சியாம்பலாபே பகுதியில் மீட்கப்பட்ட மண்டை ஓடு யாருடையது?
வெள்ள நிலைமையைக் கண்காணிப்பதற்காகச் சென்ற சபுகஸ்கந்த குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி, இறந்த நபரின் மண்டை ஓடு ஒன்றை கண்டறிந்துள்ளார். இன்று (15) காலை 10.30 மணியளவில் சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியாம்பலாபே, கலஹிடியாவ பாலத்தை அண்மித்த பகுதிக்கு சென்ற போதே அவர் இந்த மண்டை ஓட்டை அவதானித்துள்ளார். அதன்படி அங்கொடையில் கொல்லப்பட்ட பெண்ணின் தலை இதுவா என கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மஹர நீதவான் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதன் பின்னர், மண்டை ஓடு குறித்த பெண்ணின் […]