இலங்கை புகைப்பட தொகுப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் உணவுத் திருவிழா

  • July 24, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக பீடத்தில் சுற்றுலா விருந்தோம்பல் முகாமைத்துவ கற்கைகள் துறை இரண்டாம் வருட மாணவர்களின் ஏற்பாட்டில் உணவுத் திருவிழா இன்றையதினம் இடம்பெற்றது. திருநெல்வேலி பால்பண்ணையில் அமைந்துள்ள முகாமைத்துவ மற்றும் வணிக பீட வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் உணவுத் திருவிழா ஆரம்பமானது. உணவுத் திருவிழாவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா ஆரம்பித்து வைத்ததுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக பீட பீடாதிபதி பா.நிமலதாசன், சுற்றுலா விருந்தோம்பல் முகாமைத்துவ […]

உலகம்

சூடானில் விமான விபத்து! 9 பேர் பலி

சூடானில் ஏப்ரல் 15 முதல் சூடானின் இராணுவத்திற்கும் துணை இராணுவப் படைகளுக்கும் இடையிலான உள்நாட்டு போர் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இதனிடையே, போர்ட் சூடான் விமான நிலையத்தில் இருந்து சிவிலியன் விமானம் புறப்பட்டு விபத்துக்குள்ளானதில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த சிறுமி உட்பட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்டோனோவ் விமானம் நகரின் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானதாக ராணுவம் தெரிவித்துள்ளது. அன்டோனோவ் சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக […]

வட அமெரிக்கா

700 இந்திய மாணவர்களை ஏமாற்றியவர் கைது; வெளியான அதிர்சி தகவல்

  • July 24, 2023
  • 0 Comments

700 இந்திய மாணவர்களை ஏமாற்றி, அவர்கள் நாடுகடத்தப்படும் நிலைமையை ஏற்படுத்திய ஏஜண்ட், கடந்த மாதம் திருட்டுத்தனமாக கனடாவுக்குள் நுழையமுயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, Brijesh Mishra என்பவர் நடத்தும் Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி கனடாவில் கல்வி கற்பதற்காக, கல்வி விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார்கள் 700 மாணவர்கள்.அவர்கள் படிப்பை முடித்து நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போதுதான் தாங்கள் அனைவரும் ஏமாற்றப்பட்ட விடயம் அவர்களுக்குத் […]

இலங்கை

ஏழு வருடங்களில் 587 மருந்துகள் பாவனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன!

  • July 24, 2023
  • 0 Comments

கடந்த ஏழு வருடங்களில் 587 மருந்துகள் பாவனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் சமர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தரமற்ற மருந்து பாவனை குறித்த சர்ச்சை நீடித்து வருகின்ற நிலையில், இன்று (24.07) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,  உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளும்,  பதிவு செய்யப்பட்ட இறக்குமதி செய்யும் மருந்துகளும் தரமற்றவை என பரிசோதனையில் தெரியவந்தால் அவை அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியக் கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 278 […]

இலங்கை

ஜீலையுடன் மூடப்படும் இலங்கைக்கான நோர்வே தூதரகம்

  • July 24, 2023
  • 0 Comments

இலங்கைக்கான நோர்வே தூதரகம் 2023 ஆம் ஆண்டு ஜூலை 31ம் திகதியுடன் இலங்கையில் செயற்பாடுகளை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. ஓகஸ்ட் 01 முதல் இலங்கை மற்றும் மாலைத்தீவுடனான நோர்வேயின் இருதரப்பு உறவுகளுக்கு புதுடெல்லியில் உள்ள நோர்வே தூதரகம் பொறுப்பேற்கும் என்று தூதரகம் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள நோர்வே தூதரகத்தின் முகநூல் பக்கம் மூடப்படும் எனத் தெரிவித்துள்ள தூதரகம், புதுடெல்லியில் உள்ள நோர்வே தூதரகத்தின் பக்கத்தைப் பின்தொடருமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியா, […]

இந்தியா

அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்கக் கூடாது! சீமான் ஆவேசம்

சட்டப் புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்திலும், நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் புரட்சியாளர் அம்பேத்கரின் புகழ் என்றும் வாழும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிஞர் அண்ணல் அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றப் பதிவுத் துறையின் அறிவிப்பு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்டப் புரட்சியாளர் அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைப்பதைத் தவிர்ப்பதை ஏற்க […]

ஐரோப்பா

தலைநகர் மொஸ்கோவில் ஆளில்லா விமான தாக்குதல்..

  • July 24, 2023
  • 0 Comments

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உக்ரேனின் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) இன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவலை வெளியாகி உள்ளது. மொஸ்கோவிலுள்ள இரு கட்டடங்கள் மீது உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இத்தாக்குதலில் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொஸ்கோ வான்பரப்பில் உக்ரேனின் இரு ட்ரோன்களை தாம் சுட்டுவீழ்த்தியாகவும், அவற்றில் ஒன்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கட்டடத்துக்கு அருகில் ஒரு ட்ரோன் வீழ்ந்ததாகவும் மற்றொரு அலுவலகக் கட்டடமொன்றின் மீது மோதியதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரேனிடமிருந்து ரஷ்யா […]

இலங்கை

வேலை நிறுத்தத்தை கைவிட்ட ரயில்வே சாரதிகள்!

  • July 24, 2023
  • 0 Comments

ரயில்வே சாரதிகள் தனது வேலை நிறுத்த போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளனர. ரயில்வே அதிகாரிகளுடனான மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இயந்திர சாரதிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நேற்று (23.07) மாலை முதல் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன. பல புதிய ரயில் சேவைகளை ஆரம்பிப்பதற்கான புகையிரத திணைக்களத்தின் முயற்சிகளுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

திருமலையில் கடற்கரை மற்றும் பவளப்பாறைகளை சுத்திகரிக்கும் நிகழ்வு

  • July 24, 2023
  • 0 Comments

திருகோணமலை நகரை அன்மித்த கடற்கரை மற்றும் பவளப்பாறைகளை சுத்திகரிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் இன்று (24) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சுற்றுலா பணியகத்தின் தலைவர் ஏ.பீ. மதன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் நகர சுத்திகரிப்பு மாத்திரமல்லாது கடற்கரை மற்றும் கடற்கரையை அண்டிய பிரதேசங்கள் அனைத்து இடங்களிலும் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினம் திருகோணமலை டைக் வீதியில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

டுவிட்டரின் புதிய லோகோ! எலான் மஸ்க் அதிகாரபூர்வ அறிவிப்பு

உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் ட்விட்டரின் சின்னமான பறவை சின்னத்தை X என மாற்றி இருப்பதை அதிகாரபூர்வ அறிவித்துள்ளார். எலான் மஸ்க் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது திட்டங்களைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இன்று காலை அமெரிக்க நேரப்படிTwitter.comஐ X.com என சுட்டிக்காட்டி ட்வீட் செய்துள்ளார். டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதை  காணலாம்.  

You cannot copy content of this page

Skip to content