ஆசியா செய்தி

பாகிஸ்தான் தற்கொலை குண்டுவெடிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 54ஆக உயர்வு

  • July 31, 2023
  • 0 Comments

வடமேற்கு பாகிஸ்தானில் அரசியல் கூட்டத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது, இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 54 ஐ எட்டியுள்ளது என்று பயங்கரவாத எதிர்ப்புத் துறையின் மூத்த அதிகாரி ஷௌகத் அப்பாஸ் கூறினார். பாதிக்கப்பட்ட 23 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறினார். மாவட்டத்தின் துணை ஆணையர் அன்வர் உல் ஹக், எண்ணிக்கையை உறுதிப்படுத்தினார். .

இலங்கை

மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வு! ஜாட்சன் பிகிராடோ

மக்களின் குரலாக தொடர்ந்து ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வட கிழக்கு மாகாணத்திற்குள் மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி வடகிழக்கு மக்களாகிய நாங்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்துக்கொண்டு இருப்போம்.என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் வடமாகாண இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார். ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வட கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி முன்னெடுத்து வந்த செயலமர்வின் ஒரு வருட நிறைவை நினைவு கூறும் […]

இலங்கை

வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நோய் தாக்கம்!

வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டுள்ளமையால் சிறைச்சாலை 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதுடன், கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்தவாரம் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலருக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து சிறைச்சாலை வளாகம் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதுடன், கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வையிடுவதற்கான செயற்பாடும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை நோய்பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பனிமனையினால் அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் விளக்கமறியலில் உள்ள […]

இலங்கை

யாழில் நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்! வெளியான மகிழ்ச்சியான தகவல்

யாழ்ப்பாணத்தில் PickMe செயலி மூலம் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி (நாளை) முதல் வாடகைக்கு வாகனங்களை அமர்த்தி பிரயாணங்களை மேற்கொள்ள முடியும் என PickMe செயலியின் வடமாகாண முகவர் தவதீஸன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் PickMe செயலியின் வடமாகாண முகவர் தவதீஸன் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பல பகுதிகளிலும் குறித்த செயலி பயன்பாட்டில் இருந்தாலும் கூட யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக நாளை(01) முதல் அறிமுகப்படுத்துகின்றோம். ஜனவரி மாத […]

இலங்கை

காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று மாலை 4 மணியளவில் ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. இதன்போது மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன

புகைப்பட தொகுப்பு

ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து பித்துப் பிடிக்க வைக்கின்றார் தன்யா……

  • July 31, 2023
  • 0 Comments

அபிராமி ஸ்ரீராம் என்ற இயற்பெயரை உடைய தன்யா ரவிச்சந்திரன் இந்திய தமிழ் சினிமா நடிகை. 1996இல் பிறந்த இவர் 2016 -ல் தமிழில் வெளிவந்த பலே வெள்ளைய தேவா படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானவர். அதன்பின், பிருந்தாவனம் (2017) மற்றும் கருப்பன் (2017) திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் திரைப்படங்களில் அறிமுகமாவதற்கு முன்னதாக சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப்படத்தில் நடிகை சிநேகாவுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது 27 வயதாகும் இவர் படவாய்புக்களுக்காக காத்திருக்கின்றார். இதேவேளை, சமூகவலைத்தளங்களில் பிசியாக […]

அறிந்திருக்க வேண்டியவை

பெண்களை விட ஆண்களிற்குதான் வேகமாக வயதாகுமாம்!

  • July 31, 2023
  • 0 Comments

அறிவியலின் வளர்ச்சி ஒவ்வோர் ஆண்டும் அபரிமிதமாக வளர்ந்துவருகிறது. இதற்கிடையில் சில ஆய்வுகள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தக்கூடியது. அப்படியான சில அறிவியில் உண்மைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். பெண்களைவிட வேகமாக முதுமையடையும் ஆண்கள் சமீபத்திய ஆய்வின்படி,  ஆண்களுக்குப் பெண்களைவிட வேகமாக வயதாகிறது. உயிரியல் ரீதியாகப் பெண்களைவிட 4 வயது மூத்தவர்களாக ஆண்கள் இருக்கிறார்கள் என்றும்,  அதை இளம் வயது ஆண்களிடம் தெளிவாகக் காண முடியும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. புற்றுநோய்க்கு முடிவுரை டோஸ்டார்லிமாப் என்பது ஒரு புற்றுநோய் […]

பொழுதுபோக்கு

பிக்பாஸ் புகழ் நடிகர் கவினுக்கு திருமணம்! வெளியான தகவல்

2011ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்க தொடங்கியவர் கவின். இவர் தாயுமானவன், சரவணன் மீனாட்சி ஆகிய சின்னத்திரை தொடர்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். பீட்சா மற்றும் இன்று நேற்று நாளை போன்ற திரைப்படத்தில் சின்ன வேடத்தில் நடித்தார். பின் பிக்பாஸில் கலந்துகொண்ட பெரிய ரீச் பெற்ற கவின் லிப்ட், டாடா போன்ற படங்களில் நடித்து சிறந்த நடிகராக வலம் வந்தார். அடுத்தடுத்தும் இரண்டு படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். […]

உலகம்

உயரமான கட்டடங்களில் ஏறும் சாகச வீரர் வாழ்வின் இறுதி நிமிடங்கள்! நெஞ்சை பதற வைக்கும் காடசி

உயரமான கட்டடங்களில் சுவர் வழியாக ஏறி சாகசம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டு சாகசப் பிரியர், 68 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். 30 வயதான ரெமி லுசிடி என்னும் அவர், சீனாவில் உள்ள ஹாங்காங்கில் ஒரு அடுக்குமாடியில் ஏறியபோது தவறி விழுந்துள்ளார். தனது நண்பரை காண வந்ததாகக் கூறி அவர் அந்த அடுக்குமாடிக்குள் நுழைந்திருக்கிறார். 68 ஆவது மாடியை அடைந்தபோது, கதவைத் தட்டி அங்கிருந்த பணிப் பெண்ணிடம் உதவி கோரியுள்ளார். ஆனால் […]

ஆசியா

ஆப்கானில் பெண்களுக்கு எதிராக தலிபான்கள் விதித்துள்ள புது தடை!

  • July 31, 2023
  • 0 Comments

ஆண்கள் இல்லாமல் பெண்கள் கார்களில் பயணம் செய்ய கூடாது என்று தாலிபான்கள் கடுமையான கட்டுப்பாட்டை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து அங்கு அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகின்றனர். அதனடிப்படையில் பெண்கள் கல்வி கற்கவும், உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லவும், நீச்சல் குளங்களுக்கு செல்லவும் தடை விதித்து உத்தரவிட்டனர்.மேலும் சமீபத்தில் கூட பெண்கள் அழகு நிலையங்கள் நடத்த தாலிபான்கள் தடை விதித்து உத்தரவிட்டனர், […]

You cannot copy content of this page

Skip to content