பொழுதுபோக்கு

கைதி – 2, விக்ரம் – 2 வரிசையில் இணைந்தது “லியோ 2”… லோகேஷ் உறுதி

  • October 30, 2023
  • 0 Comments

லோகேஷ் – விஜய் கூட்டணியின் முதல் LCU படமாக வெளியான லியோ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படம் LCU ஜானரில் உருவானது குறித்தும், விஜய் அதற்கு ஓக்கே சொன்னது பற்றியும் லோகேஷ் மனம் திறந்துள்ளார். மேலும், லியோ 2ம் பாகம் பற்றியும் லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளார். லியோ படத்தின் கதை, திரைக்கதை, மேக்கிங் குறித்து நெகட்டிவான விமர்சனங்களும் அதிகளவில் வந்தன. குறிப்பாக லியோவில் LCU சரியாக ஒர்க்அவுட் ஆகவில்லை என்றும், விஜய்யின் கேரக்டர் ஸ்கெட்சிங் […]

இலங்கை

வயிற்றுவலியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு : தமிழர் பகுதியில் சோகம்!

  • October 30, 2023
  • 0 Comments

கிளிநொச்சியை பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இரண்டரை வயது குழந்தையின் தாயான இந்துஜன் பானுசா (வயது 20) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 25ம் திகதி இரவு வயிற்று வலி காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,  சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

ஆந்திராவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான பயணிகள் ரயில் : 13 பேர் பலி!

  • October 30, 2023
  • 0 Comments

இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் இன்று (30.10) காலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் 13 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி இயக்கப்படும் பயணிகள் ரயில் விசாகப்பட்டினத்திலிருந்து பலாசா நோக்கி இயக்கப்படும் சிறப்பு பயணிகள் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், சிக்னல்களை காணாத காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு, ஒடிசாவில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில், 280-க்கும் […]

பொழுதுபோக்கு

கவர்ச்சி பற்றிய கேள்வியால் கடுப்பான தமன்னா…. மேடையில் நடந்த சிறப்பான சம்பவம்

  • October 30, 2023
  • 0 Comments

ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கார்த்தியின் படங்களை இயக்கிய இயக்குநர்கள் மற்றும் லோகேஷ் கனகராஜ், சத்யராஜ், விஷால்,ஆர்யா, ஜெயம் ரவி, தமன்னா என பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு நடிகை ரம்பாவின் கணவரின் மேஜிக் ஹோம் ஷோவை திறந்துவைத்தார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய தமன்னா அவர்களின் பல […]

இலங்கை

தபால் ரயிலுடன் மோதி யானை ஒன்று உயிரிழப்பு…!

  • October 30, 2023
  • 0 Comments

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த தபால் ரயிலுடன் இரண்டு யானைகள் மோதியதில் ஒரு யானை உயிரிழந்துள்ளது.இச்சம்பவம் (28) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கிதுல்உதுவ 154ம் கட்டைப் பகுதியில் யானை மின்வேலிகள் சிறந்த முறையில் இல்லாமையினால் யானைகள் அதிகளவில் விபத்துக்குள்ளாகி வருவதாகவும் அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். வழமையாக குறித்த பகுதியில் ரயிலுடன் மோதி யானைகள் உயிரிழப்பதாகவும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் குறித்த விடயத்தில் எது வித கவனமும் செலுத்துவது இல்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர். இனிவரும் காலங்களிலாவது […]

இலங்கை

ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பு?

  • October 30, 2023
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் மோதல்கள் காரணமாக ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடுமென சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்பல் நிறுவனங்கள் தமது காப்புறுதி கட்டணத்தை உயர்த்தியுள்ளதன் காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்கக் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய யுத்த சூழ்நிலையில் கப்பல்கள் சுயஸ் கால்வாயில் பயணிப்பதால் அபாய காப்புறுதி கட்டணத்தை குறித்த கப்பல் நிறுவனங்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனவே, கப்பல்களின் சரக்குக் கட்டணமும் அதிகரிக்கப்படலாம் எனவும் சந்தை […]

ஐரோப்பா

லண்டனில் இந்திய இளம்பெண் ஒருவர் குத்திக்கொலை!

  • October 30, 2023
  • 0 Comments

லண்டனில், நேற்று மாலை இந்திய இளம்பெண் ஒருவர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை உருவாக்கியுள்ளது. நேற்று மாலை 4.10 மணியளவில், லண்டனிலுள்ள Croydonஇல் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு பொலிஸார் அழைக்கப்பட்டார்கள்.ஆம்புலன்ஸ், மருத்துவ உதவிக்குழுவினருடன் விரைந்த பொலிஸார், அந்த வீட்டில் 19 வயது இளம்பெண் ஒருவர், கத்திக்குத்துக் காயங்களுடன் கிடப்பதைக் கண்டுள்ளனர். உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவ உதவிக்குழுவினர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.அந்தப் பெண் ஒரு இந்தியர் என்றும், சமீபத்தில்தான் அவர் இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். […]

இலங்கை

வவுனியாவில் இளம் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

  • October 30, 2023
  • 0 Comments

வவுனியா மன்னார் வீதி பிரதேச செயலகத்திற்கு முற்பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து நேற்று (29.10) இரவு வவுனியா மன்னார் வீதி வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பாதைசாரி கடவை பகுதியில்  இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மின்சார சபையில் பணி புரியும் ஊழியர் ஒருவர் குருமன்காடு கலைமகள் மைதானத்திற்கு அருகில் உள்ள வீட்டிலிருந்து தனது பணி நிமித்தம் முல்லைத்தீவு செல்வதற்காக பேருந்து நிலையம் நோக்கி […]

வட அமெரிக்கா

ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றால் அமெரிக்க்காவுக்கு ஆபத்து -குடியரசு க்கட்சி வேட்பாளர் குற்றச்சாட்டு

  • October 30, 2023
  • 0 Comments

டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்பது அமெரிக்காவுக்கு ஆபத்து என்று குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் நிக்கி ஹாலே குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த வருடம் நடக்கவுள்ளது. இத்தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அவருக்கு எதிராக இந்திய குடியரசு கட்சியைச் சேர்ந்தவரும், ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதியாக இருந்த இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலேவும் அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். நிக்கி ஹாலே தெற்கு கரோலினா மாகாண […]

இலங்கை

மலையகத்துக்கான ரயில் போக்குவரத்து பாதிப்பு!

  • October 30, 2023
  • 0 Comments

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் ரயில் ஒன்று கெயினிகம மற்றும் ஹெய்லோயாவிற்கு இடையில் தடம் புரண்டுள்ளது. இன்று (30.10) முற்பகல் 11.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக மலையகப் பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.