இலங்கை

மன்னார் – விடத்தல் தீவு கடற்பரப்பில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கப்பட்ட மீனவர்

  • October 25, 2023
  • 0 Comments

மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில் வைத்து மீனவர் ஒருவரை கட்டி வைத்து கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியானது. மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில் உள்ள மீனவர் ஒருவரின் அட்டை பண்ணையில் இருந்து கடல் அட்டையை திருடியதாக கூறி மீனவர் ஒருவரை பிடித்து வைத்து கொடூரமாக தாக்கி வீடியோ காட்சி பதிவு செய்த நிலையில் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் திங்கள் அதிகாலை இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.கடும் தாக்குதலுக்கு உள்ளானவர் இலுப்பைக் கடவை […]

ஐரோப்பா

கோகோயின் கடத்த முயன்ற பிரித்தானிய மாடல் அழகி சிறையில்

நாட்டிற்கு வெளியே கோகோயின் கடத்த முயன்றபோது பிடிபட்ட பிரித்தானிய மாடல் மற்றும் TikToker பெருவியன் சிறையில் ஆறு ஆண்டுகள் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது செப்டம்பர் 30 அன்று ஜோர்ஜ் சாவேஸ் சர்வதேச விமான நிலையத்தில் தனது சூட்கேஸில் 2.9 கிலோ) கோகோயின் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். . விசாரணையின் போது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது, மேலும் அபராதமும் விதிக்கப்பட்டது.  

ஐரோப்பா

ஸ்பெய்ன், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்குள் நுழைய பிரித்தானியா விசா கட்டணம் செலுத்த வேண்டும்!

  • October 25, 2023
  • 0 Comments

பிரெக்சிட்டில் இருந்து பிரித்தானிய விலகிய பிறகு பிற ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும்போது முன் அனுமதியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பியப் பயணத் தகவல் மற்றும் அங்கீகார அமைப்பு (ETIAS) இது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் செல்ல £6 (€7) செலவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விசா விலக்கு அளிக்கப்பட்ட 60 நாடுகளில் இருந்து 1.4 பில்லியன் மக்களுக்குக் கிடைக்கும் அனுமதியை, […]

ஐரோப்பா

ஹோட்டலில் ஆசையாக சாலட் வாங்கிசாப்பிட்ட இளம்பெண்கள் இருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி !

  • October 25, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் இளம்பெண்கள் இருவர் உணவகம் ஒன்றில் வாங்கிய உணவில் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், ஜெனீவா மாகாணம் முழுவதையும் பரபரப்பாக்கியுள்ளது. ஜெனீவா மாகாணத்தில், இளம்பெண்கள் இருவர் ஹொட்டலில் உணவு வாங்கி சாப்பிட ஆசைப்பட்டிருக்கிறார்கள். அதன்படி, Montbrilliant என்னும் நிறுவனத்தின் ஹொட்டல் ஒன்றில் உணவு வாங்கியிருக்கிறார்கள். சாலடை அவர்கள் சாப்பிட முயலும்போது, அதில் ஏதோ வித்தியாசமாக தென்படவே, அது என்ன என்று கவனித்துப்பார்த்தால், ஒரு செத்த எலி சாலடில் கிடந்திருக்கிறது. சாப்பாட்டைப் பார்த்துக் குமட்டிக்கொண்டு எழுந்த இளம்பெண்களை […]

ஐரோப்பா

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் மூத்த அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு

ரஷ்யாவின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு, கிழக்கு உக்ரைனில் உள்ள கட்டளை பதவிக்கு விஜயம் செய்த போது, ​​குளிர்காலத்திற்காக ராணுவ வீரர்களை தயார்படுத்துமாறு மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக ராணுவம் புதன்கிழமை தெரிவித்துள்ளது . ஆன்லைனில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், ஷோய்கு வோஸ்டாக் கட்டளை இடுகையைப் பார்வையிடுவதைக் காட்டினார், அங்கு அவர் முன் வரிசையில் நிலைமை குறித்து விளக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜெனரல் எப்போது இந்த விஜயத்தை மேற்கொண்டார் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கவில்லை. ஷோய்கு குளிர்காலப் போருக்கான தற்போதைய […]

இலங்கை

முல்லைத்தீவு பகுதியில் இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் கணவர் வழங்கிய வாக்குமூலம்!

  • October 25, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு – நீராவிப்பிட்டி பகுதியில் இளம் பெண்ணை கொலை செய்து வீட்டின் கழிப்பறை பகுதியில் சடலத்தை புதைத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கொலைக்கான காரணம் குறித்து பெண்ணின் கணவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதன்படி அவர் வழங்கிய வாக்குமூலத்தில்,  எங்கள் இருவருக்கு இடையிலும் ஒவ்வொருநாளும் குடும்ப பிரச்சினை ஏற்படும். சம்பவம் தினத்தன்று இருவரும் தாக்கிக்கொண்டோம். நான், மனைவியின் கழுத்தில் தாக்கினேன், அவள் நிலத்தில் விழுந்தாள், நீண்ட நேரம் எழும்பவில்லை தொட்டுப்பார்த்தேன் இறந்துவிட்டாள். என்னசெய்வதென்று தெரியாமல், வீட்டுக்கு பின்புறமாக […]

இலங்கை

திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக பொறுப்பேற்று கொண்ட திருமதி.பி.கயல்விழி

  • October 25, 2023
  • 0 Comments

திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் திருமதி.பி.கயல்விழி கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு வருடார்ந்த இடமாற்றத்தின் அடிப்படையிலும் தகுதியின் அடிப்படையிலும் திருமதி.பி.கயல்விழி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.அதன் அடிப்படையில் அவர் தனது கடமைகளை இன்று (25) பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் மூதூர் தள வைத்தியசாலையின் அத்தியட்சகராகவும், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. திருகோணமலை வைத்தியசாலையில் பல்வேறுபட்ட குறைபாடுகள் நிலவுவதாகவும் அவை சீர் செய்யப்பட்டு நோயாளர்களுக்கு சிறந்த சேவையினை வழங்க […]

இலங்கை

இனி ஐநா அதிகாரிகளுக்கு விசா கிடையாது; இஸ்ரேல் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

  • October 25, 2023
  • 0 Comments

ஹமாஸுக்கு எதிரான போரில், இஸ்ரேல் மீது ஐநா சபை குற்றம்சாட்டியிருந்த நிலையில் இனி ஐநா அதிகாரிகளுக்கு விசா வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர், நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில் அங்கு குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதிகள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக பேசி இருந்த ஐநா பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டேரஸ், ஹமாஸ் மீதான பதிலடி […]

உலகம்

பிரான்சில் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் காவல்துறையினரால் கைது

பரிசில் உள்ள மிகவும் நெருக்கடியான தொடருந்து நிலையமான Gare de Lyon இற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் ஒக்டோபர் 19 ஆம் திகதியன்று குறித்த நிலையத்துக்கு மின்னஞ்சல் ஊடாக வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்திருந்தார். அதையடுத்து தொடருந்து நிலையத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, சேவைகள் நிறுத்தப்பட்டது. வெடிகுண்டு அகற்றும் படையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்டிருந்தனர். பின்னர் அது ஒரு போலி அச்சுறுத்தல் என தெரிவிக்கப்பட்டது. அவருக்கு 1500 யூரோக்கள் குற்றப்பணமும், தொடருந்து […]

இலங்கை

சதொசவில் சில பொருட்களின் விலை குறைப்பு!

  • October 25, 2023
  • 0 Comments

லங்கா சதொசவில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு கிலோ சம்பா அரிசியின் விலை 06 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது, ஒரு கிலோ உளுந்தின் விலை 6 ரூபாவினாலும், பருப்பு கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், சிவப்பு அரிசி கிலோ ஒன்று 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலைத்திருத்தத்திற்கு அமைய சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 222 ரூபாவாகவும், ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை 549 ரூபாவாகவும், ஒரு கிலோ பருப்பின் விலை […]