செய்தி

ரஷ்யாவிற்கு எதிராக செயற்பட்ட ஊடகவியலாளருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்!

  • October 13, 2023
  • 0 Comments

உக்ரைன் – ரஷ்ய போரை எதிர்த்து விமானத்தில் போராட்டம் நடத்திய ரஷ்ய தொலைக்காட்சி தொகுப்பாளர் விஷம் குடித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.  இது குறித்து பிரெஞ்சு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு தனது மகளுடன் ரஷ்யாவிலிருந்து பிரான்சுக்கு தப்பிச் சென்ற மெரினா ஓவ்சியனிகோவா, அவசர சேவைகளை அழைத்ததாகவும், தனது பாரிஸ் குடியிருப்பை விட்டு வெளியேறும்போது திடீரென நோய்வாய்ப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவம்,  என்று பிரெஞ்சு தலைநகரின் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 45 வயதான அவர், தான் விஷம் […]

இலங்கை

வறிய மாணவர்களுக்கு ஒன்றரை மில்லியன் ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கி வைப்பு

திருகோணமலை- புல்மோட்டையில் வறிய மாணவர்களுக்கு ஒன்றரை மில்லியன் ரூபாய் செலவில் மிதிவண்டிகள் இன்று (13) வழங்கி வைக்கப்பட்டது. சர்வதேச மனித நேய அமைப்பான முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் முன் மாதிரிக் கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாடசாலைக் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் புல்மோட்டை சதாம் முஸ்லிம் வித்தியாலயம், ஜின்னாபுரம் கலவன் பாடசாலை மற்றும் புல்மோட்டை மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி பயிலும் 25 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது. புல்மோட்டை சதாம் வித்தியாலத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் […]

செய்தி விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிகளில் இனி கிரிக்கெட்டும் உண்டு… 123 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள ஒப்புதல்

  • October 13, 2023
  • 0 Comments

2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டியையும் சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. ஒலிம்பிக் போட்டி கடந்த 1896ம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் முதன்முதலில் நடைபெற்றது. ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தடகளம், குத்துச்சண்டை, வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், ஜிம்னாஸ்டிக்ஸ், மல்யுத்தம் போன்ற பல விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. அடுத்த ஒலிம்பிக் (2024ம் ஆண்டு ஜூலை 26) பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் […]

இலங்கை

இலங்கை மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது – ரஞ்சித்

  • October 13, 2023
  • 0 Comments

இலங்கை மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது என ஜனாதிபதி தெரிவித்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வருமானம் ஈட்டும் திணைக்களங்களின் தலைவர்களுடன் நிதியமைச்சில் இன்று (13.10) இடம்பெற்ற கலந்துரையாடலில்  அவர் இவ்வாறு கூறினார். வருமானம் ஈட்டும் திணைக்களங்களின் வருமான இலக்குகளை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அங்கு நிறுவனங்கள் யோசனைகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கம் வருவாயை அதிகரித்து விரைவாக […]

இலங்கை

ஜனாதிபதி – GMOA அதிகாரிகள் இடையே திடீர் சந்திப்பு

  • October 13, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, புத்திஜீவிகள் வெளியேற்றம் சுகாதார பிரச்சினைகள் உள்ளிட்ட வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் 8 விடயங்களை உள்ளடக்கிய ஆலோசனைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

பொழுதுபோக்கு

‘லியோ’ படத்திற்காக மன்னிப்பு கோரியுள்ள விநியோக நிறுவனம்; ரசிகர்கள் அதிர்ச்சி!

  • October 13, 2023
  • 0 Comments

லியோ’ படத்தில் அளவுக்கதிகமான வன்முறை இருப்பதாக விநியோக நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் நிலையில், படத்தில் அளவுக்கதிகமான வன்முறை இருப்பதாக இந்தப் படத்தை லண்டனில் விநியோகம் செய்யும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில், ‘’லியோ’ படத்தில், அதிக அளவிலான வன்முறையும் கொடூரமான காட்சிகளும் உள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததை விட, ‘லியோ’ படத்தில் […]

பொழுதுபோக்கு

லியோவுக்கு அடுத்தடுத்து விழும் அடிகள்… இப்ப என்ன பிரச்சினை தெரியுமா?

  • October 13, 2023
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 19-ஆம் திகதி முதல் 24-ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 […]

இலங்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா காலமானார்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன். செல்வராசா (77) சுகயீனம் காரணமாக இன்று காலமானார். அண்மைய நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பொன். செல்வராசா இன்று உயிரிழந்துள்ளார். இவரது, இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15)பிற்பகல் 03 மணியளவில் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டிருப்புத் தொகுதியில் பெரியகல்லாற்றைப் பிறப்பிடமாக கொண்ட பொன். செல்வராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் […]

உலகம்

மாணவனின் கொடூர தாக்குதலில் ஆசிரியர் பலி: பிரான்ஸ் ஜனாதிபதி நேரில் செல்ல உள்ளதாக தகவல்

பா து கலே (Pas-de-Calais) மாவட்டத்தில் உள்ள Arras நகரில் உள்ள பாடசாலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். SAINT THOMAS D’AQUIN எனும் உயர்கல்வி பாடசாலையில் கற்பிக்கும் 52 வயதுடைய ஆசிரியர் ஒருவர் அவரது வகுப்பைச் சேர்ந்த மாணவன் ஒருவரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். ஆசிரியர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியுள்ளது 15 வயதுடைய அதே வகுப்பில் பயிலும் மாணவ எனவும், வகுப்பறை […]

இந்தியா

இந்தியாவை விட்டு வெளியேறிய பாகிஸ்தான் நிருபர்: மன்னிப்பு கோருகிறார்

இந்த வார தொடக்கத்தில் திடீரென இந்தியாவை விட்டு வெளியேறிய பாகிஸ்தான் கிரிக்கெட் வர்ணனையாளர், தன்னை நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்கப்பட்டதை மறுத்துள்ளார். இந்தியாவையும் இந்து மதத்தையும் கேலி செய்ததாகக் கூறப்படும் தனது பழைய சமூக ஊடகப் பதிவுகளுக்குப் எதிர்ப்பு ஏற்பட்டதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வர்ணனையாளர் இந்தியாவில் இருந்து வெளியேறினார். இணையத்தில் பரவிய எதிர்வினைகளால் தான் “மிரட்டப்பட்டதாகவும் பயமாகவும்” உணர்ந்ததாக அப்பாஸ் கூறியுள்ளார். மேலும் அந்த பதிவுகளால் மனம் புண்பட்டவர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். “பரப்பப்பட்ட பதிவுகளால் ஏற்பட்ட காயத்தை […]