ஆசியா செய்தி

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் புதிய நிதி அமைச்சரை அறிவித்த சீனா

  • October 24, 2023
  • 0 Comments

பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான முயற்சியில் அரசாங்கம் நிதி ஊக்குவிப்புகளை அதிகரித்து வரும் நிலையில், புதிய நிதி அமைச்சராக லான் ஃபோன் என்ற தொழில்நுட்ப வல்லுநரை சீனா நியமித்துள்ளது என்று மாநில ஊடகங்கள் தெரிவித்தன. கடந்த மாதம் நிதியமைச்சகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட 61 வயதான லான் ஃபோன், 2018 முதல் நிதியமைச்சராக இருந்த லியு குனுக்குப் பிறகு பதவியேற்றுள்ளார். முன்னதாக, லான் வடக்கு சீன ஷாங்க்சி மாகாணத்தின் கட்சித் தலைவராக இருந்தார். லான் ஃபோனின் நியமனம், […]

இந்தியா

கோவை அருகே பள்ளத்தில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்து- இருவர் பலி

மூலக்காடு எனும் பகுதி அருகில் சுமார் 20 அடி பள்ளத்தில் ஆட்டோ ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் உதவி ஆய்வாளர் ஆறுமுகநயினார் மற்றும் போலீசார், பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி நமச்சிவாயம், ஆய்வாளர் தாமோதரன், ஆகியோர் ஊர் மக்கள் உதவியுடன் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்தவர்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

ஐரோப்பா செய்தி

குடியுரிமை குறித்து மேல்முறையீடு செய்த ISISல் இணைந்த இங்கிலாந்து பெண்

  • October 24, 2023
  • 0 Comments

தனது இளமை பருவத்தில் இஸ்லாமிய அரசு ஜிஹாதி போராளியை திருமணம் செய்து கொள்வதற்காக பிரிட்டனை விட்டு வெளியேறிய பெண் ஒருவர் தனது குடியுரிமையை ரத்து செய்ததை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 24 வயதான ஷமிமா பேகத்தின் வழக்கறிஞர், லண்டனில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், தனது வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டிய சட்டப்பூர்வ கடமைகளை ஆட்கடத்தலுக்குப் பலியாகக் கருதுவதற்கு உள்துறை அலுவலகம் தவறிவிட்டது என்று கூறினார். “மேல்முறையீட்டாளரின் கடத்தல் பொது நலனுக்கு உகந்ததா மற்றும் அவரது குடியுரிமையைப் […]

இலங்கை

முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை.: கணவன் கைது

முல்லைத்தீவு நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதேநேரம் குடும்ப தலைவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். நீராவிபிட்டி கிழக்கு பகுதியில் அண்மைய சில நாட்களாக வாடகைக்கு வீடு ஒன்றை பெற்று தங்கி வந்த இளம்குடும்ப பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்பாகவுள்ள மலசலகூடத்திற்கு அருகே குழி தோண்டி புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த பெண்ணும் த.கீதா […]

விளையாட்டு

CWC – 382 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

  • October 24, 2023
  • 0 Comments

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் ஹென்ரிக்ஸ் 12 ரன்களை எடுத்த போது அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இவரைத் தொடர்ந்து வந்த டுசென் 1 ரன்னில் நடையை […]

ஆசியா

பதவி நீக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சர்… அரசு அறிவிப்பால் பரபரப்பு!

  • October 24, 2023
  • 0 Comments

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மாயமான சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லீ சாங்ஃபூ, அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்து வந்தவர் லி சாங்ஃபூ. சீன அரசு மற்றும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய நபராக லி இருந்து வந்தார். குறிப்பாக அதிபர் ஜி ஜின்பிங்க்கு நெருக்கமானவராக லி அறியப்பட்டிருந்தார். ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் கொள்முதல் செய்வதில் முன்னோடியாக இருந்து வந்த லி சாங்ஃபூவை அமெரிக்காவிற்குள் […]

வட அமெரிக்கா

நடுவானில் விமான இன்ஜினை நிறுத்த முயன்ற விமானி; அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!

  • October 24, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானி அதன் இன்ஜினை நிறுத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, காக்பிட்டில் இருந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் ஒருவர் திடீரென விமானத்தின் இன்ஜின்களை நிறுத்த முயன்ற சம்பவம் நடந்துள்ளது. அந்த விமானி அப்போது பணியில் இல்லை. அவர் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். பணியில் இருந்த விமானியின் கண்களில் மண் தூவிவிட்டு எஞ்சினை நிறுத்தவதற்கு இவர் முயன்றுள்ளார். இது […]

இலங்கை

வாக்காளர்களுக்கு கையூட்டல் வழங்கியதாக சுவிஸ் அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு

சுவிட்சர்லாந்தின் பிரபல அரசியல்வாதியான கிறிஸ்டோபர் புளொச்சர் வாக்காளர்களுக்கு கையூட்டல் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுமார் 15,000 சுவிட்சர்லாந்து பிரஜைகளுக்கு இவ்வாறு கையூட்டல் வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுவிஸ் மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களில் குறித்த அரசியல்வாதி ஐந்து மில்லியன் சுவிஸ் பிராங்குகளை முதலீடு செய்திருந்தார் என ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது. வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறு நிதி செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முதலீட்டு முறைமை ஒன்றின் மூலம் எந்தவொரு சுவிட்சர்லாந்து பிரஜையும் இந்த முதலீட்டு திட்டத்தின் ஊடாக நன்மை […]

பொழுதுபோக்கு

விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’…. அனல் பறக்கும் ஆக்ஷன்… வெளியானது ட்ரைலர்

  • October 24, 2023
  • 0 Comments

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாக இருந்த திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. பின்னர், ஒரு சில காரணங்களால் சூர்யா துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து விலகிய பின்னர் விக்ரம் இப்படத்தின் உள்ளே வந்தார். இதைத்தொடர்ந்து, இந்த படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு 2017 ஆம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் முழுமையாக எடுத்து முடிக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதைத்தொடர்ந்து கௌதம் மேனன் அடுத்தடுத்த படங்கள் இயக்குவதிலும், நடிப்பதிலும் பிஸியானார். சமீபத்தில் மீண்டும் துவங்கப்பட்ட […]

இலங்கை

தாதியர்களுக்கு வெளியாகியுள்ள விசேட அறிவித்தல்…

  • October 24, 2023
  • 0 Comments

அரச தாதியர் சேவையில் தரம் நான்கைச் சேர்ந்த தாதியர்கள் 60 வயதில் கட்டாயமாக ஓய்வுபெற வேண்டுமென மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தை ரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (24) உத்தரவு பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், ஏற்கனவே ஓய்வு பெற்ற அந்தந்த பதவிகளில் உள்ளவர்களையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.