முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடிய அகழ்வுப் பணி நாளை தொடரும்…!
விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் இன்று பிற்பகல் ஆரம்பமாகிய அகழ்வு பணியானது மாலையுடன் நிறுத்தப்பட்டிருந்தது. இன்றைய அகழ்வு பணிகளில் எந்தவொரு ஆயுதங்களோ, நகைககளோ மீட்கப்படாத நிலையில் நாளை (26) காலை 9 மணியளவில் மீண்டும் இரண்டாவது நாளாக அகழ்வுபணியானது இடம்பெறவுள்ளது. புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நீதிமன்ற அனுமதியை பெற்று இன்று (25) மாலை 2.30 மணிமுதல் மாலை 6 மணி வரை நடைபெற்றிருந்தது. […]