இலங்கை

யாழ் – ஊர்காவற்துறையில் மாணவியை கடுமையாக தாக்கிய அதிபர் கைது!

  • July 16, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் குறித்த பாடசாலை அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்று (16) கைதுசெய்துள்ளனர். மாணவியை பாடசாலையில் வைத்து அதிபர் கடுமையாக தாக்கியதில் மாணவியின் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில், மாணவி தாக்கப்பட்டமை குறித்து மனித உரிமை ஆணைக்குழு பொலிஸாரிடம் வினாவியபோது, தாம் அதிபரை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், நாளை திங்கட்கிழமை […]

இலங்கை

சீனாவின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவர் இலங்கை வரவுள்ளார்!

  • July 16, 2023
  • 0 Comments

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான  யுவான் ஜியாஜுன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இவர் சீனாவில் உள்ள சோங்கிங் நகர சபையின் செயலாளராகவும் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. யுவான் ஜியாஜூனின் இலங்கை விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக […]

இந்தியா ஐரோப்பா

பிரம்மோஸ் ஏவுகணையை ரஷ்யாவிற்கு விற்க இந்தியா திட்டம்

  • July 16, 2023
  • 0 Comments

ரஷ்யாவுக்கு பிரம்மோஸ் ஏவுகணையை விற்பனை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ரஷ்ய இந்திய கூட்டமைப்பில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை ரஷ்யாவிக்கு தர இந்தியா ஒப்பு கொண்டால் அது இருநாட்டு ராணுவ பாதுகாப்பு நிலைப்பாட்டை மாற்றியமைக்கும் என்று கூறப்படுகிறது. உக்ரைன் போருக்கு பின்னர் அது குறித்து ஒப்பந்த ம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. பிரம்மோஸ் சூப்பர்சொனிக் ஏவுகணைக்கு சந்தையாக ரஷ்யா கிகழும் என்று பிலம்மோஸ் ஏவுகணை முதன்மை நிர்வாக அதிகாரியும் MDயுமான அதுல் தினகர் ரானே […]

இலங்கை

நாட்டை அழிக்க நடத்தப்பட்ட சதி குறித்து அம்பலப்படுத்தினார் சாகார!

  • July 16, 2023
  • 0 Comments

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது நடந்த எந்தவொரு குழப்பகரமான விடயங்களும் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டப்பின் காணாமல்போனது எப்படி என கேள்வி எழுப்பும் வகையில், பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகார காரியவசம் சில விடயங்களை குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தெல்தெனிய தொகுதிக் குழுக் கூட்டம் நேற்று (15.07) நடைபெற்றது. இதில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்  சாகர காரியவசம் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சில விடயங்களை குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வில் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் […]

செய்தி

அவசரநிலை பிரகடனத்தை அறிவித்துள்ள நைஜீரியா

  • July 16, 2023
  • 0 Comments

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களால் விவசாயிகள் கடத்தப்படுவதால் அவர்களுக்கான பாதுகாப்பை நைஜீரிய அரசு அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நைஜீரிய அதிபர் போலா டின்பு தெரிவித்துள்ளார்.

பொழுதுபோக்கு

ஷாருக்கானுக்காகத்தான்… காசுக்காக இல்லை… மனம் திறந்த மக்கள் செல்வன்

  • July 16, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் சேதுபதி கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னுடைய படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மிக குறுகிய காலகட்டத்திலேயே இவர் தனது 50வது படத்தை நெருங்கியுள்ளார். மகாராஜா என்ற இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. தமிழில் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட் என தன்னுடைய படங்களின் எல்லைகளை விஜய் சேதுபதி விரிவுப்படுத்திக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி தமிழில் துணை கேரக்டர்களில் நடித்து அதன்மூலம்தான் கதாநாயகன் வாய்ப்பை பெற்றார். தனக்கு கிடைத்த […]

தென் அமெரிக்கா

அமேசன் காடுகளில் சட்டவிரோத அகழ்வு நடவடிக்கை ; 57 பேர் கைது, படகுகளிற்கு தீ வைப்பு

  • July 16, 2023
  • 0 Comments

பொலிவியாவில் சட்டவிரோதமாக ஈடுபட்டுவரும் தங்க சுரங்கங்களில் அதிரடி சோதனை நடத்திய ராணுவத்தினர் அதில் ஈடுபட்ட 57 பேரை கைது செய்தனர். அமோசன் காடுகள் வழியாக பாயும் ஆறுகளுக்கு அடியில் உள்ள மணற்பரப்பில் தங்கத் துகள்கள் கலந்திருப்பதால் அந்த மணலை டிரெட்ஜெர் படகுகள் மூலம் அள்ளி தங்க துகள்கள் சலித்தெடுக்கும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் , மீன்களின் இனப்பெருக்கம் கடுமையாக பாதிப்படைகிறது. பெனி என்ற பகுதியில் பொரிஸாரும் ராணுவத்தினரும் 6 நாட்கள் நடத்திய தேடுதல் […]

ஐரோப்பா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வைத்தியசாலையில் அனுமதி!

  • July 16, 2023
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் வெப்பமான காலநிலையால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 73 வயதான அவர் , நாட்டின் கலிலி பகுதியில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் விடுமுறையில் இருந்தபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி, நீரிழப்பு காரணமாக பிரதமர் உள்ளூர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாலியில்  வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாகவும், ஹெல்மெட் அணியாததால் தான் நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவமனையில் […]

வட அமெரிக்கா

அலாஸ்கா பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் வாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

  • July 16, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது, கடலுக்கடியில் 9.3 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை

ஜனாதிபதிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

  • July 16, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான மற்றுமொரு கலந்துரையாடல் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்கிழமை (18.07) பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்யன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. அந்த கலந்துரையாடலின் போது ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான பிரச்சினைகளுக்கு […]

You cannot copy content of this page

Skip to content