ஐரோப்பா

பிரான்ஸ் மக்களின் பரிதாப நிலை – அதிகரிக்கும் மரணங்கள்

  • October 13, 2023
  • 0 Comments

போரில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்டு வரும் தாக்குதலில் தொடர்ந்து பிரான்ஸ் மக்கள் இலக்காகுவதாக குறிப்பிடப்படுகின்றது. முன்னதாக எட்டு பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் பதினெட்டாக அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களில் குழந்தைகளும், சிறுவர்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பிரதமர் Elisabeth Borne சற்று முன்னர் இத்தகவலை வெளியிட்டார்.

இலங்கை செய்தி

இலங்கையில் நடந்த போர் குறித்து சரத் வீரசேகர வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 10 ஆண்டுகளில் 27,000 பேர் பலி

  • October 13, 2023
  • 0 Comments

இந்த நாட்டில் எவ்வாறான யுத்தம் இடம்பெற்றது என்பதை விளக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெறும் ஒவ்வொரு மனித உரிமைகள் மாநாட்டின் போதும் இலங்கைப் படைகள் போர்க்குற்றம் இழைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் நோக்கில் இது அமையவுள்ளதுஇ நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (12) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட […]

இலங்கை

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • October 13, 2023
  • 0 Comments

  இஸ்ரேலிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இஸ்ரேலை விட்டு நாடு திரும்ப விரும்பும் இலங்கை பணியாளர்களுக்கு அதற்கான வாய்ப்பு காணப்படுவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். மேலும், துபாய், அபுதாபி மற்றும் பஹ்ரைன் வழியாக தினமும் மூன்று விமானங்கள் இஸ்ரேலில் இருந்து கொழும்புக்கு இயக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இஸ்ரேலிய மக்கள் […]

இலங்கை செய்தி

சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்புக்கு எதிரான மனுவை விசாரிக்க அனுமதி

  • October 13, 2023
  • 0 Comments

மிருசுவில் படுகொலையின் பிரதான குற்றவாளியான சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இன்று (12) மாற்றுக் கொள்கைக்கான மையம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான பரிசீலனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் மன்னிப்பு வழங்குவது தொடர்பான பல ஆவணங்களையும் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மனுக்கள் மீதான ஆட்சேபனைகளை […]

இலங்கை செய்தி

17 வருடங்களாக மகனை தேடிவந்த தந்தை உயிரிழப்பு

  • October 13, 2023
  • 0 Comments

சுமார் 17 வருடங்களாக வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு காணாமல் போன மகனைத் தேடிய தந்தை முத்தையா ஆறுமுகம் காலமானார். இவர் வவுனியா, மகரம்பைக்குளம் – ஸ்ரீராமபுரத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார். 65 வயதான முத்தையா ஆறுமுகம் நேற்று (12) காலமானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 2007ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து அவரது மகன் ஆறுமுகம் சிவகுமார் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் (13) 2427 நாட்கள் நிறைவடையவுள்ளது. எனினும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை […]

இலங்கை செய்தி

திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி

  • October 12, 2023
  • 0 Comments

திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். இதன் போது கோமரங்கடவல மயிலவெவ பகுதியைச் சேர்ந்த எஸ்.சமன் பிரியலால் (38வயது) உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. நண்பரொருவரின் பிறந்தநாளை கொண்டாடி விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பிலான விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை செய்தி

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள மாகாணப் பணிப்பாளருக்கு பதவி உயர்வு

  • October 12, 2023
  • 0 Comments

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள மாகாணப் பணிப்பாளராக செயற்பட்டு வந்த என்.எம்.நௌபீஸ் கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவின் மாகாணப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் வழங்கி வைக்கப்பட்ட கடிதத்திற்கமைவாக, பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்காவினால் அவருக்கான கடிதம் இன்று வழங்கி வைக்கப்பட்டது. பிரதம செயலாளர் காரியாலயத்தில், இக்கடிதம் வழங்கி வைக்கப்பட்டபோது, கிழக்கு மாகாண ஆளுநரின் எல்.பி.மதநாயக கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா செய்தி

பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களை தடை செய்த பிரான்ஸ்

  • October 12, 2023
  • 0 Comments

பிரான்சின் உள்துறை அமைச்சர், நாட்டில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் அனைத்தையும் தடை செய்துள்ளார். ஒரு அறிக்கையில், விதிகளை மீறும் வெளிநாட்டினரை “முறைமையாக” நாடு கடத்துமாறு ஜெரால்ட் டார்மானின் உத்தரவிட்டார். இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் தூண்டப்பட்ட யூத எதிர்ப்பின் அதிகரிப்பு ஐரோப்பிய அரசாங்கங்கள் அஞ்சுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் பொலிசார் பேர்லினில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தை கலைத்தனர். பிரான்சில் கிட்டத்தட்ட 500,000 யூத சமூகம் உள்ளது, இது ஐரோப்பாவிலேயே மிகப்பெரியது. பிரான்சின் முஸ்லீம் சமூகமும் ஐரோப்பாவின் மிகப் பெரியது,சுமார் […]

ஆசியா செய்தி

இஸ்ரேல் பயணிக்கும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்

  • October 12, 2023
  • 0 Comments

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் இஸ்ரேல் சென்று நெதன்யாகுவை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். “இஸ்ரேலிய தலைவர்களுடன் அவர்களின் செயல்பாட்டுத் திட்டமிடல் மற்றும் இந்த மோதலுக்கான அவர்களின் நோக்கங்கள் பற்றி ஆழமாகப் பேச அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்,” என்று பெயர் தெரியாத நிலையில் செய்தியாளர்களிடம் மூத்த அமெரிக்க அதிகாரி கூறினார். “செயலாளர் ஆஸ்டின் இஸ்ரேலின் பாதுகாப்பு உதவி தேவைகளை அங்கு விவாதிப்பார்,” என்று அவர் கூறினார்.

ஆசியா செய்தி

பாகிஸ்தானின் வெற்றியை காசா மக்களுக்கு அர்ப்பணித்த ரிஸ்வான்

  • October 12, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முஹம்மது ரிஸ்வான், கடந்த சில நாட்களாக இடைவிடாத இஸ்ரேலிய குண்டுவீச்சை எதிர்கொண்ட காசா மக்களுக்கு இலங்கைக்கு எதிரான தனது அணியின் சமீபத்திய ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றியை அர்பணித்துள்ளார் இந்தியாவின் ஹைதராபாத்தில் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய போது ரிஸ்வான் சதம் அடித்ததால் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். “இது காசாவில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகளுக்காக” என்று அவர் சமூக ஊடக தளமான X இல் ஒரு பதிவில் எழுதினார். 31 […]