ஆசியா

சிங்கப்பூரில் அதிரடி நடவடிக்கை – 80,000 தொலைபேசி எண்களுக்கு தடை!

  • November 24, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் ScamShield செயலி கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து, சுமார் 80,000 தொலைபேசி எண்களை தடை செய்துள்ளது. அத்துடன் அந்த எண்களை, தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்த்துள்ளது. அத்துடன் சுமார் 5 மில்லியன் குறுஞ்செய்திகளை மோசடித் தகவல் என செயலி அடையாளம் கண்டுள்ளது. ScamShield செயலி சென்ற மாத நிலவரப்படி 750,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. செயலியில் மேம்பாடுகள் செய்யப்படுகின்றது. நச்சு நிரல்களை அடையாளம் காணும் மற்ற செயலிகளுக்கு ScamShield ஆதரவாகச் செயல்படுகிறது. நச்சு நிரல்களை அடையாளம் […]

ஐரோப்பா

பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவன்

  • November 24, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பாடசாலை மாணவன் ஒருவன் தனது பாடசாலைக்கு கொக்கைன் போதைப்பொருளை எடுத்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பாகியுள்ளது. பாடசாலை இடைவேளை நேரத்தின் போது குறித்த மாணவன் தனது புத்தகப்பையில் இருந்து குறித்த கொக்கைன் போதைப்பொருள் பொதியை வெளியே எடுத்துள்ளார். இதனைக் கண்காணித்த ஆசிரியர், உடனடியாக அதனை பறித்து எடுத்துக்கொண்டுள்ளார். பின்னர் பொலிஸாருக்கு அழைத்துள்ளார். குறித்த பொருள் என்னவென தெரியாத குறித்த மாணவன், அதனைத் தமது வீட்டின் தோட்டத்தில் உள்ள மரம் ஒன்றின் கீழே இருந்து கண்டெடுத்ததாக தெரிவித்துள்ளார். பொலிஸார் […]

இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • November 24, 2023
  • 0 Comments

கொழும்பில் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத. அம்பதலை நீர் விநியோகத் தொகுதியில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரையிலான 16 மணிநேர நீர் விநியோகத் தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகள் நீர் விநியோகம் […]

சீனாவில், வீட்டை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் அபராதம்

  • November 23, 2023
  • 0 Comments

    சிச்சுவான் மாகாணம் தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ளது. ஆசிய கண்டத்தின் மிக நீளமான நதியான யாங்சே சிச்சுவான் பகுதி வழியாக பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. புகே உள்ளூராட்சி பகுதி சிச்சுவான் மாகாணத்தின் தெற்கில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ளாட்சி அமைப்புகள் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளன. இந்தச் சட்டத்தின்படி, வீடுகளில் பாத்திரங்களைக் கழுவாமல், தூய்மையற்ற படுக்கைகளில், உணவுப் பொருட்களைப் பயன்படுத்தும் போது சுகாதாரமற்ற நிலையில் இருப்பவர்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படும். பொது மற்றும் குடியிருப்பு சுகாதாரம் பற்றிய […]

இலங்கை செய்தி

இலங்கையில் 2,000 நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட தரமற்ற பரிசோதனை

  • November 23, 2023
  • 0 Comments

சுமார் 2,000 நோயாளிகளுக்கு புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் தரமற்ற வகை தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சுகாதார வல்லுநர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனை குறிப்பிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் மருந்தை சப்ளை செய்த நிறுவனமே தரமற்ற இந்த வகை தடுப்பூசியும் இறக்குமதி செய்யப்பட்டது என்றார். எவ்வாறாயினும், இந்த தடுப்பூசி ஏற்கனவே பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சில் இன்று (23) நடைபெற்ற செய்தியாளர் […]

உலகம் செய்தி

நாளை முதல் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்

  • November 23, 2023
  • 0 Comments

  இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே உத்தேச போர் நிறுத்தம் உள்ளூர் நேரப்படி நாளை (24) காலை 7 மணிக்கு தொடங்கும் என்று கட்டார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த கத்தார் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது. இதில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கையின்படி, ஹமாஸ் அமைப்பும் 13 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை நாளை மாலை விடுவிக்க விருப்பம் தெரிவித்துள்ளன. விடுவிக்கப்படவுள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் எண்ணிக்கை 50 ஆகும். பதிலுக்கு, இஸ்ரேல் […]

இலங்கை செய்தி

இலங்கை பொலிஸ் காவலில் இருந்த தமிழ் இளைஞர் உயிரிழப்பு!!! சுவிஸ் கடும் கண்டனம்

  • November 23, 2023
  • 0 Comments

இலங்கை பொலிஸ் காவலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுவிட்சர்லாந்து கவலை வெளியிட்டுள்ளது. இளைஞரின் மரணம் குறித்து சுவிட்சர்லாந்து ஆழ்ந்த கவலையில் இருப்பதாக தூதர் சிரி வால்ட் X இல் ஒரு செய்தியை வெளியிட்டார். காவலில் தவறாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் எந்தவொரு வழக்கும் இலங்கை அதிகாரிகளால் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். “பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் ஒருவர் இறந்தது குறித்து சுவிட்சர்லாந்து ஆழ்ந்த கவலையில் உள்ளது. காவலில் தவறாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் […]

உலகம் செய்தி

உலகில் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான இடமாக மாறிய காசா

  • November 23, 2023
  • 0 Comments

உலகிலேயே குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான இடம் காசா என்று யுனிசெப் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் கேத்தரின் ரஸ்ஸல், கடந்த அக்டோபர் 7ஆம் திகதி முதல் காசா பகுதியில் போர் காரணமாக 5,300 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சுட்டிக்காட்டியுள்ளார். இது போரினால் ஏற்பட்ட மொத்த இறப்பு எண்ணிக்கையில் 40 வீதம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் மேலும் 200 குழந்தைகள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுவதாக யுனிசெஃப் வலியுறுத்தியுள்ளது. […]

இலங்கை செய்தி

ரயில் மற்றும் மின்சாரம் தாக்கி யானைகள் பலி

  • November 23, 2023
  • 0 Comments

  முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இரண்டு காட்டு யானைகள் நேற்று (22) புகையிரதத்தில் அடிபட்டு மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உத்தராதேவி ரயிலில் கிளிநொச்சி முறுகண்டி பகுதியில் யானை மோதி உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பேரி சாலம்பன் பகுதியில் யானையொன்று சடலமாக மீட்கப்பட்டதாக முல்லைத்தீவு வனவிலங்கு அதிகாரி தெரிவித்தார். குறித்த பகுதியில் உள்ள வயல்களுக்கு யானை அச்சுறுத்தல் காரணமாக […]

இலங்கை செய்தி

இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு

  • November 23, 2023
  • 0 Comments

டெங்கு என்பது இலங்கையில் அனைவரும் பேசும் ஒரு நோயாகும். மழையால், டெங்கு கொசுத்தொல்லை அதிகரித்து, நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனவே, டெங்கு பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம். எனவே இன்று நாம் டெங்கு பற்றி பேசப் போகிறோம். அதை பற்றி சரியாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவும்.