ஐரோப்பா

பிரான்ஸில் களமிறக்கப்பட்ட 7000 இராணுவ வீரர்கள்!

  • October 14, 2023
  • 0 Comments

பிரான்ஸில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து  நாடு முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்க பிரான்ஸ் 7,000 வீரர்களை திரட்டும் என்று ஜனாதிபதி அலுவலகம் இன்று (14.10) அறிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போரின் உலகளாவிய பதட்டங்களின் சூழலில் பிரான்சை உலுக்கிய தாக்குதலுக்குப் பிறகு, சில பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பணியாளர்கள் வடக்கு நகரமான அராஸில் உள்ள கம்பெட்டா-கார்னோட் பள்ளிக்கு திரும்பினர். இந்த சம்பத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டு உளவுத்துறையின் கண்காணிப்பின் […]

இலங்கை

திருகோணமலை கடற்கரையில் கரையொதுங்கும் கடற்பாசிகள்… மீனவர்கள் அவஸ்தை

  • October 14, 2023
  • 0 Comments

திருகோணமலை கடற்கரையில் கடந்த சில நாட்களாக கடற்பாசிகள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக திருகோணமலை- அலஸ் தோட்டம் பகுதிகளில் உள்ள கடற்கரையோரங்களிலேயே கடற்பாசிகள் கரை ஒதுங்குவதாகவும் தெரிய வருகின்றது. கடற்பாசி ஒதுங்குவதனால் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற கடற்றொழியாளர்களின் வலையில் பெருமளவான கடற்பாசிகள் சிக்குவதாகவும் இதனால் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதை குறைத்துள்ளதாகவும் இதன் காரணமாக தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அதிகளவிலான பாசிகள் வலையில் சிக்குவதினால் வலையை சுத்தம் செய்வதற்கே பெருமளவிலான நேரம் செலவாவதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.இதேவேளை தற்போது வெளிநாட்டவர்களின் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவின் தேசிய மொழிபெயர்ப்பு விருது… தமிழக எழுத்தாளரின் கதை தேர்வு!

  • October 14, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் தேசிய மொழிபெயர்ப்பு விருதுக்கான பட்டியலில் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் ’உண்மை கதைகள்’ இடம் பெற்றுள்ளது. மொழிபெயர்ப்பு எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவில் தேசிய மொழிபெயர்ப்புக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த தேசிய விருதுக்கு வெவ்வேறு நாடுகளை சேர்ந்த மொழிபெயர்ப்பு எழுத்தாளர்களின் கதை, கவிதைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் இருந்து கதை மற்றும் கவிதை மொழிபெயர்ப்பு பிரிவுகளில் தனித்தனியே 6 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான லிஸ்ட்டை அமெரிக்க இலக்கிய […]

ஐரோப்பா

அமெரிக்கா பொறுப்பான பாத்திரத்தை வகிக்க வேண்டும் – சீனா வலியுறுத்தல்!

  • October 14, 2023
  • 0 Comments

இஸ்ரேல் – காசா மோதலில் வாஷிங்டன் ஆக்கபூர்வமான மற்றும் பொறுப்பான பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்று சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரி வாங் யீ வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க பிரதிநிதி ஆண்டனி பிளிங்கனுடனான தொலைப்பேசி உரையாடலின்போது அவர் மேற்படி வலியுறுத்தியுள்ளார். இதன்போது மேலும் பேசிய அவர், “அமெரிக்கா நடைமுறையில் ஒரு ஆக்கபூர்வமான மற்றும் பொறுப்பான பாத்திரத்தை வகிக்க வேண்டும். விரைவில் ஒரு அரசியல் தீர்வுக்கான பாதையை கண்டறிய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா

பிரான்சில் பயங்கரவாத தாக்குதல்: 10 பேர் கைது

Arras நகர பாடசாலையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Mohammed. M எனும் 20 வயதுடைய பயங்கரவாதி ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில், ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் மூவர் காயமடைந்தும் உள்ளனர். தாக்குதலாளி கைது செய்யப்பட்டதோடு, அவனது சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளார் அத்தோடு அவர்களுடன் தொடர்புடைய மேலும் எட்டுப் பேரினை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களில், தாக்குதலாளியின் தந்தை, தாய், சகோதரி, அவனுடைய இரு சகோதரர்கள், உறவினர்கள் என […]

இலங்கை

கொக்குத்தொடுவாய் – புலிபாய்ந்தகல் பகுதியில் சட்டவிரோத வாடிகள்… தயங்கும் அதிகாரிகள்

  • October 14, 2023
  • 0 Comments

கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதிக்கு இடைப்பட்ட பகுதியான புலிபாய்ந்தகல் கடற்கரையை அண்டிய பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களால் சட்டவிரோதமாக வாடிகள் ஓகஸ்ட் மாதம் அமைக்கப்பட்டிருந்தது. இரண்டரை மாதமாகியும் அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் மீண்டும் புதிய வாடிகள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து அவ்விடத்திற்கு சென்று நிலவரங்களை பார்வையிட்டதன் பின்னர் தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட கிளையின் செயலாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான துரைராசா ரவிகரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தீவிரமடையும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்

லண்டன் மற்றும் மான்செஸ்டர் உட்பட பிரித்தானியா முழுவதும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. லண்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹமாஸுக்கு ஆதரவளிக்கும் எவரும் அல்லது பாதையை விட்டு விலகிச் சென்றால் கைது செய்ய நேரிடும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் முன்னோடியில்லாத தாக்குதலை நடத்திய ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பாலஸ்தீனிய போராளிக் குழுவைச் […]

இலங்கை

பதுளை மாவட்டத்திற்கு மண்சரிவு குறித்த சிவப்பு எச்சரிக்கை!

  • October 14, 2023
  • 0 Comments

பதுளை மாவட்டத்தில் உள்ள ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு குறித்த சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மேலும், காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேச செயலகங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் இன்று (14.10) மாலை 04 மணி முதல் நாளை (15.10) மாலை 04 மணி வரை அமுலுக்கு வரும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பா

பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

லூவர் அருங்காட்சியகத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.. அருங்காட்சியகம் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று சனிக்கிழமை மூடப்பட்டுள்ளது. இன்றை நாளுக்கான நுழைவுச் சிட்டைகளை முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் மீள அளிக்கப்படும் என லூவர் அருங்காட்சியகம் அறிவித்துள்ளது. அங்கிருந்த 15,000 பேர் வெளியேற்றப்பட்டு அருங்காட்சியகம் மூடப்பட்டது. பின்னர் ஏராளமான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை

இரு இலங்கை பெண்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் கைது!

  • October 14, 2023
  • 0 Comments

இலங்கையர்கள் என கூறப்படும் இரண்டு பெண்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜோர்டானில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.