பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 3 மாணவர்கள்
தலைமன்னார் ராமேஸ்வரம் இடையில் உள்ள பாக்கு நீரிணையை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்கள் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்கள். இந்த நிகழ்வுக்கான அனுசரணையை மன்னார் ரோட்டரி கழகம் வழங்கியுள்ளது. குறித்த சாதனை நிகழ்வுகள் நேற்றைய தினம் (21) மாலை 4. மணி அளவில் நீச்சல் குழுவினர் தனுஷ்கோடி கரைக்குச் சென்று இன்று (22) காலை 3. மணியளவில் கடலில் குதித்து நீச்சல் நிகழ்வை ஆரம்பித்து மதியம் 1. மணியளவில் தலைமன்னார் கரையை வந்தடைந்தனர். […]