இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவதற்கு மக்கள் ஆயத்தமாகி கொண்டிருக்கின்றனர்: ராமலிங்கம் சந்திரசேகரன்

  • September 23, 2023
  • 0 Comments

மக்கள் ஆணையில்லாத ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டை தாரை வார்க்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன்.தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”மக்களை மேலும் பொருளாதார ரீதியிலும் விலை ஏற்ற ம் போன்ற செயற்பாடுகள் மூலம் பாதிப்புக்கு உள்ளாக்கும் ஒரு ஜனாதிபதியாக காணப்படுகின்றார். மக்கள் வெகு சீக்கிரம் இவரை வீட்டுக்கு அனுப்பு நடவடிக்கையில் ஈடுபட […]

இலங்கை

திருகோணமலையில் கற்பிணித் தாயை தள்ளிவிட்டு தங்க நகை கொள்ளை சம்பவம்!

  • September 23, 2023
  • 0 Comments

திருகோணமலை- உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அன்புவழிபுரம் பகுதியில் கற்பிணித் தாய் ஒருவரை தள்ளிவிட்டு தங்க ஆபரணத்தை அபகரித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கற்பிணி தாயொருவர் (22) மதியநேர உணவு இடைவேளையில் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வருகை தந்தபோது அன்புவழிபுரம் பிரதான வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள் அவரது கழுத்தில் இருந்த தங்க நகைகளை அபகரித்துச் சென்றுள்ளனர். இதன்போது அவரது கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த […]

இலங்கை

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேருந்து: இருவர் படுகாயம்

  • September 23, 2023
  • 0 Comments

திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி தானியகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு கடற்படை உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தானியகம பிரதேசத்தில் கடற்படைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சிகை அலங்கார நிலையம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன் காயம் அடைந்தவர்களில் ஒருவர் கடற்படை தளத்திற்குச் சொந்தமான வைத்தியசாலையிலும், பலத்த காயங்களுக்கு உள்ளான கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் திருகோணமலை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

உலகம்

பெருவில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 08 மம்மிகள் கண்டுப்பிடிப்பு!

  • September 23, 2023
  • 0 Comments

பெருவின் லிமாவில் உள்ள எரிவாயு தொழிலாளர்கள், இந்த வாரம் எட்டு மம்மிகள் மற்றும் பல இன்காவிற்கு முந்தைய கலைப்பொருட்களை நகரத்தின் பண்டைய தெருக்களில் கண்டுப்பிடித்துள்ளனர். பெருவின் தலைநகரில் 10 மில்லியன் மக்களுக்கு இயற்கை எரிவாயு விநியோகிக்கும் நிறுவனமான கலிடாவின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜீசஸ் பஹமொண்டே இது குறித்து கருத்து வெளியிடுகையில்,  “லிமாவின் இழந்த வரலாற்றின் இலைகளை நாங்கள் மீட்டெடுக்கிறோம், அவை தடங்கள் மற்றும் தெருக்களுக்கு அடியில் மறைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார். இதுவரை  1,900 க்கும் மேற்பட்ட தொல்பொருள் […]

இலங்கை

மன்னாரில் தியாக தீபத்துக்கு நினைவேந்தல் நிகழ்வு (photos)

  • September 23, 2023
  • 0 Comments

தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 23.09.2023 (சனிக்கிழமை) மாலை 4 மணியளவில் மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப் படவுள்ளது. மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றி அடையாள உண்ணாவிரத போராட்டமாக அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,கட்சியின் முக்கியஸ்தர்கள், மக்கள் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனுக்கு சுடர் ஏற்றி,மலர் தூவி […]

இலங்கை

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு வலுவடைந்து உயர்ந்த மட்டத்தில் உள்ளது : மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன

  • September 23, 2023
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை தற்போது வலுவடைந்து உயர்ந்த மட்டத்தில் உள்ளதாக கிழக்கு மாகாண இராணுவ கட்டளையதிகாரி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன இன்று தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் பொதுமக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மாத்திரமின்றி வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் முதல் நோக்காகக்கொண்டு செயற்பட்டுவருவதாக அவர் மேலும் கூறினார். தொப்பிகல பகுதியை அண்மித்த ஈரளக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற விசேட வைபவமொன்றில் பிரதம அதிதியாகக்கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார். தொப்பிகல இராணுவ கட்டளையதிகாரி சந்தன […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் சிகரெட் பாவனைக்கு தடை விதிக்க திட்டம்!

  • September 23, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் சிகரெட் பாவனைக்கு தடை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் ரிஷி சுனக்   அடுத்த தலைமுறையினரை பாதுகாப்பதற்காக மேற்படி சிகரெட்டுகளுக்கு தடை விதிப்பது குறித்து  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2030 ஆம் ஆண்டில் புகைப்பிடிக்காதவர்கள் வாழும் தேசமாக பிரித்தானியாவை மாற்றும் வகையில் குறித்த நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக மின்னஞ்சல் மூலம்  ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

பொழுதுபோக்கு

விஜய்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய கேரள ரசிகர்கள்

  • September 23, 2023
  • 0 Comments

வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் நடித்துள்ள லியோ படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் எடிட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் லியோ படத்தின் தெலுங்கு, ஹிந்தி,மலையாளம், கன்னடம் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் சிலர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் குறித்து தவறாக பேசியுள்ளனர். இதனால் கோபம் அடைந்த கேரளா திரையுலக ரசிகர்கள் விஜய்க்கு எதிராக #KeralaBoycottLEO என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்து […]

இலங்கை

மன்னாரில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

  • September 23, 2023
  • 0 Comments

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு பகுதியில் உள்ள புதர் ஒன்றுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு லட்சத்து எழுபதாயிரம் போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கபெற்ற புலனாய்வு தகவலுக்கு அமைய மன்னார் பொலிஸ் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே தாழ்வுபாடு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இரண்டு பொதிகளில் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த போதை […]

இலங்கை

முல்லைத்தீவில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்பு!

  • September 23, 2023
  • 0 Comments

முல்லைத்தீவில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேரங்கண்டல் மங்கை நகர் பகுதியில், குறித்த சடலம் இன்று (23.09) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய உத்தமன் என்பவர் ஆவார். மல்லாவி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.