ஐரோப்பா

ரஷ்யாவின் அணுக் கழிவு சேமிப்பு கிடங்கு மீது உக்ரைன் தாக்குதல்!

  • October 28, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் உள்ள குர்ஸ்க் அணுமின் நிலையத்தில் உள்ள அணுக் கழிவு சேமிப்புக் கிடங்கு மீது உக்ரேனிய ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதில், அதன் சுவர்கள் சேதமடைந்ததாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் இன்று (28.10) தெரிவித்துள்ளது. அதன் நடவடிக்கைகள் முழு அளவிலான அணுசக்தி பேரழிவை ஏற்படுத்தியிருக்கலாம் என்பதை கிய்வ் அறிந்திருக்க வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.  

இலங்கை

சமூக ஆர்வலர் டானிஷ் அலிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நேற்று (27) கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டானிஷ் அலிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர் புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வைத்திய பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (28) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உலகம்

எகிப்திய நெடுஞ்சாலையில் தீயில் எரிந்த வாகனங்கள் : 35 பேர் உயிரிழப்பு!

  • October 28, 2023
  • 0 Comments

எகிப்திய நெடுஞ்சாலையில் இன்று (28.10) காலை பேருந்து ஒரு பல கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எகிப்தில் போக்குவரத்து விபத்துக்கள் பொதுவானவை, அங்கு சாலைகள் பெரும்பாலும் மோசமான  நிலையில் இருப்பது அடிக்கடி வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயற்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. “வாடி அல்-நட்ரூனுக்கு அருகே கெய்ரோ-அலெக்ஸாண்டிரியா பாலைவன சாலையில் மேற்படி […]

ஐரோப்பா

அனைத்து சட்டங்களும் முழு அளவில் பயன்படுத்தப்படும் : பிரித்தானிய காவல்த்துறை எச்சரிக்கை!

  • October 28, 2023
  • 0 Comments

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் லண்டனின் பெருநகர காவல்துறை நகரத்தில்  யூத எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய வெறுப்பு  குற்றங்கள் வியத்தகு அளவில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் யூத சமூகங்களுக்கு எதிராக இந்த மாதத்தில் 408 யூத எதிர்ப்பு குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 28 ஆக இருந்த நிலையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றங்களைத் தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மோதலுடன் […]

உலகம்

ஹங்கேரி எல்லையில் துப்பாக்கிச் சூட்டு : 6 பேர் கைது

ஹங்கேரி எல்லையில் குடியேறியவர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேரை செர்பிய போலீசார் கைது செய்துள்ளனர். ஹங்கேரியின் எல்லைக்கு அருகே குடியேறியவர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்ததை அடுத்து, செர்பிய போலீசார் ஆறு பேரை கைது செய்து தானியங்கி ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமாக துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு ஆப்கானிஸ்தான் மற்றும் இரண்டு துருக்கிய பிரஜைகளை கைது செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உலகம்

(UPDATE) கஜகஸ்தான் தொழிற்சாலையில் தீவிபத்து : பலி எண்ணிக்கை 30 ஐக் கடந்தது!

  • October 28, 2023
  • 0 Comments

கஜகஸ்தானில் ஏற்பட்ட சுரங்கத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. அத்துடுன் 18 பேர் காணாமல்போயுள்ளதாக  அவசரகால சூழ்நிலைகளுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது சுரங்கத்திற்குள் 252 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 23 பேரை காணவில்லை என்றும்  அதன் உரிமையாளரான  ஆர்செலர் மிட்டல் டெமிர்டாவ் கூறினார். மீதேன் வாயு வெடிப்பினால் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.  சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பொழுதுபோக்கு

ரஜினிக்கும் எனக்கும் ரகசிய கல்யாணம்? திரையுலகத்தை அதிரவிட்ட செய்தி…

  • October 28, 2023
  • 0 Comments

மூத்த நடிகையான கவிதா, ரஜினியும் நானும் ரகசிய கல்யாணம் செய்து கொண்டதாக பரவி செய்தி குறித்து பேட்டி அளித்துள்ளார். ஓ மஞ்சு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கவிதா. ரஜினி, கமல், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நடிகர் விஜய்யின் முதல் படமான நாளை தீர்ப்பு மற்றும் அஜித் நடித்த முதல் படமான அமராவதி உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை கவிதா. மூத்த நடிகையான நடிகை கவிதா அண்மையில் பேட்டி […]

இலங்கை

கொழும்பு போர்ட் சிட்டியில் புதிய வரியில்லா வாய்ப்புகள்: வௌியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

கொழும்பு துறைமுக நகருக்குள் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கான தேவைகளை கோடிட்டுக் காட்டும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி, வரி இல்லாத சில்லறை வணிகங்களை நடத்த முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய வேண்டும். கூடுதலாக, விளம்பரதாரர் தகுதியுடையவராகக் கருதப்படுவதற்கு, வரியில்லா வர்த்தக நடவடிக்கைகளில் […]

ஆசியா

மியன்மாரில் 4.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்…

  • October 28, 2023
  • 0 Comments

மியான்மர் நாட்டில் ஏற்பட்ட 4.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. ஆசிய கண்டம் மற்றும் ஐரோப்பிய கண்டங்களுக்கு இடையேயான கண்ட தட்டுகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் தோன்றி வருகிறது. இதன் காரணமாக ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலும் சக்திவாய்ந்தது முதல் மிதமான நிலநடுக்கங்கள் வரை பதிவாகி விடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் 6.5 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கியதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை […]

இலங்கை

தமிழர்கள் தொடர்பில் தவறான கருத்துக்கள் வெளியிடும் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் – இரா. சாணக்கியன் காட்டம்

  • October 28, 2023
  • 0 Comments

தமிழ் மக்களுக்கு மிக மோசமாக இந்த பிக்கு கதைக்கும் போது ரணில் விக்ரமசிங்கவினுடைய சப்பாத்தை நக்கி கொண்டு இந்த மாவட்டத்திலேயே இரண்டு ராஜாங்க அமைச்சர்கள் இருப்பது மிகவும் மன வேதனை தரும் ஒரு விடயம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த சாணக்கியன் எம்.பி.,தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக நடக்கும் பொய்யான விடயங்களை […]