திருகோணமலையில் தீவிரமடையும் நில ஆக்கிரமிப்புகள் – காப்பாற்றுமாறு கோரிக்கை
திருகோணமலை மாவட்டத்தில் நில ஆக்கிரமிப்புகள் அதிகளவில் இடம் பெற்று வருவதாகவும் திருகோணமலையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தலைவர் எஸ். குகதாசன் கோரிக்கை விடுத்துள்ளார். திருகோணமலை திருஞானசம்பர் வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்றிரவு (02) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் 31 விகாரைகள் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்ற நிலையில் 23 விகாரைகளின் கட்டுமான பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அனைத்து இடங்களும் தமிழர்களுக்கு சொந்தமான நிலத்திலேயே […]