பொழுதுபோக்கு

ஜெயம் படம் குறித்து ரவி மோகன் சொன்ன அந்த விஷயம்…என்ன தெரியுமா?

  • June 22, 2025
  • 0 Comments

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ரவி மோகன். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கிய இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனன் நடித்திருந்தார். தற்போது, இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் ‘பராசக்தி’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தன் சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகள் இருப்பினும் ரவி மோகன் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் […]

உலகம்

தொழில்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள AI தொழில்நுட்பம்

  • June 22, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் தொடக்க நிலை வேலைகளுக்கு AI தொழில்நுட்பம் அச்சுறுத்தலாக இருப்பது தெரியவந்துள்ளது. இதன் விளைவாக, பல்கலைக்கழக பட்டதாரிகள் வேலை தேடுவதில் சிரமத்தை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. மனிதர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு மலிவான மாற்றாக AI தொழில்நுட்பம் மாறுவதால் ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் பெரும் எழுச்சியை எதிர்கொள்கின்றனர். வேலை விளம்பரங்கள் அல்லது அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் AI இன் முழு தாக்கமும் இன்னும் பிரதிபலிக்கப்படவில்லை என்றாலும், அது ஏற்கனவே நாட்டின் தொழிலாளர் சந்தையை மறுவடிவமைத்து வருவதாக முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் எச்சரித்துள்ளனர். டேட்டா […]

உலகம் செய்தி

பிரேசிலில் Hot air balloon விபத்து – வானில் இருந்து விழுந்த 8 சடலங்கள்

  • June 22, 2025
  • 0 Comments

பிரேசிலில் நடந்த Hot air balloon விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு பிரேசிலின் சாண்டா கேடரினாவில் நேற்று Hot air balloon தீப்பிடித்து தரையில் விழுந்தது. அப்போது விமானி உட்பட 21 பேர் விமானத்தில் இருந்தனர். உயிர் பிழைத்தவர்களில் 13 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சாண்டா கேடரினாவில் உள்ள தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உயிர் பிழைத்த விமானி, கூடையில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

நிலவைத் தாக்கும் விண்கல்… பூமியின் தகவல்தொடர்புகளுக்கு ஆபத்து

  • June 22, 2025
  • 0 Comments

2032ஆம் ஆண்டில் பூமியை நேரடியாகத் தாக்கும் என அஞ்சப்பட்ட அஸ்டீராய்டு 2024 YR4 என்ற விண்கல், தற்போது வேறு வழியில் ஆபத்தானதாக மாறக் கூடும் என வானியலாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்த விண்கல் நிலவைத் தாக்கக்கூடும். அப்படித் தாக்கினால், அது பெரிய வெடிப்பைத் தூண்டி, அதன் சிதறல் பூமியின் சுற்றுப்பாதையை நோக்கிப் பரவக்கூடும். இந்தச் சிதறல்கள் பூமியின் செயற்கைக்கோள்களை சேதப்படுத்தும் அபாயத்தைக் கொண்டிருக்கலாம். அதாவது, நேரடி மோதல் ஆபத்து இல்லாவிட்டாலும், நிலவு மீதான மோதல், பூமியின் தகவல் தொடர்பு, […]

விளையாட்டு

தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

  • June 22, 2025
  • 0 Comments

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், அபாரமாக சிக்ஸர் விளாசி தனது 7வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 85 ஓவர்களில் 359/3 என்ற வலுவான நிலையில் இருந்தது, இதில் பண்ட் 65 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் ஜெய்ஷ்வால், சுப்மன் கில் இருவரும் சதம் விளாசி இருந்தார்கள். அவர்களை தொடர்ந்து நீங்க மட்டும் […]

மத்திய கிழக்கு

மூன்று அணுஉலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் – உறுதி செய்த ஈரான்

  • June 22, 2025
  • 0 Comments

மூன்று அணுஉலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை மேற்கொண்டதை ஈரானின் பிராந்திய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இஸ்பஹான் நட்டன்ஸ் போர்டோ அணுஉலைகள் தாக்கப்பட்டிருக்கலாம் என பிராந்திய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் என ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. சில மணி நேரங்களுக்கு முன்பு கோம் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டு விரோத இலக்குகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து ஃபோர்டோ அணுசக்தி தளத்தின் ஒரு பகுதி எதிரி விமானப்படைகளால் தாக்கப்பட்டது என்று கோம் பிராந்தியத்தின் நெருக்கடி மேலாண்மை மையத்தின் செய்தித் […]

இலங்கை

இலங்கையில் இன்றும் மழை பெய்யும் அபாயம்

  • June 22, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த […]

இலங்கை

இஸ்ரேலின் நகர்ப்புறங்களில் தாக்குதல்கள் தீவிரம் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

  • June 22, 2025
  • 0 Comments

எதிர்வரும் நாட்களில் இஸ்ரேலின் நகர்ப்புறங்களில் ஏற்படக்கூடிய தாக்குதல்கள் குறித்து இலங்கையர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் நகர்ப்புறங்களில் ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். ஹைஃபா நகரில் ஏவுகணைத் தாக்குதலில் பழமையான மசூதிகளில் ஒன்று தாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். தாக்குதல்களை எதிர்கொள்ளும் நிலையில் நாட்டில் தங்கியிருந்த இரண்டு பேரும் நேற்று இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக தூதர் மேலும் தெரிவித்தார்.

இன்றைய முக்கிய செய்திகள்

3 ஈரானிய அணுச்சக்தி தளங்களை அமெரிக்க இராணுவம் தாக்கியதாக டிரம்ப் அறிவிப்பு

  • June 22, 2025
  • 0 Comments

3 ஈரானிய அணுச்சக்தித் தளங்களை அமெரிக்கா தாக்கியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுவாயுதத் திட்டத்தை முறியடிக்கும் இஸ்ரேலின் முயற்சியில் அமெரிக்கா சேர்ந்துள்ளது. போர்டோ, நட்டான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ராய்ட்டர்ஸின் தகலுக்கமைய, ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களில் B-2 குண்டுவீச்சு விமானங்களும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அமெரிக்காவின் B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் அமெரிக்காவின் குவாம் தீவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவை ஈரான் மீதான அமெரிக்க […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

மொத்த உக்ரைனும் ரஷ்யாவுக்கே சொந்தம் – புட்டின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

  • June 22, 2025
  • 0 Comments

மொத்த உக்ரைனும் தமது நாட்டுக்குச் சொந்தம், இருநாட்டு மக்களும் ஒன்றே என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். அதனை உக்ரைன் மறுத்துள்ளது. அமெரிக்காவின் அமைதி முயற்சிகளை ரஷ்யா புறக்கணிப்பதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவின் எல்லைக் கட்டுப்பாடுகளின் உண்மை நிலவரத்தை உக்ரைன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என புட்டின் வலியுறுத்தினார். ரஷ்யாவின் நிபந்தனைகளை உக்ரைன் தொடர்ந்து மறுத்தால் உக்ரைன் மேலும் எல்லைப்பகுதிகளை இழக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார். சூமி வட்டாரத்தில் ரஷ்யப் படைகளைத் தடுத்துவைத்திருப்பதாய் உக்ரேனிய அதிபர் […]

Skip to content