இலங்கை

30 மில்லியன் ரூபா பணமோசடி வழக்கு: நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பணமோசடி வழக்கில் இருந்து முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்களின் ஆணைக்குழுவை நிறுவுவதற்கு அரசுத் தரப்பு சாட்சியங்கள் தவறியதன் அடிப்படையில், அவர்களை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்குமாறு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய உயர்நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது முறைகேடாக ஈட்டிய 30 மில்லியன் ரூபா பணத்தை கவர்ஸ் கோர்ப்பரேட் […]

இலங்கை

தூங்கிக்கொண்டிருந்த கணவனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய மனைவி..!

  • November 2, 2023
  • 0 Comments

இராணுவ வீரரான தன்னுடைய கணவனின் அந்தரங்க உறுப்பை வெட்டி பலத்த காயங்களை ஏற்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது​ செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது மனைவி 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அனுராதபுர பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவானுமாகிய நாலக சஞ்ஜீவ ஜயசூரியவே இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபரான பெண்ணை அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மனநல வைத்தியரிடம் முன்னிலைப்படுத்துமாறும், உரிய மருத்துவ அறிக்கையை எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றில் […]

பொழுதுபோக்கு

கார்த்தியின் ஜப்பான் படம்.. 2வது சிங்கிளும் ரிலீஸ்

  • November 2, 2023
  • 0 Comments

நடிகர் கார்த்தியின் 2வது படமான ஜப்பான் படம் தீபாவளி ரிலீசாக வரும் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. திருச்சியில் நடைபெற்ற உண்மை சம்பவங்களில் அடிப்படையில் இந்தப் படத்தை ராஜூ முருகன் இயக்கியுள்ளார். தான் இதுவரை எந்த இயக்குநரிடமும் கதை இருக்கிறதா என்று கேட்டதில்லை என்றும் […]

உலகம்

பணியாளர்களுக்கு எலான் மஸ்க் விடுத்துள்ள வித்தியாசமான உத்தரவு…

  • November 2, 2023
  • 0 Comments

இனி வரும் சந்திப்புகளில் நிறுவனம் சம்பந்தபட்ட ஒரு கெட்ட செய்தியையாவது பணியாளர்கள் தெரிவிக்க வேண்டும். நல்ல செய்தியை மெதுவாகவும் தாமதமாகவும் கூறுங்கள் என எலான் மஸ்க் கூறியுள்ளார் பன்னாட்டு நிறுவனங்களில், தலைமை பொறுப்பில் உள்ளவர்களில் தொடங்கி சாதாரண பொறுப்பில் உள்ளவர்கள் வரை அனைத்து ஊழியர்களும் பங்கு பெறும் “ஆல் ஹேண்ட்ஸ் மீட்” எனப்படும் அனைத்து தரப்பு சந்திப்பு கூட்டங்கள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம்.இச்சந்திப்புகளில் நிறுவனங்களின் செயல் திட்டங்கள், வழிமுறைகள், எதிர்கால லட்சியங்கள் மற்றும் அவ்வப்போது திடீரென எழும் […]

பொழுதுபோக்கு

லியோ வெற்றி விழாவில் கலந்துகொள்ளாமல் அனிருத் எங்கே சென்றார்?

  • November 2, 2023
  • 0 Comments

லியோ வெற்றி விழாவில் அனிருத் எதனால் பங்கேற்கவில்லை என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்க லலிதகுமார் தயாரித்திருந்தார். இப்படம் இதுவரை 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க லியோ படத்தின் சக்சஸ் மீட் நேற்று […]

ஆஸ்திரேலியா

காளான் கறி சாப்பிட்ட மூவருக்கு நேர்ந்த கதி!சமைத்து கொடுத்த பெண் கைது

  • November 2, 2023
  • 0 Comments

காளான் கறி சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் இன்று (2) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம், விக்டோரியா மாநில லியோங்காதா நகரில் மதிய உணவு உண்ட பின்னர் மூவர் உயிரிழந்தனர். அத்துடன் அந்த உணவு அருந்திய மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் அந்த மதிய உணவை தயாரித்த எரின் பேட்டர்சன் என்ற பெண் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார். 49 வயதான […]

இலங்கை

வவுனியாவில் மணிக்கூட்டு கோபுரத்தின் அழகு மரம் மீது மோதிய டிப்பர் வாகனம்

  • November 2, 2023
  • 0 Comments

வவுனியா நகரில் மணிக்கூட்டு கோபுரம் பகுதியை அழகுபடுத்தும் மரம் மீது டிப்பர் மோதி இரண்டு மரங்கள் மற்றும் விளம்பரப்பதாதைகள் என்பனவற்றிற்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதையடுத்து குறித்த டிப்பர் மற்றும் சாரதியை வவுனியா பொலிசார் தடுத்துவைத்துள்ளதுடன் இரண்டு அழகுபடுத்தும் மரம் மற்றும் விளம்பரப்பதாதைகள் திருத்தி சீரமைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா மணிக்கூட்டுக்கோபுரம் பகுதியை அழகுபடுத்தும் திட்டத்தை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வவுனியா வர்த்தக சங்கம் மேற்கொண்டு நகரில் விலையுயர்ந்த அழகுபடுத்தும் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் […]

பொழுதுபோக்கு

ஷாருக்கானின் பிறந்தநாள் ட்ரீட்.. இனி கொண்டாட்டம்தான்

  • November 2, 2023
  • 0 Comments

ஷாருக்கானின் 58ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜவான் திரைப்படம் ரிலீஸாகியிருக்கிறது. அட்லீ முதன்முதலாக ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அதில் நயன் தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். ஷாருக்கானே படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார். ஷாருக்கானின் நடிப்பில் ஜவானுக்கு முன்னதாக வெளியான பதான் படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்தது. எனவே இந்தப் படமும் ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்க வேண்டும் என […]

இலங்கை

வங்கதேசத்தின் நிலவும் அரசியல் பிரச்சினை மோதலாக உருவெடுத்துள்ளது!

  • November 2, 2023
  • 0 Comments

பல வாரங்களாக வங்கதேசத்தில் நிலவி வந்த சூடான அரசியல் சூழல் தற்போது மோதல்களாக உருவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனவே எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் அரசியல் நெருக்கடி உருவாகி வருவதாகத் தோன்றுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பல பிரதான எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டனர் மற்றும் சனிக்கிழமையன்று அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் பேரணி மோதலில் முடிந்தது. இரண்டு எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் இதன்போது உயிரிழந்தனர். நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவை […]

ஆசியா

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • November 2, 2023
  • 0 Comments

இந்தோனேசியாவின் திமோர் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (02.11) பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் இருந்ததாக EMSC தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் வெளியாகவில்லை.