இலங்கை செய்தி

யாழ் மாணவர்களின் எதிர்ப்பால் சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு நிறுத்தம்

  • October 31, 2023
  • 0 Comments

மாணவர்களின் எதிர்ப்பையடுத்து சர்சைக்குரிய சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு நிறுத்தப்பட்டது. இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் வளவாளராக பங்குபற்றும் கருத்தரங்கு ஏற்பாடுசெய்யப்பட்டது. இந் நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடுமையான எதிர்ப்பினையடுத்து குறித்த கருத்தரங்கு இடைநிறுத்தப்பட்டது. அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றிய சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தமிழீழ வுடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என தெரிவித்துருந்தார். இவரது கருத்திற்கு பல்வேறு தரப்புகளும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர் இந் […]

ஆசியா செய்தி

ஹமாஸ் மூத்த தலைவரின் வீட்டை இடித்த இஸ்ரேல்

  • October 31, 2023
  • 0 Comments

காசாவில் போருக்கு மத்தியில் பாலஸ்தீனிய குழுவின் தலைமையை ஆக்ரோஷமாக குறிவைத்த இஸ்ரேல் ஹமாஸின் மூத்த அதிகாரியின் மேற்குக்கரை வீட்டை தகர்த்தது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காட்சிகள் ரமல்லாவுக்கு அருகிலுள்ள அரூரா நகரில் சலே அல்-அரூரியின் வீடு முற்றிலுமாக இடிக்கப்பட்டதைக் காட்டுகின்றன. லெபனானில் புலம்பெயர்ந்து வாழ்வதாக நம்பப்படும் அல்-அரூரி, ஹமாஸின் அரசியல் பணியகத்தின் துணைத் தலைவராக உள்ளார். தாக்கப்பட்ட போது அவரும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் இல்லை. இஸ்ரேலியப் படைகள் 10 நாட்களுக்கு முன்பு அல்-அரூரியின் வீட்டைக் கைப்பற்றி, […]

இலங்கை செய்தி

எல்ல நகரில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

  • October 31, 2023
  • 0 Comments

எல்ல நகரில் இன்று (31) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். எல்ல நகருக்கு அருகில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த ஒருவர் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுலா ஹோட்டல் ஊழியர் ஒருவர் சுடப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை செய்தி

அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட தகவல்

  • October 31, 2023
  • 0 Comments

தற்போதைய சூழ்நிலையில் சம்பளத்தை அதிகரிப்பதற்கு போதிய வருமானம் கிடைக்க வேண்டுமானால் திறைசேரிக்கு கூடுதல் பணம் காணப்பட வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொதுச் சொத்துக்களை விற்பது, வரிகளை மேலும் அதிகரிப்பது, புதிய வரிகளை விதிப்பது போன்றவற்றைக் கண்டுபிடிப்பதற்கான வழிகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ஏதாவது ஒரு வகையில் […]

உலகம் செய்தி

ஜப்பானில் ஒரு மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு

  • October 31, 2023
  • 0 Comments

ஜப்பானில் உள்ள மருத்துவமனையில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் டோடா நகரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரண்டு சந்தேகநபர்கள் தாக்குதல் நடத்த வந்துள்ளதுடன் அவர்கள் 50 மற்றும் 70 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து சந்தேகநபர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களைக் கண்டுபிடிக்கும் பாரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. துப்பாக்கிச் சூட்டில் ஒரு மருத்துவர் மற்றும் ஒரு வயதான நோயாளி […]

உலகம் செய்தி

ஈராக்கில் அமெரிக்க இராணுவ தளம் அருகே ராக்கெட் தாக்குதல்

  • October 31, 2023
  • 0 Comments

ஈராக்கில் இராணுவ தளம் அருகே தொடர் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்க மற்றும் வெளிநாட்டு இராணுவ வீரர்கள் தங்கியுள்ள விமானப்படை தளத்தின் மீதும் தொடர் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தரப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலில் முகாமில் தங்கியிருந்த இராணுவத்தினர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க இராணுவம் நிலைகொண்டுள்ள மத்திய கிழக்கு நாட்டில் உள்ள விமானப்படை தளத்தின் மீதான தாக்குதல் காசா பகுதியில் […]

இலங்கை செய்தி

இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம்

  • October 31, 2023
  • 0 Comments

சிபெட்கோ நிறுவனம் எரிபொருள் விலையை இன்று (31) நள்ளிரவு முதல் திருத்தியமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 92 ஒக்டைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 09 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 356 ரூபாவாகும். 95 ஒக்டைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதன் புதிய விலை 423 ரூபாய். லங்கா டீசலின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மண்ணெண்ணெய் […]

இலங்கை செய்தி

தமிழர்களுக்கான தீர்வை வழங்கும் கடமை, பொறுப்பு சம்பந்தனை சாரும் – ஜெயசேகரன்

  • October 31, 2023
  • 0 Comments

தேவையற்ற விமர்சனங்களுக்கு அப்பால், தற்போதுள்ள தலைவர்களுள் தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட மூத்த தலைவர் என்ற ரீதியில் தமிழ் மக்களுக்கான தீர்வினைப்பெற்றுத்தரும் கடமையும், பொறுப்பும் தங்களுக்கு உள்ளது என்பதை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கவனெத்திலெடுத்து செயற்பட வேண்டும் என தெரிவித்த முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் இ.ஜெயசேகரன், தமிழ் மக்கள் என்றும் தங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்றார். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தனுக்கு இ.ஜெயசேகரன் எழுதிய கடிதத்தில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் ,தமிழ் மக்களின் […]

விளையாட்டு

பலோன் டி’ஓர் விருதை 8வது முறை வென்ற மெஸ்சி

  • October 31, 2023
  • 0 Comments

கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி ‘ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. 1956-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 60 பேர் (30 ஆண் மற்றும் 30 பெண்)  இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பலோன் டி’ஓர் விருதை அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி 8-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு […]

இலங்கை செய்தி

மட்டக்களப்பு-நாவலடி கடற்கரையில் கரையொதுங்கிய ஆணொருவரின் சடலம்

  • October 31, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு,நாவலடி கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆனொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு கருவெப்பங்கேணியை வசிப்பிடமாக கொண்ட 89 வயதுடைய உ.விஜயரத்ன என்பவரே நாவலடி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் காலை 11.00 மணியளவில் நாவலடியில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு வருகை தந்திருந்த இவர் மாலை வேளையில் காணாமல் போயிருந்த நிலையில் நாவலடி மயானத்திற்கு முன்பாக உள்ள கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளிற்கு அமைவாக […]