ஏவுகணைகள்,ட்ரோன்கள் மூலம் ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு
திங்கட்கிழமை (ஜூன் 23) இரவு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவித்தார்.இதனால் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்துவந்த 12 நாள் போர் முடிவுக்கு வந்தது. போர் நிறுத்த உடன்பாட்டின் படி இருநாடுகளும் தாக்குதல்களில் ஈடுபடக்கூடாது. இந்நிலையில், ஈரான் அடுத்தடுத்து பல ஏவுகணைகளை இஸ்ரேலுக்குள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) பாய்ச்சியதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.தலைநகர் டெல் அவிவ், இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள பீர்ஷெபா பகுதிகளில் கடுமையான வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. […]