந்த நிலையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலி பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் கட்டுநாயக்கா விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொழுதுபோக்கு

என்ன கன்றாவிடா இது? எமி ஜாக்சனை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.. வைரலாகும் படங்கள்

  • September 21, 2023
  • 0 Comments

தமிழில் மதராசபட்டினம், தெறி, ஐ போன்ற படங்களில் நடித்து பேமஸ் ஆன நடிகை எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர். ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசபட்டிணம் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். அப்படத்தில் வெளிநாட்டு பெண் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொறுந்தி இருந்தார் எமி. மதராசப்பட்டிணம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் கோலிவுட்டில் எமி ஜாக்சனுக்கு பட வாய்ப்புகள் குவியத்தொடங்கின. அதன்படி விக்ரம் உடன் தாண்டவம் மற்றும் ஐ, […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு இனி எந்த உதவியும் வழங்கப்போவதில்லை என அறிவித்துள்ள போலந்து

  • September 21, 2023
  • 0 Comments

தானிய இறக்குமதி தொடர்பில் ஏற்பட்ட கருத்து மோதல், தற்போது உக்ரைனுக்கு இனி ஆயுத உதவிகள் எதுவும் செய்வதாக இல்லை என்ற முடிவுக்கு போலந்து நாட்டை தள்ளியுள்ளது. இனி தங்களுக்கான நவீன ஆயுதங்களை உருவாக்க தனி கவனம் செலுத்த இருப்பதாகவும் போலந்து பிரதமர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ள கருத்துகள் ஏற்படுடையதாக இல்லை என குறிப்பிட்டு, செவ்வாய்க்கிழமை தங்கள் நாட்டுக்கான உக்ரைன் தூதரை அழைத்து போலந்து கடிந்து கொண்டது. ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், சில […]

இலங்கை

சரணடைந்தவர்களையே கொக்குத்தொடுவாயில் குழி தோண்டி புதைத்திருக்கிறார்கள்: வினோ எம்பி

  • September 21, 2023
  • 0 Comments

சரணடைந்தவர்களை படுமோசமாக கொலை செய்துவிட்டு குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில் காணக்கூடியதாக இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய் மனித மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்று சர்வதேச சமாதான தினம் இந்த தினத்தில் இன்று போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு […]