இந்தியா

 நாகபட்டினத்திற்கும் – காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்!

  • September 21, 2023
  • 0 Comments

நாகபட்டினத்திற்கும் – காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை   எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என  கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு கடல்சார் சபை மற்றும் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ஆகியவை இந்த படகுச் சேவையை ஆரம்பிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் துறைமுக கால்வாய் தூர்வாரப்பட்டு பயணிகள் முனையம் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு படகும் சுமார் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பா

சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய தடை

  • September 21, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்து நாட்டில் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்காக்கள் அணிய தடை விதித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து பொதுவெளிகளில் பெண்கள், தங்கள் முகத்தை மறைக்க அணியும் புர்கா போன்ற உடைகளுக்கு தடை விதிக்கும், சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டம் சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்தில் 151-29 என்ற அடிப்படையில் நிறைவேறியது, ஸ்விட்சர்லாந்து நாட்டில் வசித்து வரும் இஸ்லாமியர்கள் மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த சில பெண்கள் நிக்காப் எனும் முகத்தை மறைக்கும் துணிகள் மற்றும் புர்காக்களை […]

இலங்கை

கோழி இறைச்சியின் விலையை குறைக்க தீர்மானம்!

  • September 21, 2023
  • 0 Comments

கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்க கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கத்திற்கும் வர்த்தக அமைச்சர்  நளின் பெர்னாண்டோவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியை 1150 ரூபாவிற்கு விற்பனை செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளது.

இலங்கை

உள்ளுராட்சி சபை தேர்தல் : வேட்பு மனுக்களை இரத்து செய்ய தீர்மானம்!

  • September 21, 2023
  • 0 Comments

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக் குழு ஏகமனதாக இணக்கம் தெரிவித்துள்ளது. அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு கூட்டம் இன்று (21.09) நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்த வேட்பாளர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையால் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தென் அமெரிக்கா

அமேசானில் 10 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக வறண்டு காணப்படும் நதிகள்

  • September 21, 2023
  • 0 Comments

பிரேசிலின் அமேசான் பகுதிகளில் நதியோரம் வசிப்பவர்களுக்கு வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. அமேசான் காடுகளின் வழியாக நெடுந்தூரம் ஓடும் ஆறுகளில் கடந்த 10 ஆண்டில் இரண்டாவது முறையாக வறட்சி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோலிமோஸ் பிரமாண்ட நதி வறண்டு கிடப்பதால் மக்கள் நடந்து செல்கின்றனர். உள்ளூரில் உள்ள பள்ளிகளுக்கு ஆறுகளை கடந்து சென்ற ஆசிரியர்கள் தற்போது மலைப்பாங்கான பகுதிகள் வழியாக தங்களது பணிகளுக்கு செல்கின்றனர்.

பொழுதுபோக்கு

அஜீத்க்கு வில்லனாக மாறும் தமிழ் பிக்பாஸ் வெற்றியாளர்? எந்த படத்தில் தெரியுமா!

  • September 21, 2023
  • 0 Comments

அஜித் குமாரின் புதிய படமான ‘விடாமுயற்சி’ பல்வேறு காரணங்களால் எதிர்பாராத தாமதத்தை சந்தித்தது, ஆனால் இப்போது மீண்டும் படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்க உள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மற்ற இடங்களிலும் பின்னர் அஜர்பைஜானிலும் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கியுள்ள ‘விடாமுயற்சி’ படத்திற்கு அனிருத் இசையமைக்க, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஆரம்பத்தில் அர்ஜுன் தாஸ் படத்தில் வில்லன் காதபாத்திரத்திற்காக அணுகப்பட்டார். திகதி மோதல்கள் காரணமாக அவருக்குப் […]

பொழுதுபோக்கு

தீயாக பரவிய திருமண செய்தி… த்ரிஷா கொடுத்த பதிலடி

  • September 21, 2023
  • 0 Comments

நடிகை த்ரிஷா மலையாள தயாரிப்பாளரை விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக திடீரென வதந்தி ஒன்று தேசியளவில் பரவிய நிலையில், அதிரடியாக அதுகுறித்து ட்வீட் போட்டு வெளுத்து வாங்கி உள்ளார் நடிகை த்ரிஷா. 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வரும் த்ரிஷா விஜய்யின் லியோ படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார். அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் த்ரிஷா தான் ஹீரோயின் எனக் கூறுகின்றனர். மேலும், மலையாளத்தில் மோகன்லால், டொவினோ தாமஸ் உள்ளிட்ட டாப் […]

வட அமெரிக்கா

ஹேக்கர்கள் செய்த வேலையால் அதிர்ச்சியில் டொனால்ட் ட்ரம்ப்…!

  • September 21, 2023
  • 0 Comments

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் குறித்து சமூக வலைத்தளத்தில் பரவிய தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவரது மகன் டான் ட்ரம்பின் சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தின் அக்கவுண்ட்டை ஹேக்கர்கள் முடக்கியதுடன், அடுத்தடுத்து புண்படுத்தும் வகையிலான கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பதிவில், டொனால்ட் ட்ரம்ப் இறந்துவிட்டார் என குறிப்பிடப்பட்டிருந்தது. “எனது தந்தை டொனால்ட் ட்ரம்ப் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் 2024ல் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்” என அவரது மகன் கூறுவதுபோல […]

இலங்கை

ரத்கம கொலை சம்பவம் ; இரு சந்தேக நபர்கள் கைது

  • September 21, 2023
  • 0 Comments

27 வயதுடைய இளைஞரின் கை, கால்களைக் கட்டி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபரின் சடலம் கடந்த 18ஆம் திகதி ரத்கம, கிரிமதிய சுடுகாட்டுக்கு பின்னால் உள்ள பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டது.குறித்த நபர் கடந்த 17ஆம் திகதி மாலை நெகிவத்தை கட்டுடம்பே பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நண்பர்கள் குழுவுடன் மது அருந்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ரத்கம முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் […]

இலங்கை

இலங்கையின் பணவீக்கத்தின் தற்போதைய நிலை!

  • September 21, 2023
  • 0 Comments

இலங்கையில் பணவீக்கம் மேலும் குறைந்துள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 2.1% ஆக உள்ளது. ஜூலை மாத பணவீக்கம் 4.6 சதவீதமாக பதிவாகியுள்ளது. அதேசமயம், ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பணவீக்கம் -5.4% ஆகக் காணப்படுகிறது. ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை -2.5% ஆக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியுடன் அதிகரித்த பணவீக்கம், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்தது. கடந்த ஜனவரி மாதம் பணவீக்கம் […]