ரஷ்யாவிற்கு ஆயுத உதவிகளை செய்யும் வடகொரியா : அமெரிக்காவிற்கு வந்த சந்தேகம்!
உக்ரைனில் நடந்து வரும் போருக்காக வடகொரியா 1,000க்கும் மேற்பட்ட இராணுவ தளவாடங்கள் மற்றும் வெடிமருந்துகளை ரஷ்யாவிற்கு வழங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உக்ரைனுடனான நீடித்த போரில் வடகொரியா ரஷ்யாவிற்கு உதவிகளை வழங்கும் என்ற ஊகங்கள் கடந்த மாதம் எழுந்தன.
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்திக்கவும் முக்கிய இராணுவ தளங்களைப் பார்வையிடவும் ரஷ்யாவுக்குச் சென்றபோது இதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டதாக வெள்ளை மாளிகை சந்தேகிக்கிறது.
தென்மேற்கு ரஷ்யாவிற்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர், ரஷ்யக் கொடியுடன் கூடிய கப்பலில் கொள்கலன்கள் ஏற்றப்பட்டதைக் காட்டுவதாக வெள்ளை மாளிகை படங்களை வெளியிட்டது.
வட கொரியாவின் நஜின் மற்றும் ரஷ்யாவின் டுனே ஆகிய நகரங்களுக்கு இடையே செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 1 வரை இந்த கொள்கலன்கள் அனுப்பப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.