மத்திய கிழக்கு

கென்யா – 100 மாணவிகள் மர்ம நோயால் பாதிப்பு… பள்ளியை இழுத்து மூடியது அரசு!

  • October 5, 2023
  • 0 Comments

கென்யாவின் எரேகியில் செயல்படும் செயின்ட் தெரசா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 100க்கும் மேலான மாணவிகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டதால் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கால்களில் செயலிழப்பை ஏற்படுத்தும் மர்ம நோய் பரவல் காரணமாக அப்பகுதியில் பீதி நிலவி வருகிறது. இந்த நோய்க்கான சரியான காரணம் தெரியவில்லை என்றும், இவை தொடர்பான மருத்துவ ஆய்வில் கென்யா தடுமாறி வருவதாகவும் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட மாணவிகளின் இரத்த மாதிரிகள் கென்யா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு, நோயின் […]

இலங்கை

சிறுமியிடம் பாலியல் சேஷ்டை புரிந்த 83 வயது முதியவர் கைது

  • October 5, 2023
  • 0 Comments

மட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 9 வயது சிறுமியை பாலியல் சேஷ்டை புரிந்த 83 வயதுடைய ஒருவரை புதன்கிழமை (04) கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்திலுள்ள 9 வயது சிறுமி ஒருவர் மீது 83 வயதுடடய முதியவர் பாலியல் சேஷ்டை புரிந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டையடுத்து பொலிஸாரால் குறித்த முதியவரை கைது செய்துள்ளதுடன் சிறுமியை […]

வட அமெரிக்கா

பைடனின் நாய் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டது!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நாய் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஜோ பைடனின் வளர்ப்பு நாய் கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் அதிகாரி ஒருவரை கடித்து காயப்படுத்தியது. அங்கு அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அக்டோபர் மற்றும் ஜனவரி 2022 க்கு இடையில் சுமார் 10 முறை இரகசிய சேவை முகவர்களைக் கடித்தது அல்லது தாக்கியுள்ளது. சட்ட அமலாக்க அதிகாரி ஒருமுறை நாயால் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் […]

பொழுதுபோக்கு

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிரடியாக வெளியானது லியோ ட்ரெய்லர்

  • October 5, 2023
  • 0 Comments

2023-ம் ஆண்டில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் வாரிசு படத்திற்கு பிறகு லியோ என்ற படத்தில் நடித்துள்ளார். மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் இயக்கியுள்ள லியோ படத்தில், சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், த்ரிஷா உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. […]

இலங்கை

மக்களின் வாங்கிய கடனுக்கான வட்டி விகிதங்களை குறைக்க நடவடிக்கை!

  • October 5, 2023
  • 0 Comments

மக்கள் வாங்கிய கடனுக்காக வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதங்கள் மிக விரைவில் குறைக்கப்பட வேண்டும் என மத்திய வங்கி கூறுகிறது. மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (05.10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “வட்டி விகிதங்கள் மிக விரைவில் குறைக்கப்பட வேண்டும். வட்டி விகிதம் எப்படி குறைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கூறியுள்ளோம், இது வங்கிகளில் உள்ள அனைவரையும் பாதிக்கிறது. எங்களுக்குத் தெரியும், வங்கி […]

வட அமெரிக்கா

கனடாவில் 06 பாடசாலைகளுக்கு இணைய வழி அச்சுறுத்தல்

  • October 5, 2023
  • 0 Comments

கனடாவின் பிரம்டனின் ஆறு பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக இணைய வழி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பீல் பிராந்திய பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பிரம்டனின், ஆறு பாடசாலைகளை இலக்கு வைத்து சமூக ஊடகங்களின் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிரம்டன் பாடசாலைகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இலங்கை

பாடசாலை தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாடசாலை தவணை விடுமுறை டிசம்பர் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (05) உயர்தரப் பரீட்சை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்வியோன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் ”உயர்தரப் பரீட்சை ஜனவரியில் நடைபெறுவதால் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது, அதன் பிரகாரம், பாடசாலை தவணை விடுமுறை டிசம்பர் 22ஆம் திகதி முதல் […]

இலங்கை

வைத்தியசாலைக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைப்பு

  • October 5, 2023
  • 0 Comments

அம்பாறை – சம்மாந்துறை மல்வத்தை ஆயுர்வேத மத்திய மருந்தம் அமைந்துள்ள வைத்தியசாலைக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கும் (04) சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், குறித்த வைத்தியசாலைக்கான காணி உறுதிப்பத்திரத்தை கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதரிடம் வழங்கி வைத்தார்.

பொழுதுபோக்கு

லஞ்சம் வாங்கியதாக விஷால் குற்றச்சாட்டு… மூன்று பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு

  • October 5, 2023
  • 0 Comments

மார்க் ஆண்டனி படத்தின் ஹிந்தி பதிப்பிற்கு, சென்சார் சான்றிதழ் வாங்க 7 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக விஷால் சமூக வலைத்தளத்தில் குற்றச்சாட்டுவைத்தார். இது தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், CBI மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நடிகர் விஷால், பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடித்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில், பான் இந்தியா படமாக செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மார்க் […]

இலங்கை

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு இரு தலைவர்கள் நியமனம்!

  • October 5, 2023
  • 0 Comments

இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் புதிய தலைவராக  சாலிய விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் இன்று (05.10) வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக கடமையாற்றும்  தர்ஷன ரத்நாயக்க, இலங்கை பெற்றோலிய களஞ்சிய நிலைய முனையத்தின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதங்களை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கையளித்துள்ளார்.