இலங்கை

செந்தில் தொண்டமான் – ஜெய் சங்கர் சந்திப்பு!

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், புது டில்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரை சந்தித்தார். இச்சந்திப்பில், பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளுக்காக பாராட்டுக்களை தெரிவித்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரை, இலங்கைக்கு வருகை தருமாறு […]

பொழுதுபோக்கு

“Zee Tamil சரிகமப” இலங்கைச் சிறுமிக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு

  • July 2, 2023
  • 0 Comments

இலங்கையின் பெருந்தோட்ட தொழிலாளியின் மகள் ஆஷினி சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஜீ தமிழின் “சரிகமப” இசை நிகழ்வில் பங்கேற்பதற்காக நேற்று இந்தியா சென்றிருந்தார். கண்டி மாவட்டத்துக்குட்பட்ட புசல்லாவை – நயப்பன தமிழ் வித்தியாலய மாணவியான ஆஷினி சென்னை விமான நிலையத்தை சென்றடைந்த பின்னர் zee தமிழ் ஊடக குழுமத்தின் சார்பில் பிரதிநிதி வந்து அவரை அலைத்துச்சென்றார். இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளியின் பிள்ளையொருவர் சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள “சரிகமப” இசை நிகழ்வில் பங்கேற்பது […]

இந்தியா

எங்கள் கட்சியில் யாராவது படம் நடித்தால் கருத்து கூற தயார்.. ‘மாமன்னன்’ குறித்து எடப்பாடி தெரிவித்த கருத்து

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கிய படம் ‘மாமன்னன்’ இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் 29-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘மாமன்னன்’ படத்தின் வெற்றியை நேற்று படக்குழு கேக் வெட்டி கொண்டானர் இந்நிலையில், அ.தி.மு.க. செயலாளர் எடப்பாடி பழனிசாமி […]

பொழுதுபோக்கு

மறைந்த நடிகர் மயில்சாமியின் ஆசை! நடிகர் ரஜினிகாந்த் செய்தது என்ன

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் மயில்சாமி. அவர் சில மாதங்களுக்கு முன்னர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் ஆசைப்பட்டு கேட்ட ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் தற்போது செய்து முடித்து இருக்கிறார். அதன்படி மயில்சாமிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய போது ரஜினிகாந்த் ஒரு விடயத்தை செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார். ”நான் திருவண்ணாமலை சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது மயில்சாமியின் ஆசை அதை சீக்கிரமாக நிறைவேற்றுவேன்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று ரஜினிகாந்த் திருவண்ணாமலையில் […]

இலங்கை

நுவரெலியாவில் கண் சத்திர சிகிச்சை ஒவ்வாமை குறித்து ரம்புக்வெல கருத்து!

  • July 2, 2023
  • 0 Comments

நுவரெலியா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை மேற்கொண்டு ஒவ்வாமை ஏற்பட்டவர்களில் 11 பேர் குணமடைந்துள்ளதுடன்,  இருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”இந்திய நிறுவனமொன்றிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் காணப்பட்ட பற்றீரியா காரணமாகவே சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் தற்போது அந்த நிறுவனத்திடமிருந்து […]

இந்தியா

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை? அழுகிய நிலையில் ஓன்றரை வயது குழந்தையின் கை : உறவினர்கள் குற்றச்சாட்டு

சென்னை சென்ட்ரல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தினமும் 1000க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் அஜிஷா தம்பதிகளின் ஒன்றரை வயது மகன் முகமது மகாதீர் என்ற குழந்தைக்கு கடந்த ஒன்றரை வருடம் முன்பு தலையில் நீர் கோர்ப்பதாக ஆபரேஷன் செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பிரச்சினை வரவே குழந்தையை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த […]

இலங்கை

கடன் மறுசீரமைப்பு நியாயமானதாக இருக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

  • July 2, 2023
  • 0 Comments

இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான முடிவுகளை நாம் எடுக்க வேண்டும். அந்த முடிவுகளை ஜனரஞ்சக முடிவுகளாக மாற்றுவது பொதுஜன பெரமுனவின் பொறுப்பு என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பிரேரணையை நிராகரித்தமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நாட்டைக் கட்டியெழுப்ப எடுக்கப்படும் தீர்மானங்கள் ஜனரஞ்சகமானதாக இருக்க வேண்டும். கடனை மறுசீரமைப்பது சரி. அது நியாயமானதாக இருக்க வேண்டும் எனக் கூறினார். இந்த நாட்டின் பொருளாதாரத்தை […]

இலங்கை

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை ஆரம்பம்!

இரத்மலானையிலிருந்து ஒரு மணித்தியாலம் பத்து நிமிடங்களில் யாழ்ப்பாணத்தை அடைய முடியும் என இரத்மலானை விமான நிலைய முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்தார். சனி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் காலை விமான சேவையுடன், வாரத்தில் நான்கு நாட்கள் போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். இன்று, பன்னிரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ஒரு சிறிய விமானம், செஸ்னா 208, பயணத்தில் இணைந்துகொண்டது. ஃபிட்ஸ் ஏவியேஷன் / டேவிட் பீரிஸ் ஏவியேஷன் ஆகிய நிறுவனங்கள் […]

இந்தியா

காதலியின் வீட்டில் சடலமாக தொங்கிய நபர்! – பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

  • July 2, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது காதலியின் வீட்டில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பஹ்ரைச் பகுதியைச் சேர்ந்தவர் இக்பால். இவர் பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் தந்தைக்கு தெரிய வந்துள்ளது.அதனைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டுள்ளது. பின்னர் காதலர்கள் இருவரும் இரவில் சந்தித்து பேச முடிவு செய்துள்ளனர். ஆனால், இதனை அறிந்த பெண்ணின் தந்தை இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் இக்பால் அவரது […]

ஐரோப்பா

சட்டவிரோதமாக ஐரோப்பா செல்ல முயன்ற இருவர் கைது!

  • July 2, 2023
  • 0 Comments

சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பா செல்ல முயன்ற இருவர்   லார்னாகா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும், ஆள்மாறாட்டம் செய்து பிறிதொருவரின் கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளியேற முற்பட்டது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த சம்பவம் வலுவான கடவுச்சீட்டு கட்டுப்பாடுகளையும், முக்கயத்துவத்தையும் காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சைப்ரஸில் சட்டப்பூர்வமாக வசிக்கும் மூன்றாம் நாட்டுப் பிரஜையான 24 வயதான நபர் ஐரோப்பிய கடவுச்சீட்டை வைத்திருந்ததில் சந்தேகம் […]

You cannot copy content of this page

Skip to content