காசாவிற்கு மனிதாபிமான உதவி; உலக நாடுகளுடன் மாநாட்டை நடத்தும் பிரான்ஸ்
காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தி வரும் நிலையில், பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக உலக நாடுகளுடன் மாநாட்டை நடத்த பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. பிரான்ஸ் 80 நாடுகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, ஜோர்டான், எகிப்து, வளைகுடா நாடுகள் ஆகிய நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக பிரான்ஸ் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என […]