இலங்கை

திறைசேரி உண்டியல்கள் ஏலம்விடும் திகதியில் மாற்றம்! இலங்கை மத்திய வங்கி

ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 10ஆம் திகதி ஏலத்தின் மூலம் வழங்கப்படவுள்ளது. இந்த ஏலத்திற்கான திறைசேரி உண்டியலின் தீர்ப்பனவு திகதி ஜூலை மாதம் 4 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. முன்னதாக இந்த ஏலத்திற்கான தீர்ப்பனவு திகதியாக எதிர்வரும் 30ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த திகதி மாற்றப்பட்டுள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு எதிர்வரும் 30ஆம் திகதி விசேட வங்கி […]

பொழுதுபோக்கு

80களில் கொடி கட்டிப்பறந்த நடிகையுடன் முதன்முறையாக ஜோடி சேர்கின்றார் ரஜினிகாந்த்

  • June 24, 2023
  • 0 Comments

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படமான’ஜெயிலர்’ ஆகஸ்ட் 11ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அவர் இப்போது தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ படத்திற்கு வரையறுக்கப்பட்ட திகதிகளை ஒதுக்கியுள்ளார், மேலும் சில நாட்கள் படப்பிடிப்பிலும் ஈடுபட்டுள்ளார். இரண்டு ஹீரோக்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோருக்கு வழிகாட்டும் மொய்தீன் பாய் என்ற சக்திவாய்ந்த முஸ்லீம் கேரக்டரில் ரஜினி நடிக்கிறார். இதில், பழம்பெரும் நடிகை ஜீவிதா பல […]

ஐரோப்பா

சுவிஸில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு வெளியாகியுள்ள மோசமான செய்தி

  • June 24, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களின் கவலையை அதிகரிக்கும் மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது. பெடரல் வீட்டு வசதி அலுவலகம், ‘reference interest rate’ என்னும் ஒரு வட்டி வீதத்தை நிர்ணயிக்கிறது. அதன் அடிப்படையில்தான் வீடுகளின் உரிமையாளர்கள் வாடகைகளை நிர்ணயிக்கிறார்கள்.ஜூன் மாதம், பெடரல் வீட்டு வசதி அலுவலகம் இந்த வட்டி வீதத்தை 1.25 சதவிகிதத்திலிருந்து 1.5 சதவிகிதமாக உயர்த்தியது. தற்போது, அந்த வட்டி வீதம் மீண்டும் ஒருமுறை உயர்த்தப்பட்டுள்ளது. வட்டி வீதத்தை 1.5 சதவிகிதத்திலிருந்து 1.75 சதவிகிதமாக சுவிஸ் தேசிய […]

இலங்கை

இலங்கையில் சிறுவர்களிடையே வேகமாக பரவும் மர்ம வைரஸ் காய்ச்சல்

  • June 24, 2023
  • 0 Comments

டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் சிறுவர்களிடையே வேகமாக பரவி வருவதாக சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார். குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பாடசாலைகள் அல்லது பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

வட அமெரிக்கா

பிரதம்ர மோடிக்கு அதிபர் ஜோ பைடன் வழங்கிய அன்பு பரிசு

  • June 24, 2023
  • 0 Comments

அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி அதிபர் ஜோ பைடன் டி- சர்ட் ஒன்றை பரிசாக வழங்கினார். அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார்.அதன்படி, நேற்று அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, ஆப்பிள் சிஇஓ டிம் குக், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன், ஏஎம்டி சிஇஓ லிசா சு, நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா […]

ஆசியா

தன் வீட்டு மொட்டை மாடியில் வேன்களை பார்க்கிங் செய்த நபர்!

  • June 24, 2023
  • 0 Comments

தைவான் நாட்டில் குடியிருப்பின் வாசல் பகுதியில் வேனை நிறுத்தியதற்காக ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவேசம் அடைந்த அவர் தன்னுடைய வீட்டின் குறுகலான மொட்டை மாடியில் தனது 2 வேன்களை பார்க்கிங் செய்திருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதைப்பார்த்த பயனர்கள் ஏன் மொட்டை மாடியில் வேன்களை நிறுத்தி உள்ளீர்கள்? எப்படி வேன்களை மொட்டை மாடிக்கு கொண்டு சென்றீர்கள்? என கேள்விகளை எழுப்பி உள்ளனர். அதற்கு தனக்கு அபராதம் விதிக்கப்பட்டதால் விரக்தியில் இவ்வாறு செய்ததாக […]

ஆசியா

சீனாவின் உரிமைக்கோரலுக்கு எதிரான நடவடிக்கை போருக்கான அழைப்பாகவே கருதப்படும் – சி ஜின்பிங்!

  • June 24, 2023
  • 0 Comments

தைவானுடன் போர் மூளும்போது பல சீனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சீன ஜனாதிபதி சி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீனாவின் உரிமைகோரலுக்கு சவாலாக கருதப்படும் எந்தவொரு நடவடிக்கையும் போருக்கான அழைப்புகளாகவே கருதப்படும் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார். சீனக் கொள்கை வகுப்பாளர்கள் தங்கள் பொதுமக்களின்  தேசியவாதத்திற்கும் அது தோற்றுவித்த போர்க்குணத்திற்கும் சலுகைகளை வழங்கக்கூடும் என்று கவலைப்படுகிறார்கள் எனத் தெரிவித்த அவர், மேற்கு நாடுகள் கவலைப்படுவது சரியானது என்று சுட்டிக்காட்டினார். தைவானைப் பொறுத்தவரை, சீன குடிமக்களின் கருத்துகளை “மீற முடியாது” […]

இலங்கை

வெளிநாடுகளில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்பு!

  • June 24, 2023
  • 0 Comments

இலங்கைக்கு 12 இலட்சத்திற்கும் அதிகமான வேலை அனுமதிபத்திரங்கள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். சுமார் 41 நாடுகளில் இருந்து தொழில்வாய்ப்பு பத்திரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், இவ் வருத்தில் 03  இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு திறன் மற்றும் மொழித்திறனை வளர்த்து இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றதென அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

பொழுதுபோக்கு

24 மணி நேரத்திற்குள் மகத்தான சாதனை படைத்தது “நா ரெடி பாடல்”

  • June 24, 2023
  • 0 Comments

LEO first Single பாடலான நா ரெடி பாடல் வெளியாகி 24 மணி நேரம் நிறைவடைந்திருக்கும் சூழலில் பாடல் 16 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருகின்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். மாஸ்டர் கூட்டணியின் அடுத்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு படத்துக்கு எழுந்துள்ளது. இதன் காரணமாக படத்தின் ப்ரீ பிஸ்னெஸ்ஸும் இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் அதிகம் விற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட்டை ரிலீஸுக்கு முன்னதாகவே லியோ எடுத்துவிட்டது […]

உலகம்

லொஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு – 11 பேர் காயம்!

  • June 24, 2023
  • 0 Comments

லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி புறப்பட்ட CX880 என்ற ஜெட்லைனர் , தொழிநுட்ப கோளாறு காரணமாக ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்திற்கே திரும்பியது. இதன்போது அவசர கதவின் வழியாக பயணிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், பயணிகள் வெளியேறும்போது 11 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  லாஸ் ஏஞ்சல்ஸுக்குச் செல்லும் விமானம் CX880, “தொழில்நுட்பக் கோளாறு” காரணமாக புறப்படுவதை நிறுத்தி வாயிலுக்கு திரும்பியது. விமானத்தில் 293 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் இருந்த நிலையில், […]

You cannot copy content of this page

Skip to content