இலங்கை

இலங்கையில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி!

  • October 14, 2023
  • 0 Comments

இணையம்  (Online) மூலம் வேலை வாய்ப்பு தருவதாக தெரிவித்து சுமார் 1 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மோசடி விசாரணை பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில்  கரந்தெனிய, தெனகொட பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 94 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட நபரின் 3 வங்கிக் கணக்குகளில் 72 […]

மத்திய கிழக்கு

காசாவில் குறைந்தது 11 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு!

  • October 14, 2023
  • 0 Comments

காசாவில் நடந்து வரும் மோதல் நிலைமையில் குறைந்தது 11 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காணாமல்போயுள்ளதாகவும் பத்திரிக்கையாளர்களை பாதுகாப்பதற்கான குழுத் தெரிவித்துள்ளது. காசாவில் அல்லது அதற்கு அருகாமையில் கொல்லப்பட்ட, காயமடைந்த மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் பற்றிய கூடுதல் அறிக்கைகளை இந்தக் குழு விசாரித்து வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள  ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவின் மத்திய கிழக்கிற்கான ஒருங்கிணைப்பாளர் ஷெரிப் மன்சூர், காசாவில் உள்ள ஊடகவியலாளர்கள் தங்கள் குடும்பங்களை வெளியேற்றுவதற்கும் பாதுகாப்பதற்கும் […]

இலங்கை

கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் விளக்கமறியலில்

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் ஒக்டோபர் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். போலி ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிவாளர் வெள்ளிக்கிழமை மாலை (அக். 13) கைது செய்யப்பட்டார். குறித்த பதிவாளருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இலங்கை

யாழில் திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு – 14 பேர் மீது வழக்கு பதிவு!

  • October 14, 2023
  • 0 Comments

யாழில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது குறித்து  யாழ். மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் சுபோகரன் கருத்துத் தெரிவிக்கையில் ‘யாழ்.மாவட்டத்தில் கடந்த 09 மாத கால பகுதிகளில் 13 தடவைகள் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதன் போது , உணவகங்கள் , விற்பனை நிலையங்கள் என 205 வர்த்தக நிலையங்களில் சோதனை நடத்தப்பட்டது. அவற்றில் 14 உரிமையாளர்களுக்கு […]

இலங்கை

சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி

  • October 14, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது ஒரே நாடு ஒரே மண்டலம் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஐரோப்பா

ரஷ்யாவிற்கு ஆயுத உதவிகளை செய்யும் வடகொரியா : அமெரிக்காவிற்கு வந்த சந்தேகம்!

  • October 14, 2023
  • 0 Comments

உக்ரைனில் நடந்து வரும் போருக்காக வடகொரியா 1,000க்கும் மேற்பட்ட இராணுவ தளவாடங்கள் மற்றும் வெடிமருந்துகளை ரஷ்யாவிற்கு வழங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைனுடனான நீடித்த போரில் வடகொரியா ரஷ்யாவிற்கு உதவிகளை வழங்கும் என்ற ஊகங்கள் கடந்த மாதம் எழுந்தன. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்திக்கவும் முக்கிய இராணுவ தளங்களைப் பார்வையிடவும் ரஷ்யாவுக்குச் சென்றபோது இதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டதாக வெள்ளை மாளிகை சந்தேகிக்கிறது. தென்மேற்கு ரஷ்யாவிற்கு ரயில் மூலம் கொண்டு […]

ஐரோப்பா

பிரான்சில் கல்லூரி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல்- ஆசிரியர் ஒருவர் பலி!

  • October 14, 2023
  • 0 Comments

பிரான்சில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்சின் அராஸ் நகரில் கம்பெட்டா கல்லூரியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக பிரான்சின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் தாக்குதலை மேற்கொண்டவர் கைதுசெய்யப்பட்டுள அதேவேளை , தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் அந்த நபர் அல்லாகுஅக்பர் என சத்தமிட்டார் என தகவல்கள் வெளியாகின்றன.சம்பவத்தில் பிரெஞ் மொழி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு ஆசிரியரும் பாதுகாப்பு ஊழியரும் […]

ஐரோப்பா

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் : அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சவுதி அரேபியா பயணம்!

  • October 14, 2023
  • 0 Comments

இஸ்ரேலுக்கும் – ஹமாஸுக்கும் இடையிலான மோதல் நிலைமை குறித்து ஆலோசிப்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோனி பிளிங்கன் சவுதி அரேபியா வந்துள்ளார். அமெரிக்க இராஜாங்க செயலாளர் 06 அரபு நாடுகளுக்கான விஜயத்தின் போது 5வது நிறுத்தமாக சவூதி அரேபியாவை வந்தடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸின் செயல்பாடுகளை அரபு நாடுகள் கண்டிக்கும் என்றும், இஸ்ரேலின் பதிலில் நிதானத்தைக் கடைப்பிடிக்கும் என்றும் அமெரிக்கா எதிர்பார்க்கிறது. சவூதி சுற்றுப்பயணத்தின் பின்னர் அந்தோனி பிளிங்கன் எகிப்து செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை

வெள்ள அபாய அறிவிப்பு நீக்கப்பட்டது!

  • October 14, 2023
  • 0 Comments

ஆற்றை அண்மித்த தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய அறிவிப்பு அகற்றப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் கணிசமான அளவு மழை பெய்யாததாலும், தவலம மற்றும் பத்தேகம நீர் அளவீட்டு நிலையங்களில் இருந்து அதிகளவு நீர்மட்டம் பதிவாகியுள்ளதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. அதன்படி கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி முதல் ஜிங்கங்கையைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நில்வலா ஆற்றின் தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள […]

மத்திய கிழக்கு

காஸா மீது வான்வழித்தாக்குதல் : 614 குழந்தைகள் பலி!

  • October 14, 2023
  • 0 Comments

காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,900 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, தாக்குதல்களில் 614 குழந்தைகளும் 370 பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 7500ஐ தாண்டியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, காஸா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேலில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட குழு ஒன்றின் […]