ஆசியா

ஆப்கானிஸ்தானில் பொதுவெளியில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை!

  • June 20, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு இரண்டாவது முறையாக பொதுவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மசூதியின் மைதானத்தில் வைத்து குற்றவாளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “லாக்மான் மாகாணத்தின் மையமான சுல்தான் காசி பாபா நகரில் அவர் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டார், எனவும் அவரின் கொடுமையான மரணம் மற்றவர்களுக்கு பாடமாக அமையும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

பொரிஸ் ஜோன்சனுக்கு எதிராக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

  • June 20, 2023
  • 0 Comments

பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு எதிரான பாராளுமன்ற விசாரணைக்குழுவின் அறிக்கைக்கு ஆதரவாக ஆதரவாக அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இதன்மூலம்  பாராளுமன்ற வளாகத்துக்குள் பிரவேசிப்பதற்கு முன்னாள் எம்.பிகளுக்கு வழங்கப்படும் அனுமதி பொரிஸ்  ஜோன்சனுக்கு மறுக்கப்பட்டுள்ளது. பிரதமராக பொரிஸ் ஜோன்சன் பதவி வகித்தபோது கொவிட்19 பரவல் தடுப்பு விதிகளை மீறி கன்சர்வேட்டி கட்சி வளாகத்தில், ஊழியர்களுக்கு விருந்து வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது சம்பந்தமான வீடியோக்களும் அண்மையில் வெளியாகியது. இவ்விடயம் தொடர்பாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற குழுவானது, […]

செய்தி

இறக்குமதி தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்க நடவடிக்கை!

  • June 20, 2023
  • 0 Comments

இறக்குமதி தொடர்பான முழுமையான அறிக்கையை இம்மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மைத்தினால் நேற்று (19.06) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்படி கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  “இறக்குமதிக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்படும் போது ரூபாவின் பெறுமதியில் தளம்பல் நிலைமை ஏற்படும். எனவே ரூபாவின் பெறுமதியை தொடர்ந்தும் சிறந்த மட்டத்தில் பேணுவதற்காக இறக்குமதி தளர்வுகள் மேற்கொள்ளப்படும் அதே வேளை […]

இலங்கை

விவாதத்திற்கு வரும் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்!

  • June 20, 2023
  • 0 Comments

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டு மீதான விவாதம் நாளை (21) நடைபெறவுள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை கூடியநிலையில், விவாதத்திற்கான நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி நாளய தினம் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் நடைபெறவுள்ளது. நாளை மறுதினம் வியாழக்கிமை 22 ஆம் திகதி  வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது ஜூன் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அனுதாபப் பிரேரணைக்காக […]

இந்தியா

கேதார்நாத் கோவில் சிவலிங்கம் மீது ரூபாய் நோட்டுகளை விசிறி எறிந்த பெண்

  • June 20, 2023
  • 0 Comments

இந்தியாவில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலில் உள்ள சிவலிங்கம் மீது ஒரு பெண் ரூபாய் நோட்டுகளை தூவுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோயில் நிர்வாகம் சார்பில் பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டம் கேதார்நாத்தில் புகழ்பெற்ற சிவன் கோயில் உள்ளது. கேதார்நாத் சிவன் கோயில் ஏப்ரல் முதல் 6 மாதங்களுக்கு மட்டுமே திறந்திருக்கும். அந்த வகையில் இப்போது கோயில் திறந்திருப்பதால் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். […]

இலங்கை

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிக்க நடவடிக்கை!

  • June 20, 2023
  • 0 Comments

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து,  புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதனைய புனரமைப்பதற்காக  168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள சிறிய பயணிகள் முனையத்தில் நிலவும் இடப்பற்றாக்குறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதே இதன் நோக்கம் என துறைமுகங்கள்,  கப்பல்துறை மற்றும் […]

ஐரோப்பா

விபரீத முடிவை எடுத்த பிரபல வைத்தியர் … காரணமாயமைந்த ஆன்டிபயாடிக் சிகிச்சை

  • June 20, 2023
  • 0 Comments

இதயவியல் நிபுணராக பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது தற்கொலைக்கான காரணம் திகிலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. உலகில் முதன்முதலாக பெனிசிலின் என்னும் ஆன்டிபயாடிக் கண்டுபிடிக்கப்பட்டபோது, அது ஏராளமானோரின் உயிரைக் காப்பாற்றியது.காலப்போக்கில் புதிது புதிதாக பல ஆன்டிபயாடிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஆன்டிபயாடிக்குகளைப் பொருத்தவரை, அவை உடலுக்குள் சென்று, உடலில் நோயை உண்டாக்கும் நோய்க்கிருமிகளை, குறிப்பாக பாக்டீரியா என்னும் நோய்க்கிருமிகளைக் கொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. அப்படி அவை நோய்க்கிருமிகளைக் கொல்லும் அதே நேரத்தில், […]

இலங்கை

ஏழு பயணங்கள் – 50 மில்லியன் செலவு : இலங்கை அமைச்சரின் வெளிநாட்டு பயண செலவுகள்!

  • June 20, 2023
  • 0 Comments

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஏழு வெளிநாட்டு பயணங்களுக்காக 50 மில்லியன் ரூபாயை செலவிடுவதாக செய்தி வெளியாகிய நிலையில், இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ருவிட்டரில் விளக்கமளித்துள்ள அலிசப்ரி, இந்த தகவல் முற்றிலும் தவறானது என கடுமையாக சாடியுள்ளார். குறித்த தொகையானது, 5 தேசிய பிரதிநிதிகளின் பயணத்திற்காக செலவிடப்பட்ட மொத்த தொகை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. பொதுச் சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில், இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கம், தென்கிழக்கு ஆசிய […]

மத்திய கிழக்கு

நாய் வளர்ப்பிற்கு தடைவிதித்துள்ள எகிப்து ; கவலையில் உரிமையாளர்கள்

  • June 20, 2023
  • 0 Comments

எகிப்து அரசாங்கம் டாபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர் போன்ற நாய்களை வளர்க்க தடை விதித்துள்ளமை நாய் வளர்ப்பவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தில் கடந்த ஏப்ரல் மாதம், அண்டை வீட்டுக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர், அவர்கள் வளர்த்த ராட்வீலர் கடித்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இச்சம்பவம் எகிப்து நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து ஆபத்தானதாக கருத்தப்பட்ட 16 நாய் இனங்களை வளர்க்க எகிப்து அரசாங்கம் தடை விதித்துள்ளது. குறித்த இன நாய்களை வைத்திருப்பவர்கள் […]

ஆஸ்திரேலியா

நியூசிலாந்தில் சீன உணவகத்தில் கோடாரி தாக்குதல் ;4 பேர் படுகாயம்

  • June 20, 2023
  • 0 Comments

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் அடுத்தடுத்து 3 சீன உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்களில் நேற்று இரவு 9 மணியளவில் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த உணவகத்திற்கு கோடாரியுடன் வந்த நபர் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். ஒவ்வொரு உணவகமாக சென்று அந்த நபர் தாக்குதல் நடத்தினார். கோடாரியால் நடத்தப்பட்ட தாக்குதலில் உணவக வாடிக்கையாளர்கள் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார் கோடாரி […]

You cannot copy content of this page

Skip to content