தமிழ்நாடு

டெலிவரி செய்யப்பட்ட பார்சல் …திறந்ததும் மயங்கி விழுந்த முதியவர் !

  • October 27, 2023
  • 0 Comments

பிரபல ஒன்லைன் வணிக நிறுவனத்தில் மின்வயரை ஆர்டர் செய்த முதியவருக்கு கடைசியில் அதிர்ச்சி காத்திருந்தது. தமிழக மாவட்டம், நாகப்பட்டினத்தில் உள்ள வேதாரண்யம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவர், கடந்த 18ம் திகதி வீட்டிற்கு தேவையான மின்சார வயரை ஒன்லைன் வணிக நிறுவனம் ஒன்றில் ஆர்டர் செய்துள்ளார். பின்பு, அதற்கான தொகை 990 ரூபாயையும் 21ம் திகதி ஒன்லைனில் செலுத்தினார். இந்நிலையில், நேற்று மாலை வணிக நிறுவனத்தில் இருந்து பார்சல் டெலிவரி வந்துள்ளது.அதனை வாங்கி வைத்த வேலாயுதம், வீட்டில் […]

ஆசியா

காசா மீது தாக்குதல் ;அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான்

  • October 27, 2023
  • 0 Comments

காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் எரியும் இஸ்ரேல் தீயில் இருந்து அமெரிக்கா தப்ப முடியாது என ஈரான் அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் இன்றுடன் 21வது நாளை எட்டியுள்ளது. கடந்த 21 நாட்களில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,405 இஸ்ரேலிய மக்கள் கொல்லப்பட்டதாகவும், 5,431 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், காசா பகுதியை நோக்கி இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 7,028 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 17,439 பேர் […]

இலங்கை

மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

மத்திய கிழக்கில் இலங்கையர்களின் அவசர உதவிகளுக்காக தொலைப்பேசி வசதியொன்றை வௌிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலை காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 0094711 757 536 அல்லது 0094711 466 585 என்ற இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவின் +94 112 338 837 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அலுவலக நேரத்தில் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என […]

உலகம்

புலம்பெயர்ந்தோருக்கு அவசரகால தங்குமிடத்தை உருவாக்கும் ஸ்பெயின்

கடல் வழியாக 55% புலம்பெயர்ந்தோர் வருகைக்கு மத்தியில் 3,000 புலம்பெயர்ந்தோருக்கு அவசரகால தங்குமிடத்தை ஸ்பெயின் உருவாக்குகிறது ஜனவரி முதல் அக்டோபர் நடுப்பகுதி வரை, கேனரிகளுக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 23,537 பேரை எட்டியுள்ளது, இது முந்தைய மூன்று ஆண்டுகளின் முழு ஆண்டு புள்ளிவிவரங்களை ஏற்கனவே விஞ்சியுள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்பெயின் வியாழனன்று 3,000 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு இராணுவ முகாம்கள், ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் கூடுதல் அவசர விடுதிகளை உருவாக்குவதாகக் கூறியது, இந்த ஆண்டு […]

இலங்கை

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக யாழில் கவலயீர்ப்பு போராட்டம்

  • October 27, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வெள்ளி ஜும்மா தொழுகையினை தொடர்ந்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் மெளலவிகள், முஸ்லிம் வர்த்தகத்தினர், நலன்விரும்பிகள் மற்றும் கலந்து கொண்டனர்.

ஆசியா

‘மாலத்தீவை விட்டு இந்திய ராணுவம் வெளியேறட்டும்…’புதிய அதிபர் அழுத்தம்

  • October 27, 2023
  • 0 Comments

நவம்பர் மாத்த்தின் மத்தியில் மாலத்தீவு தேசத்தின் புதிய அதிபராக பதவியேற்க இருக்கும் முகமது முய்சு, ’மாலத்தீவை விட்டு இந்திய ராணுவம் வெளியேறட்டும்…’ என ஒரு தொலைக்காட்சி பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். அண்மையில் நடந்து முடிந்த மாலத்தீவு தேர்தலில் நடப்பு அதிபரான இப்ராஹிம் முகமது சோலிக்கும், எதிர்க்கட்சியின் முகமது முய்சுவுக்கும் கடும் போட்டி நிலவியது. இப்ராஹிம் முகமது சோலி இந்திய ஆதரவாளர் எனில், முகமது முய்சு சீனாவின் ஆதரவாளர்! தேர்தல் பிரச்சாரத்தின் போதே, ’மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்ற […]

உலகம்

ஹமாஸ் தாக்குதலில் 31 பிரெஞ்சு மக்கள் பலி

ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் 31 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வடைந்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் விபரங்களையும், காணாமல் போனவர்களின் விபரங்களையும் வெளியுறவுத்துறை அமைச்சகம் சேகரிக்க முயன்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 35 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஒன்பது பேர் காணாமல்ன்போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களில் சிலர் ஹமாஸ் இயக்கத்தினரால் பணயக்கைதிகளாக கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

விஜய்யுடன் யாழ் ஜனனி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

லியோ படப்பிடிப்பில் நடிகர் விஜய்யுடன் யாழ். யுவதி ஜனனி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ‘லியோ’ திரைப்படம் வெளியாகி வசூலில் வேட்டையாடி வருகின்றது. ஏழு நாட்களில் மட்டுமே ரூ.461 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் லியோவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இலங்கை பெண் ஜனனி, நடிகர் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தினை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தில் வைரலாகி வருகின்றது.

பொழுதுபோக்கு

நெல்சனுடன் மீண்டும் இணையும் விஜய்… பார்ட்டி வைத்து கூறிய தளபதி

  • October 27, 2023
  • 0 Comments

நெல்சன் திலீப்குமாருடன் விஜய் மீண்டும் இணைவார் என ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தெரிவித்திருக்கிறார். விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, நடித்திருந்த அந்தப் படத்தின் மீது விஜய் ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். ஆனால் பீஸ்ட் படம் விஜய் ரசிகர்களையே திருப்திப்படுத்த தவறியது. விமர்சன ரீதியாக கடுமையான தாக்குதல்களை சந்தித்தது பீஸ்ட் திரைப்படம். குறிப்பாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மீது வரம்பு மீறிய விமர்சனங்கள் வைக்கப்பட்டன. […]

உலகம்

ஹமாஸ் பிரதிநிதிகள் ரஷ்யாவிற்கு விஜயம்

ஹமாஸ் பிரதிநிதிகள் ரஷ்யாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். ஹமாஸ் இயக்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் அபு மர்சூக் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஈரான், இஸ்ரேல், பலஸ்தீன அதிகாரிகள் மற்றும் ஹமாஸ் போராளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களுடனும் ரஷ்யா தொடர்புகளை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஈரானிய பதில் வெளிவிவகார அமைச்சர் அலி பகிரி கானியும் மொஸ்கோவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளை ரஷ்யா விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்த விஜயங்கள் […]