தமிழ்நாடு

கோவையில் மகாராஷ்டாரா சில்வர் ரீஃபைனர்ஸ் அசோசியேஷன் சார்பாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்

  • September 24, 2023
  • 0 Comments

கோவையில் உள்ள மகாராஷ்டாரா சில்வர் ரீஃபைனர்ஸ் அசோசியேஷன் சார்பாக விநாயகர் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உற்சாகமாக நடைபெற்று வரும் நிலையில், விசர்ஜனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் கணிசமாக வடமாநிலத்தவர் அதிகம் வசித்து வருகின்றனர். கோவையில் உள்ள மகாராஷ்டாரா சில்வர் ரீஃபைனர்ஸ் அசோசியேஷன் சார்பாக விநாயகர் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த நாற்பது வருடமாக […]

இலங்கை

இலங்கையில் முக்கிய அமைச்சுப் பதவிகளில் திடீர் மாற்றம்!

  • September 24, 2023
  • 0 Comments

இலங்கையில் நான்கு அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி  சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரனவை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இரண்டு அல்லது மூன்று அமைச்சரவைப் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சர்களிடமிருந்து சில அமைச்சுக்களை மற்றவர்களுக்கு ஒதுக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இலங்கை

(updated) பல்பொருள் அங்காடியொன்றில் பெண் ஒருவர் மீது கொடூர தாக்குதல் : 7 பேர் கைது

  • September 24, 2023
  • 0 Comments

பெண் வாடிக்கையாளரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் பொரளையில் உள்ள முன்னணி பல்பொருள் அங்காடி விற்பனை நிலையத்தின் அனைத்து ஊழியர்களும் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரு பல்பொருள் அங்காடியின் ஊழியர்கள் ஒரு பெண் வாடிக்கையாளரை கொடூரமாக தாக்குவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து போலீசார் விசாரணைகளை ஆரம்பித்தனர். ஹன்வெல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. எனினும், சம்பவம் பொரளையில் உள்ள விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளதாக பின்னர் தெரியவந்துள்ளது. […]

பொழுதுபோக்கு

லியோ இசை வெளியீடுக்காக காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி செய்தி…

  • September 24, 2023
  • 0 Comments

விஜய்யின் லியோ இசை வெளியீட்டு விழா இந்த மாதம் 30ம் தேதி நடைபெறும் என சொல்லப்படுகிறது. படக்குழு தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், அடுத்தடுத்து புதிய அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, லியோ இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. முக்கியமாக இந்த விழாவில் சினிமா பிரபலங்கள் யாருக்கும் அனுமதி இல்லை என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், ரசிகர்களுக்கும் பெரிதாக அனுமதி இருக்காது என்றே […]

ஐரோப்பா

போலியான ஆயுதங்களை காட்டி மிரட்டிய உக்ரைன்… பின்வாங்கிய ரஷ்ய வீரர்கள்

  • September 24, 2023
  • 0 Comments

ரஷ்யாவுக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டு வரும் உக்ரைன் போலியான ஆயுதங்களைக்காட்டி ரஷ்ய வீரர்களை மிரள வைத்ததாக சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. பழைய மரம்,இரும்பு, டயர்கள் போன்ற பொருட்களில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை ரஷ்யப்படைகள் நிஜமான ஆயிதக்குவியலாக நினைத்து பின்வாங்கின. குறைந்த விலையில் தயாரிக்கப்பட்ட இந்த டம்மி ஆயுதங்கள் உக்ரைன் நாட்டை போரின் பாதிப்புகளில் இருந்து காத்துள்ளன. பல வீர்ர்களின் உயிர்களும் காப்பாற்றப்பட்டுள்ளன தங்கள் உத்தி போரில் கைகொடுத்ததாக உக்ரைன் நாட்டு ராணுவத்தினர்தெரிவித்தனர்.

ஆசியா

பாகிஸ்தான் :3 மாதங்களாக நரக வேதனை…தந்தையை சுட்டு கொன்ற மகள்!

  • September 24, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் நகரில் குஜ்ஜார்புரா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி மீது கொலை குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. அந்த சிறுமி, துப்பாக்கியை பயன்படுத்தி அவருடைய தந்தையை சுட்டு கொன்றுள்ளார். இதுபற்றி விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி சொஹைல் கஸ்மி கூறும்போது, அந்த சிறுமி 3 மாதங்களாக நரக வேதனையை அனுபவித்து உள்ளார். கடந்த 3 மாதங்களாக சிறுமியை, அவருடைய தந்தை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், தந்தையை கொலை செய்வது என முடிவு […]

உலகம்

நைஜீரியாவில் எண்ணெய் சேகரிப்பு நிலையத்தில் தீப்பரவல்: இரு குழந்தைகள் உட்பட 34 பேர் பலி!

  • September 24, 2023
  • 0 Comments

நைஜீரியாவின் எல்லைக்கு அருகில் உள்ள பெனினில் எண்ணெய் சேகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளனர். “துரதிர்ஷ்டவசமாக இரண்டு குழந்தைகள் உட்பட 34 பேர் இறந்துள்ளனர். மேலும் 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் சேகரிப்பு நிலையத்தை சூழவுள்ள பிரதேசங்களில் பல தீப்பிழம்புகள் வெடித்ததாகவும் அதனை தொடர்ந்து கரும்புகை அதிக அளவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய ரீதியாக நைஜீரியா அதிக எண்ணெய் […]

இலங்கை

பணத்திற்காக இளம் தம்பதியினர் செய்த முகம்சுழிக்கும் செயல்!

  • September 24, 2023
  • 0 Comments

பணத்திற்காக ஆன்லைனில் பாலியல் வீடியோக்களை விநியோகித்த தம்பதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹொரண கும்புக பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞனும் 23 வயதுடைய யுவதியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் சந்தேக நபர் இளம் தலைமுறையினரை இலக்கு வைத்து இந்த பாலியல் வீடியோக்களை இணையத்தில் விநியோகித்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் கூறுகிறது.

இலங்கை

கணவனை கொலை செய்த மனைவி: வெளியான அதிர்ச்சி தகவல்

  • September 24, 2023
  • 0 Comments

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஜிதபுர பகுதியில் நேற்று (23) இரவு கொலைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மனைவி கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. மகஸ்தோட்ட, விஜிதபுர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இறந்தவர் வீட்டில் குடிபோதையில் இருந்ததாகவும், பணி முடிந்து இரவு மனைவி வீடு திரும்பியதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அங்கு இறந்தவர் தனது […]

இலங்கை

பங்களாதேஷிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடனை வட்டியுடன் செலுத்திய இலங்கை!

  • September 24, 2023
  • 0 Comments

பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகை முழுவதையும்  இலங்கை மீள செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை (21.09) 50 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் தொகையின் கடைசி தவணையாக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களும், வட்டியாக 4.5 மில்லியன் டொலர்களும்  பங்களாதேஷுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி இலங்கை செப்டம்பர் 02, 2023 அன்று 100 மில்லியன் அமெரிக்க டொலர்களையும்,, ஆகஸ்ட் 17, 2023 அன்று 50 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் முன்னதாக […]