இலங்கை

அநுராதபுரத்திற்கும் – ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

  • July 13, 2023
  • 0 Comments

அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் சனிக்கிழமை (15) மீண்டும் ஆரம்பிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பாதை புனரமைப்புக்காக குறித்த சேவை தற்காலிகமாக நிறுத்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் 33 பில்லியன் ரூபாய் செலவில் குறித்த பாதை மீளவும் புனரமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் மணிக்க 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் என ரயில்வே திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில்களுக்கான ஆசன […]

இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – காதலிக்கு ஹெரோயின் கொடுத்து காதலன் செய்த செயல்

  • July 13, 2023
  • 0 Comments

வெலிப்பன்ன பிரதேசத்தில் இருபது வயதுடைய காதலியிக்கு காதலன் என்று கூறும் 22 வயதுடைய இளைஞன் பல சந்தர்ப்பங்களில் ஹெரோயின் போதைப்பொருளை பாவிக்க பயிற்சித்துள்ளார். யுவதியின் தாயார் யுவதியுடன் பொலிஸில் வந்து முறைப்பாடு செய்துள்ளார். பல மாதங்களாக இந்த பெண்ணுடன் காதல் உறவைப் பேணி வந்த அவர், பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அவஐம் ஹெரோயின் போதைப் பொருளை பாவித்து, தமக்கும் வழங்கியதாகவும் பின்னர் தன்னை தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் யுவதி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் […]

இலங்கை

யாழில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

  • July 13, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் பலாலி பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் தன்னை துன்புறுத்தி துஷ்பிரயோகம் செய்வதாக பாடசாலை அதிபருக்கு அறிவித்ததையடுத்து அதிபர் பலாலி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பலாலி பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மாணவிகளிடம், வாக்குமூலங்களை பெற்ற பின்னர், மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆசியா

சீனாவை புரட்டிப் போட்ட வெள்ளம் – வெளியேற்றப்பட்ட 40,000க்கும் மேற்பட்டோர்

  • July 13, 2023
  • 0 Comments

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். வெள்ள பாதிப்பின் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. சீனாவில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால், பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டதோடு, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். பலர் உயிரிழக்கவும் நேர்ந்தது. ஹெனான், ஜியாங்சு, குவாங்டாங் உள்ளிட்ட மாகாணங்களிலும் மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், வியாழன் காலை வரை கனமழை தொடரக்கூடும் என […]

ஐரோப்பா

பல்கேரியா நாட்டில் ஒளிப்பிழம்புடன் விழுந்த விண்கல் – அதிர்ச்சியில் மக்கள்

  • July 13, 2023
  • 0 Comments

பல்கேரிய நாட்டின் தலைநகருக்கு அருகே வானில் இருந்து ஒளிப்பிழம்புடன் விண்கல் ஒன்று விழுந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு பல்கேரிய தலைநகர் சோபியாவில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில், பால்கன் மலைத்தொடரை ஒட்டி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த ஒளிப்பிழம்புடன் விண்கல் விழுந்த போது, சில வினாடிகளுக்கு வானம் பிரகாசமாக காட்சியளித்தது. விண்கல் விழுந்த போது பலத்த சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் […]

ஆசியா

நிதி நெருக்கடியால் போர் விமானங்களை விற்கும் பாகிஸ்தான்!

  • July 13, 2023
  • 0 Comments

போர் விமானங்களை விற்பதன் மூலம் நிதிநெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி சில ஆண்டுகளுக்கு முன்பு கொள்வனவு செய்த 1.1 பில்லியன் மதிப்புடைய போர் விமானங்களை, ஈராக்கிற்கு விற்பனை செய்ய அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர சர்வதேச நாயண நிதியத்தின் உதவியை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பொலிஸ் சேவையில் விண்ணப்பித்துள்ள 15,000 வெளிநாட்டவர்கள்

  • July 13, 2023
  • 0 Comments

குயின்ஸ்லாந்து பொலிஸ் சேவையில் வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்தும் திட்டத்திற்கு கிட்டத்தட்ட 15,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆண்டுக்கு 500 வெளிமாநில தொழிலாளர்களை 05 ஆண்டுகளுக்கு வேலைக்கு அமர்த்த மாநில பொலிஸாருக்கு கடந்த பெப்ரவரி மாதம் மாநில அரசும், மத்திய அரசும் அனுமதி வழங்கியது. சிங்கப்பூர் – பிஜி – தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளதாக குயின்ஸ்லாந்து மாநில பொலிஸ் துறையும் அறிவித்திருந்தது. முதல் அணி ஒக்டோபர் மாதத்திற்குள் பயிற்சியைத் தொடங்க உள்ளது. குயின்ஸ்லாந்து பொலிஸ் […]

இலங்கை

இலங்கையில் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட இரு மயக்க மருந்துகள்!

  • July 13, 2023
  • 0 Comments

இலங்கையில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திய இரு மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார அமைச்சு இந்த விடயத்தை அறிவித்துள்ளது. அவற்றுக்குப் பதிலாக வேறு மயக்க மருந்தொன்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். புதிய மயக்க மருந்து இன்று நாட்டுக்கு வருமெனவும் அவர் கூறினார். கடந்த காலங்களில் சில வகையான மயக்க மருந்தைப் பயன்படுத்தி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்கள் சிலர், உயிரிழந்தனர். இதையடுத்து, மயக்க மருந்து […]

இலங்கை

டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதை துல்லியமாக காட்டும் காணொலி வெளியீடு!

  • July 13, 2023
  • 0 Comments

டைட்டானிக் நீர்மூழ்கி கப்பலை பார்வையிட சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியது. அதில் பயணித்த ஐவரும் உயிரிழந்தனர். இந்நிலையில், டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் எவ்வாறு வெடித்துச் சிதறியது என்பதை விளக்கும் வகையில் காணொலி ஒன்று யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த காணொலியை 11 நாட்களில் ஐந்து மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர். புதிய அனிமேஷன், பிளெண்டர் எனப்படும் திறந்த மூல மென்பொருளைப் பயன்படுத்தி,வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காணொலி, தற்போது உள்ள தொழிநுட்பம் எவ்வாறு மேம்பட்டுள்ளது […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஒரே நாளில் 2வது முறை செயலிழந்த ‘ChatGPT’..!

  • July 13, 2023
  • 0 Comments

உலக புகழ் பெற்ற ChatGPT இரண்டாவது நாளாக உலக அளவில் செயலிழந்துள்ளதைாக தெரியவந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தில், மிகவும் பிரபலமாக வளர்ந்து வரும் Open AI நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ChatGPT, 24 மணி நேரத்திற்குள் 2 வது முறையாக உலக அளவில் செயலிழந்துள்ளது. இதனால் பயனர்கள் உரையாடல்களை சேமித்து வைக்கவோ அல்லது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. ஓபன் ஏஐ சிஸ்டம் ஆனது ChatGPT செயல்படுவதாக கூறினாலும், ட்விட்டரில் சில பயனர்கள் இந்த […]

You cannot copy content of this page

Skip to content