இலங்கை

உயர்தர பொறியியல் தொழிநுட்ப பரீட்சைகள் ஆரம்பம்!

  • July 12, 2023
  • 0 Comments

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பொறியியல் தொழிநுட்ப பாடத்திற்கான நடைமுறைப் பரீட்சைகள் இன்று (12.07) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதிவரை நடைபெறும் இந்த பரீட்சைகளுக்காக 42 நிலையங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர்  லசிக சமரக்கோன் குறிப்பிட்டார். இந்த பரீட்சைக்கு  20,084 பேர் தோற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஏதேனும் நடைமுறை சிக்கல்கள் இருந்தால் 1911 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் லசிக சமரக்கோன் அறிவித்துள்ளார்.

இலங்கை முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்த இலங்கை இளைஞன் பரிதாபமாக மரணம்

  • July 12, 2023
  • 0 Comments

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வினோஜ் யசிங்க ஜெயசுந்தர என்ற இலங்கை இளைஞரின் சடலம் நேற்று மாலை 3.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. செயற்கை நுண்ணறிவை மையமாக வைத்து கணினி பொறியியல் படித்துள்ள அவர், அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் டொக்டர் பட்டமும் படித்து வருகிறார். உயிரிழந்த வினோஜ் யசிங்க ஜயசுந்தர கடந்த மாதம் 22ஆம் திகதி தனது பிஎச்டி தொடர்பான ஆய்வு ஆய்வறிக்கையை சமர்பிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து கனடாவின் […]

ஆசியா

12 ஆவது ஏவுகணையை பரிசோதனை செய்த வடகொரியா!

  • July 12, 2023
  • 0 Comments

வட கொரியா  பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பான் அறிவித்துள்ளது. இது குறித்து ஜப்பானின் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்யைில், வடகொரியா, 12  ஆவது ஏவுகணையை ஏவியதாக அறிவித்துள்ளது. இதனை தென்கொரியாவின் கூட்டு படைத் தலைவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்

ஆசியா

சிங்கப்பூரில் குறைந்த விலையில் செயற்கை இறைச்சி – தீவிர ஆய்வு நடத்தும் அதிகாரிகள்

  • July 12, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் குறைந்த விலையில் செயற்கை இறைச்சியைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய, அதற்கான ஆய்வில் அதிகாரிகள் ஈடுபடவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. CREATE அமைப்பு அந்த திட்டங்களையும் நேற்று தொடங்கியது.பல நாடுகளையும் சேர்ந்த 10 பல்கலைக்கழகங்கள் கூட்டாக ஆய்வில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறைச்சிக்கு மாற்றாகத் தயாரிக்கப்படும் உணவு மேலும் சுவையாக இருப்பதோடு அதிகச் சத்துள்ளதாகவும் இருக்கும் என கூறப்படுகின்றது. புதிய தேசிய ஆய்வின்படி உற்பத்தியின்போது நுண்கிருமிகள் எளிதில் கண்டறியப்படும். அதனால் இறைச்சி வீணாவது குறைக்கப்படும். செலவு குறையும். […]

ஐரோப்பா

கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டால், அதற்கு ஏற்ற வகையில் ஆயுதங்களை பயன்படத்த வேண்டி வரும் – ரஷ்யா!

  • July 12, 2023
  • 0 Comments

அமெரிக்கா உக்ரைனுக்கு கிளஸ்டர் குண்டுகளை வழங்கினால், மாஸ்கோ “அதேபோன்ற” ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார். அமெரிக்கா கடந்த வாரம் உக்ரைனுக்கு கொத்து குண்டுகளை வழங்குவதாக அறிவித்தது. இந்த வகையான குண்டுகள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ளன. ரஷ்யா கிளஸ்டர் வெடிமருந்துகளை வைத்திருப்பதாகவும், ஆனால் இதுவரை தனது இராணுவப் பிரச்சாரத்தில் அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வந்ததாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், […]

ஐரோப்பா

பிரான்ஸில் மூன்று வயதுடைய சிறுமிக்கு நேர்ந்த துயரம்

  • July 12, 2023
  • 0 Comments

பிரான்ஸில் மூன்று வயதுடைய சிறுமி ஒருவர் அவர் வசிக்கும் கட்டிடத்தின் நான்காவது தளத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Yerres (Essonne) நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். மருத்துவக்குழுவினர் உடனடியாக அழைக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போதும், சிறுமியை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி […]

ஐரோப்பா

ஜெர்மனியில் புலம்பெயர்ந்தோருக்கு காத்திருக்கும் நெருக்கடி

  • July 12, 2023
  • 0 Comments

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், சோனேபர்க் என்ற நகரத்தில் நடந்த தேர்தலில், ஏ.எப்.டி., கட்சி வென்றுள்ளமையினார் புலம்பெயந்தோருக்கு நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதென தெரியவந்துள்ளது. கடந்த 2013ல் துவக்கப்பட்ட இந்தக் கட்சி, புலம்பெயர்ந்து வந்துள்ள அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தக் கொள்கை, ஜெர்மனி மக்களிடையே பிரபலமானது. இதையடுத்து, இந்தக் கட்சிக்கு மக்களிடையே ஆதரவு பெருகத் துவங்கியது. சமீபத்தில் சோனேபர்க் நகரத்தில் நடந்த தேர்தலில், இந்தக் கட்சி வென்றுள்ளது. அடுத்தாண்டு இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள […]

ஐரோப்பா

ஐரோப்பாவை உலுக்கிய காலநிலை – கடந்த ஆண்டு 60,000 பேரின் உயிரை பறித்த வெப்பம்

  • July 12, 2023
  • 0 Comments

ஐரோப்பாவில் கடுமையான வெப்பம் காரணமாக 60,000 பேர் மரணித்திருந்ததாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு பதிவாகிய மரணங்கள் தொடர்பில் வெளிவந்த புள்ளிவிபரங்களுக்கமைய இந்த விடயம் வெளியாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் கோடை காலம் மிகவும் அதிக வெப்பம் நிலவிய ஆண்டாக அமைந்திருந்தது. ஐரோப்பா முழுவதும் பலத்த வெப்பமும், அதன் காரணமாக பல மரணங்களும், பலத்த வறட்சியும் நிலவிய மறக்கமுடியாத ஆண்டாக அமைந்திருந்தது. கடந்த ஆண்டில் ஐரோப்பா முழுவதும் 60,000 பேர் மரணித்துள்ளனர். அதிகளவு மரணம் சம்பவித்த […]

ஐரோப்பா

அமெரிக்காவின் பல மாநிலங்களை வெப்ப அலை தாக்கும் அபாயம்!

  • July 12, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் பல மாநிலங்களில், இந்த வாரம் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள ஃபீனிக்ஸ் நகரம், தென்மேற்கு பகுதிகளில் வெப்பநிலை அதிகபட்சமாக 120F (49C) இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் வெப்பநிலை மும்மடங்காக உயர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது. வெப்பச் சலனம் சில நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். கலிபோர்னியாவில், சில பகுதிகளில் […]

ஆசியா

உக்ரைனுக்கு 65 மில்லியன் டொலர் உதவியை வழங்கும் பிரித்தானியா!

  • July 12, 2023
  • 0 Comments

போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு 65 மில்லியன் டொலர் உதவியை தொகுப்பை பிரித்தானியா அறிவித்துள்ளது. உக்ரைனில் இராணுவ மறுவாழ்வு மையத்தை அமைக்கவும், உபகரணங்களை பழுதுபார்ப்பதற்காகவும் 50 மில்லியன் பவுண்டுகள் ஆதரவுப் பொதியை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வார நேட்டோ உச்சிமாநாட்டில் விவாதிக்கப்படும் புதிய ஆதரவின் கீழ், UK மற்றும் G7 உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கான கூடுதல்  சேலஞ்சர் 2 வெடிமருந்துகள் மற்றும் 70 க்கும் மேற்பட்ட போர்  தளவாட வாகனங்களை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

You cannot copy content of this page

Skip to content