இலங்கை

இலங்கையில் நடைபெறும் எந்தவொரு தேர்தலுக்கும் தயார் – மஹிந்த அறிவிப்பு

  • November 18, 2023
  • 0 Comments

எதிர்வரும் எந்தவொரு தேர்தலுக்கும் தாம் தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான சரியான வேட்பாளரை உரிய நேரத்தில் முன்வைப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு கம்பஹாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொழுதுபோக்கு

விஜய் இல்லாமல் நடந்து முடிந்த சஞ்சய் படத்தின் பூஜை..

  • November 18, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் அடுத்தடுத்த வெற்றிப்பட இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்து படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து விஜய் கொடுத்திருந்த லியோ படம் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபுவுடன் தளபதி 68 படத்திற்காக கூட்டணி அமைத்து நடித்து வருகிறார். விஜய்யின் மகன் சஞ்சய்யும் தற்போது சினிமாவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இவர் தன்னுடைய தந்தையின் வேட்டைக்காரன் படத்தில் நா அடிச்சா தாங்க மாட்ட பாடலில் முன்னதாக நடனமாடி […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் மனநல மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு

  • November 18, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள மனநல மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் ஒருவர் வைத்தியசாலைக்குள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதல்தாரியை சுட்டுக் கொன்றதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த நபரின் கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த போது சுமார் 185 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இலங்கை

இலங்கையில் இறைச்சி மற்றும் முட்டை விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

  • November 18, 2023
  • 0 Comments

இலங்கையில் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். வெட் வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் கால்நடை தீவனத்தின் விலை அதிகரித்தால் இந்நிலை மாறலாம் என அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார். சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தொடர்ச்சியாக தமது உற்பத்திகளை சந்தைக்கு அனுப்புவதால் முட்டையொன்று 35 – 40 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனையாகும் சாத்தியம் […]

பொழுதுபோக்கு

தனுஷ் மகனுக்கு அபராதம்.. போக்குவரத்து காவல் துறை அதிரடி

  • November 18, 2023
  • 0 Comments

போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியதற்காக தனுஷின் மூத்த மகனுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனுஷுன் மூத்த மகன் யாத்ரா ஆர்15 பைக் ஓட்டும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ பதிவில் அவர் பைக் ஓட்ட அவருக்கு உதவியாளராக ஒருவர் சொல்லிக்கொடுக்கிறார். இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் லைசன்ஸ் இல்லாமல் பைக் ஓட்டுவது குற்றம் என்றும், உங்க வீட்லயே சிஸடம் சரி இல்லை என்றும் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர். நெட்டிசன்களின் தொடர் பதிவால் […]

வாழ்வியல்

தயிர் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?

  • November 18, 2023
  • 0 Comments

காலம் காலமாக நம் உணவில் சேர்த்து கொள்ளக்கூடிய முக்கியமான உணவு பொருள் தயிர். இந்த தயிரை மோர் குழம்பு, தயிர் வெங்காயம், தயிர் சாதம் என்று பலவகையில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள். இது எளிமையான உணவாக இருந்தாலும் அதிக மருத்துவ குணம் நிறைந்தது. மலிவான விலையில் ஒரு மருத்துவம் என்று கூறலாம். இந்த தயிரை நாம் எப்படி பயன்படுத்துவது.எப்போது பயன்படுத்துவது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். தயிர் மிக எளிமையாக செரிமானம் ஆகக் […]

அறிந்திருக்க வேண்டியவை

அதிர்ஷ்ட மீன் வளர்ப்பின் அற்புதம் தெரியுமா உங்களுக்கு?

  • November 18, 2023
  • 0 Comments

வீட்டில் மீன் தொட்டி வைத்து, கலர் கலராக மீன்களை வளர்ப்பது வீட்டுக்கு அழகு சேர்ப்பது மட்டுமில்லாமல், மீனின் அசைவுகள் மனதுக்கு நிம்மதி மற்றும் அமைதியை ஏற்படுத்துகிறது. மேலும், வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்குகிறது. உணவு நிலையம், சூப்பர் மார்கெட், வாடிக்கையாளர்கள் அதிகம் கூடும் இடங்கள், துணிக்கடை, ரெடிமேட் கடை , பழக்கடை, காய்கறி விற்கும் இடங்களில் என பல்வேறு இடங்களிலும் இந்த அதிர்ஷ்ட மீன்களை தொட்டிகளில் வைத்து வளர்ப்பார்கள். இதனால் தொழில், வியாபாரம் பெருகும் என்பது நம்பிக்கை. […]

மத்திய கிழக்கு முக்கிய செய்திகள்

பசி, பட்டினியால் வாடும் காஸா – உலக உணவு அமைப்பு வெளியிட்ட தகவல்

  • November 18, 2023
  • 0 Comments

காஸாவில் வாழும் மக்கள் கடுமையான பசி பட்டினியை எதிர்நோக்குவதாக உலக உணவு அமைப்பு தெரிவித்துள்ளது. அங்கு உணவும் குடிநீரும் இல்லை என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த அந்த அமைப்பு தெரிவித்தது. எரிபொருள் பற்றாக்குறை நிலைமையை இன்னும் மோசமாக்குவதாக அது குறிப்பிட்டது. மனிதாபிமான அமைப்புகள் எரிபொருளைக் கெஞ்சிக் கேட்கும் அளவுக்கு நிலைமை இருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் குறிப்பிட்டது. போரில் ஒரு தரப்பு மட்டும் பாதுகாப்பு வட்டாரங்களை அமைப்பது குறித்து பல்வேறு ஐக்கிய நாட்டு நிறுவன அமைப்புகளும் […]

ஆசியா

சிங்கப்பூரிலும் அச்சுறுத்தலாக மாறிய மூட்டைப்பூச்சி

  • November 18, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் மூட்டைப்பூச்சிப் பிரச்சினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. விடுமுறைக் காலத்துக்குப் பிறகு வழக்கமாக இருப்பதைவிட இம்முறை 30 சதவீதம் அதிகரித்துள்ளதென பெரிய பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. அதிகமானோர் வெளிநாடுகளுக்குச் சென்று வருவதால், மூட்டைப்பூச்சிச் சம்பவங்கள் வழக்கத்துக்கு மாறாகக் கூடுதலாய்ப் பதிவாகியுள்ளன. ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் தென் கொரியாவிலும், மூட்டைப்பூச்சிப் பிரச்சினை பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இருண்ட பகுதிகள், மெத்தையின் மடிப்புகளில் இதுபோன்ற இடங்களில் மூட்டைப்பூச்சிகளைக் கண்டுபிடிக்கலாம். ஐரோப்பாவில் ஏற்பட்ட பிரச்சினைக்குப் பிறகு இவற்றைப் பற்றி […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு அதிக செலவில் கிறிஸ்துமஸ் கொண்டாட தயாராகும் மக்கள்

  • November 18, 2023
  • 0 Comments

அதிகரித்து வரும் பணவீக்கம், வட்டி விகிதங்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் இருந்தபோதிலும், ஆஸ்திரேலியர்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பரிசுகளுக்காக அதிக செலவு செய்ய உள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஆஸ்திரேலியர்கள் ஆடை, பாதணிகள் மற்றும் இதர பொருட்களுக்கான செலவினங்களை இந்த ஆண்டு 16 சதவீதம் அதிகரிக்கத் தயாராக உள்ளதாக மோனாஷ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, பண்டிகைக் காலத்தில் இலத்திரனியல் உபகரணங்களின் விலை 40 […]