ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் 92 அகதிகள்
ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள 92 சட்டவிரோத குடியேற்றவாசிகளை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்ப ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. மேலும், நீண்டகால காவலில் உள்ள மேலும் 340 பேர் விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளனர். குடியேற்ற தடுப்பு உத்தரவு தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி இந்த விலக்குகள் செய்யப்படும். தற்போதுள்ள குடியேற்ற தடுப்பு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, புலம்பெயர்ந்தோரை காலவரையற்ற காவலில் வைத்திருப்பது புலம்பெயர்ந்தோரின் உரிமைகளுக்கு எதிரானது […]