உலகம்

வாக்னர் கூலிப்படையின் தலைவரை கொல்வதற்கு இரகசிய சதி திட்டம்? உக்ரைன் புலனாய்வு பிரிவு

வாக்னரின் கூலிப்படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினைக் கொல்ல ரஷ்யா சதித் திட்டம் தீட்டியதாக உக்ரைன் உளவுத் துறையின் தலைவர் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். வாக்னர் குழுவினர் புட்டின் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியதை தொடர்ந்தே அவரை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார். வாக்னர் கூலிப்படையின் தலைவரை கொல்லும் பணியை ரஷ்யாவின் புலனாய்வு அமைப்பான விஎஸ்பி பணித்துள்ளதாக உக்ரைன் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், ரஷ்ய புலனாய்வுப் […]

உலகம்

டோங்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • July 2, 2023
  • 0 Comments

டோங்காவில் 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் நகரின் மற்ற பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இலங்கை

விபத்தில் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளடங்களாக மூவர் காயம்

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,இசைமாளத்தாழ்வு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னார் மறைமாவட்டத்தின் முன்னால் குரு முதல்வரும்,மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஆணைக்குழுவின் இயக்குனருமான அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளடங்களாக மூவர் காயமடைந்துள்ளனர். மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி நிறைவடைந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (2) மாலை அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் ,சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய மூவரும் மடு திருத்தலத்தில் இருந்து மன்னார் நோக்கி ஹயஸ் ரக […]

இலங்கை

கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு 25 இலட்சம் மக்களின் சாபம் சென்றடையும் – சாணக்கியன்!

  • July 2, 2023
  • 0 Comments

தேசிய கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் 25 இலட்சம் மக்களின் சாபம் சென்றடையும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். தேசிய கடன்மறுசீரமைப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடிதான்  முதலாவது மோசடி எனக் கூறினார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தில் […]

புகைப்பட தொகுப்பு

தேரேறி வருகின்றாள் நயினாதீவு – நாகபூசணி அம்மன்…. அலைகடலென திரண்ட மக்கள்

  • July 2, 2023
  • 0 Comments

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு – நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதிகாலை 04 மணியளவில் ஆரம்பமான பூஜைகளை தொடர்ந்து காலை 07 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , உள்வீதியுலா வந்த அம்பாள் காலை 08.30 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். தேர் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு , அம்பாளை வணங்கி அருளாசிகளை […]

இலங்கை

திருகோணமலையில் கரடி தாக்கி மூவருக்கு நேரந்த கதி!

திருகோணமலையில் ஒரே தடவையில் கரடி மூன்று பேரை தாக்கி காயப்படுத்திய சம்பவமொன்று இன்று (01) பதிவாகியுள்ளது. திருகோணமலை கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதிக்குள் தேன் எடுப்பதற்காக சென்றபோது கரடி ஒருவரை தாக்கிய சந்தர்ப்பத்தில் மற்றைய இருவரும் அக்கரடியை தாக்க முற்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த கரடி மூன்று பேரையும் தாக்கி காயப்படுத்திய நிலையில் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து குறித்த மூவரையும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் […]

புகைப்பட தொகுப்பு

மன்னாரில் 85 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் சிக்கிய இருவர்

  • July 2, 2023
  • 0 Comments

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வீதியில் வைத்து நேற்று (1) சனிக்கிழமை மாலை 85 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற போது வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய 85 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி..!

பயனாளர்களுக்கு வாட்ஸ் -அப் செயலி புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பயனாளர்களுக்கு வாட்ஸ் -அப் செயலியின் மூலம் உயர்தர காணொளிகளை அனுப்பும் வசதியையும் அளித்துள்ளது. இதன்மூலம் காணொளிகளை அனுப்பும்போது ‘Standard Quality’ என்ற Option அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் Android மற்றும் iOS மூலம் வாட்ஸ் -அப் பயனாளர்களுக்கு இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் WhatsApp அதன் விண்டோஸ் பயனர்கள் 32 நபர்களுடன் ஒரே நேரத்தில் வீடியோ கால் செய்ய முடியும். முன்னதாக, 8 பேர் […]

ஆசியா

இயற்கை எரிவாயு குறித்து நீண்டகால ஒப்பந்தங்களை செய்யும் சீனா!

  • July 2, 2023
  • 0 Comments

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தணிந்தாலும், இயற்கை எரிவாயுவில் நீண்டகால ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகளை ஆதரிப்பதன் மூலம் தனது ஆற்றல் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் சீனா உறுதியாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எரிசக்தி பாதுகாப்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியதால், 2023 ஆம் ஆண்டில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் (எல்என்ஜி) இறக்குமதியில் உலகின் முன்னணி நாடாக சீனா மாறியுள்ளது. நிலையான விநியோகங்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், இறக்குமதியைப் பன்முகப்படுத்துவதன் மூலமும், சீனா எதிர்கால எரிசக்தி பற்றாக்குறையைத் தவிர்ப்பதையும், அதைத் […]

இந்தியா

கிணற்றில் விழுந்த மாணவர்களை மீட்கச் சென்ற மூவர் உட்பட நான்கு பேர் உயிரிழப்பு!

தமிழகம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ளது மெட்டாலா கணவாய்பட்டி என்ற கிராமத்தில் விபத்தில் சிக்கி, கிணற்றில் விழுந்த மாணவர்களை மீட்கச் சென்ற மூவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிறுவர்கள் 3 பேரும் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த.போது வாகனம் நிலை தடுமாறியதில், அதில் வந்த சிறுவர்கள் 3 பேரும் வீதி ஓரத்தில் இருந்த 100 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றுக்குள் […]

You cannot copy content of this page

Skip to content