இலங்கை – கழுத்தை அறுத்து கொன்ற நிலையில் இரு குழந்தைகளின் தாய் சடலமாக மீட்பு
மேல் கொஸ்கம, புஸ்ஸல்லாவ ரப்பர் தொழிற்சாலைக்கு அருகில், கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் திங்கட்கிழமை(23) அன்று மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவிசாவளை, புவக்பிட்டிய, அஸ்வத்த வடக்கு, நுககஹவத்த பகுதியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான 49 வயதுடைய செபாலகே மல்லிகா சமன்மாலி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியாக வேலை செய்து வந்ததாகவும், காலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது அவரைத் துரத்திச் சென்ற […]