இந்தியா செய்தி

கோவை-வால்பாறையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 மாணவர்கள்

  • October 20, 2023
  • 0 Comments

கோவை மாவட்டம் வால்பாறைக்கு கோவை கிணத்துக்கடவு பகுதி கல்லூரி யைச் சேர்ந்த 10 மாணவர்கள் வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர் .இவர்கள் மாலை வால்பாறை அருகே உள்ள சோலையாறு சுங்கம் ஆற்றில் குளிக்க சென்றனர். அவர்களில் ஐந்து பேர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் ஆற்றில் மூழ்கியதை தொடர்ந்து மற்றவர்கள் அவர்களை மீட்க முயற்சி செய்து ஐந்து பேர்களும் நீரில் மூழ்கினர். அவர்களை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் காவல் துறையினர் ஈடுபட்டனர்.நீண்ட நேரம் போராட்டத்திற்கு […]

ஆசியா செய்தி

குடிமக்களிற்கு எச்சரிக்கை விடுத்த ரஷ்யா

  • October 20, 2023
  • 0 Comments

ஹமாஸுடனான இஸ்ரேலின் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல், லெபனான், ஜோர்டான் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என ரஷ்யா தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. “மத்திய கிழக்கில் நிலைமை சூடுபிடித்துள்ளது” என்று மாஸ்கோவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. “ரஷ்ய குடிமக்கள் இப்பகுதிக்கு, குறிப்பாக இஸ்ரேல், லெபனான், ஜோர்டான் மற்றும் பாலஸ்தீனிய பகுதிகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு நாங்கள் கடுமையாக பரிந்துரைக்கிறோம்,” என்று அது எச்சரித்தது. அக்டோபர் 7ம் தேதி காசா பகுதியில் இருந்து இஸ்ரேலுக்குள் […]

உலகம்

உடனடி போர் நிறுத்தம் தேவை: கிரேடா துன்பர்க்

இஸ்ரேல் – பாலஸ்தீன போர், 14-வது நாளாகத் தொடர்ந்து வரும் நிலையில் பல்வேறு மனிதநேய ஆர்வலர்களும் பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் மனிதாபிமானற்ற செயல்களுக்கு தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில், ஸ்வீடனைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளரான கிரேடா துன்பர்க், பாலஸ்தீனத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “இன்றைக்கு பாலஸ்தீனம் மற்றும் காஸாவுக்கு ஆதரவாக நாம் ஒருங்கிணைந்து போராடுவோம். உடனடி போர் நிறுத்தத்திற்காகவும் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் நீதியும் […]

செய்தி விளையாட்டு

CWC – பாகிஸ்தான் அணிக்கு 368 ஓட்டங்கள் இலக்கு

  • October 20, 2023
  • 0 Comments

உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் – மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். 13 ரன்னில் வார்னருக்கு கேட்ச் செய்யப்பட்டது. முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி பின்னர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். பாகிஸ்தான் பந்து வீச்சை ஓட ஓட விரட்டினர். ருத்ரதாண்டவம் ஆடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இருவரும் இரட்டை […]

இலங்கை

உணர்வுபூர்வமான பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முடியும்: சீனாவில் அமைச்சர் டக்ளஸ்

காலாவதியான பூகோள அரசியல் தந்திரங்களை புறந்தள்ளி விட்டு முரண்பாடுகளற்ற பேச்சுவாரத்தைகள் ஊடாகவே பிரச்சினைகளுக்கான தீர்வினை காணவேண்டும் என்ற சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் கருத்துக்கள் தன்னை கவர்ந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும், உணர்வுபூர்வமான பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற சீன ஜனாதிபதியின் கருத்தினை நிரூபிக்கும் வகையில் தன்னுடைய அரசியல் பயணம் அமைந்துள்ளதாகவும், குறித்த நம்பிக்கையுடனேயே ஜனநாயக நீரோட்டதில் இணைந்து கொண்டு தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் தற்போதைய அரசாங்கத்தில் சிரேஸ்ட […]

பொழுதுபோக்கு

பிரபல நடிகை ஜெயபிரதாவுக்கு சிறை தண்டனை உறுதி! நீதிமன்றம் அதிரடி

  • October 20, 2023
  • 0 Comments

நடிகையும், முன்னாள் எம்.பியுமான ஜெயப்பிரதா தொழிலாளர்களுக்கான ESI தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என கொடுக்கப்பட்ட புகாரில் அவருக்கு சிறை தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெயப்பிரதா சினிமா மூலம் சம்பாதித்த பணத்தை, சில தொழில்களில் இன்வெர்ஸ் செய்துள்ளதோடு, இவரின் பெயரில் திரையரங்கம் கட்டி அதன் மூலமாகவும் சம்பாதித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக, சென்னை ராயப்பேட்டையில் கூட ஜெயப்பிரதா என்னும் திரையரங்கம் இயக்கி வந்தது. இந்த திரையரங்கம் சில பிரச்சனைகள் காரணமாக […]

பொழுதுபோக்கு

சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வு: யாழ் வருகை தந்த நடிகர் சித்தார்த்

தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வுக்கு தென்னிந்திய இசை கலைஞர்கள் பலரும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். இசை நிகழ்வானது நாளைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. பிரபல நடிகர் சித்தார்த், பின்னணி பாடகர் அசல் கோளாறு ஆகிய பிரபலங்களும் வருகை தந்துள்ளனர். குறித்த இசை நிகழ்வினை பார்வையாளர்கள் இலவசமாக கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது .  

இலங்கை

டயானா தாக்கப்பட்ட விவகாரம்; அஜித் ராஜபக்ஷ தலைமையில் விசாரணை குழு நியமனம்

  • October 20, 2023
  • 0 Comments

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற வளாகத்துக்குள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (20) உத்தரவிட்டார். அதற்காக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று பிற்பகல் பாராளுமன்ற அறைக்கு வெளியே பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தாக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதேவேளை, பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கோரிக்கையின் பிரகாரம் பாராளுமன்றமும் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிரதி சபாநாயகர் […]

ஐரோப்பா

பிரஸ்ஸல்ஸ் தாக்குதலாளியின் புகலிட கோரிக்கையை நிராகரித்த ஐரோப்பிய நாடுகள்

பிரஸ்ஸல்ஸில் இந்த வாரம் இரண்டு ஸ்வீடன் கால்பந்து இரசிகர்களை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி நான்கு ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் பெற முயன்று தோல்வியடைந்த ஒருவர் என பெல்ஜிய அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். சந்தேகநபர் 45 வயதான துனிசிய நாட்டைச் சேர்ந்த அப்தெசலேம் லஸ்ஸூட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இஸ்லாமிய அரசு குழுவின் பெயரில் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “கடந்த திங்கட்கிழமை பிரஸ்ஸல்ஸில் தாக்குதல் நடத்தியவர் நான்கு வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரியிருந்தார். ஒவ்வொரு முறையும் […]

மத்திய கிழக்கு

காசா தேவாலயத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல்; பொதுமக்கள் பலர் பலி

  • October 20, 2023
  • 0 Comments

காசாவின் போர்பிரையஸ் தேவாலயத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் பெருமளவானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இடம்பெயர்ந்த மக்கள் பலர் அங்கு தங்கியிருந்த நிலையில் தேவாலய வளாகத்தை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. கிரேக்க ஓர்த்தடக்ஸ் போர்பிரையஸ் தேவாலயத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் மருத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. 12ம் நூற்றாண்டை சேர்ந்த தேவாலயத்திற்கு அருகில் காசாவின் பல முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் தஞ்சமடைந்திருந்த பகுதியை இலக்குவைத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். அதேவேளை […]