புட்டினுக்கு உடல்நலக் குறைவா : கிரெம்ளின் வெளியிட்ட தகவல்!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு உடல் நலக்குறைவு என கூறப்படும் கருத்துக்களை கிரெம்ளின் நிராகரித்துள்ளது. அவர் நலமுடன் இருப்பதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். அதேபோல் அண்மைக்காலமாக மேற்கத்தேய ஊடகங்கள் சில ஜனாதிபதி புட்டினை போல் போலியானவர் இருப்பதாகவும், சில சமயங்கள் பொது நிகழ்ச்சிகளில் குறித்த போலியான நபர் பங்கேற்பதாகவும் செய்திகளை வெளியிட்டிருந்தன. அந்த தகவல்களையும் டிமிட்ரி பெஸ்கோவ் மறுத்துள்ளதுடன், இவை அப்பட்டமான புரளி எனவும் தெரிவித்துள்ளார்.