வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வேலைவாய்ப்பு
ORGANIZATION Ministry of Foreign Affairs POST Recruitment for the Post of Protocol Assistant CLOSING DATE 10.11.2023
ORGANIZATION Ministry of Foreign Affairs POST Recruitment for the Post of Protocol Assistant CLOSING DATE 10.11.2023
இன்று நடைபெற உள்ள ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றிவிழாவில், ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என வெளியாகியுள்ள தகவல் விஜய் ரசிகர்களை உச்ச கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தளபதி நடிப்பில், அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வந்த லியோ திரைப்படம் 12 நாட்களில் 540 கோடி வசூலை வாரி குவித்துள்ளதை தொடர்ந்து, இப்படத்தின் வெற்றியை கொண்டாட தயாராகியுள்ளது படக்குழு. அதன்படி, இந்த படத்தின், சக்ஸஸ் மீட் சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. லியோ படத்தின் ரிலீசுக்கு […]
விவசாயிகளின் ஒத்துழைப்புடன் நாட்டில் மேலதிக அரிசி கையிருப்பைப் பேண முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ. பி. ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நாட்டிற்கு தேவையான மொத்த அளவில் 40 சதவீதமான பால் இதுவரையான காலமும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க […]
கச்சா எண்ணெய்யின் விலை 75 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட எதிர்பாராத அதிரடித் தாக்குதலால் எண்ணெய் விலை அதிகரிக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. பொருளியல் நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸுக்குள் இஸ்ரேல் நுழைந்த பிறகும் எண்ணெய் விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. ஆனால் போரின் போக்கை பொருளியல் நிபுணர்களும் கொள்கை வகுப்பாளர்களும் கூர்ந்து கவனித்து வருகின்றனர். இதற்கு முன்பு […]
இரவு நேரங்களில் சிலருக்கு பாத எரிச்சல் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இரவு நேரங்களில் சரியான உறக்கம் இருக்காது. அதே சமயம் எழுந்து நடமாடுவதில் பல சிரமங்களை சந்திக்கின்றனர். இந்த பிரச்னை பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகளுக்கு பாத எரிச்சல் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் நரம்புகள் சேதமடைந்து, பாதங்களில் உணர்வு குறைகிறது. இதனால் இவர்களுக்கு பாத எரிச்சசல் ஏற்படுகிறது. சில நோய்கள் நரம்பியல் சிதைவை ஏற்படுத்தும், இது பாத எரிச்சலுக்கு வழிவகுக்கும். அதேபோல், டியூபர்கூலோசிஸ், […]
ஹமாஸின் இராணுவத்தையும் ஆளும் திறனையும் அழிக்கும் குறிக்கோளுடன் இஸ்ரேல் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், நாங்கள் போரின் மத்தியில் இருக்கிறோம். ஹமாஸின் இராணுவம் மற்றும் ஆட்சித் திறன்களை அழிக்கும் தெளிவான இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம். நாங்கள் இதை முறையாகச் செய்து வருகிறோம்.” என்று தெரிவித்துள்ளார். மேலும், “முதல் தடுப்பு நிலையை தகர்த்துள்ளோம். 2வது நிலை வான்வெளி தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 3 வது கட்டமாக காசா பகுதிக்குள் […]
பிரித்தானியாவில் திருடப்பட்ட காரை மீட்க கூகுள் செயலி உதவிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பர்மிங்காமைச் சேர்ந்த 23 வயதான ஜே ராபின்சன், காலையில் வேலை நிமித்தமாக வீட்டில் இருந்து வெளியே கிளம்ப வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்க வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது இரண்டு கார்களும் திருடப்பட்டிருந்தன. சீட் ஸ்போர்ட் கார் மற்றும் போக்ஸ்வேகன் கோல்ஃப் மாடல் கார் ஆகிய அவரது இரண்டு கார்களையும் வீட்டிற்குள் புகுந்து அவற்றின் சாவியை எடுத்து திருடி சென்றுள்ளனர். இந்த நிலையில், […]
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் வனப்பகுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் 4000 பேர் கொண்ட குழு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 1,300 வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் 3 கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக விடாசே அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் பரவி வரும் இந்த காட்டுத் தீயில் சிக்கி 6 பேர் காயமடைந்துள்ளனர். தீயை கட்டுப்படுத்துவதற்கான தீவர முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டுவிட்டர் எக்ஸ் நிறுவனத்தின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் அதிகாரி ஒருவர் கூறியுள்ள தகவலின்படி, அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளின் மதிப்பு 19 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது. தோராயமாக ஒரு பங்கின் விலை 45 டாலராக உள்ளது. சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கினார். ஆனால் இப்போது அந்த நிறுவனத்தின் மதிப்பு பாதிக்கும் கீழாக குறைந்து சரிவை சந்தித்து வருகிறது. அவர் அந்த நிறுவனத்தை கையகப்படுத்தியதில் இருந்தே […]
பிரான்ஸில் டெங்கு நுளம்பு பரவல் தீவிரமடைந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மே 1 ஆம் திகதியில் இருந்து இதுவரை பிரான்சில் 36 பேருக்கு டெங்கு காய்ச்சல் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் எவருமே அண்மையில் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள்ளும் டெங்கு காய்ச்சல் நோயாளி ஒருவர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் டெங்கு நுளம்பை அழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. பல […]