ஐரோப்பா

இஸ்ரேல் ஹமாஸ் போர்: பிரித்தானியாவில் கொல்லப்பட்ட மருத்துவ ஊழியர்களுக்காக விழிப்புணர்வு முன்னெடுப்பு

கொல்லப்பட்ட மருத்துவ ஊழியர்களுக்காக பிரித்ததானியா விழிப்புணர்வில் நிரந்தர காசா போர்நிறுத்தத்திற்கான கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தம் தொடங்கியதில் இருந்து 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மருத்துவ பணியாளர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ள நிலையில், லண்டனில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் காஸாவில் நிரந்தர போர் நிறுத்தத்தைக் கோருகின்றனர். உலகெங்கிலும் உள்ள பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் தொடர்ந்து மூன்று வாரங்களாக இந்த வகையான விழிப்புணர்வு நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கையை மீள் கட்டியெழுப்ப எதிர்கட்சிகளுக்கு அழைப்பு!

  • November 26, 2023
  • 0 Comments

ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்காமல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். மாத்தளை மாவட்ட செயலகத்தில் நேற்று (25.11) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்தப் பொருளாதார முறையை மாற்ற வேண்டும். இல்லையென்றால் இன்னும் 5-6 வருடங்களில் இந்தப் பிரச்சினைகள் வந்துவிடும்.  இந்நேரம் போலல்லாமல் இன்னும் கடுமையானதாக இருக்கும். எனது அடுத்த பயிற்சி இது ஒரு புதிய பொருளாதாரத்தை உருவாக்குவது. நாம் இந்த […]

இந்தியா

கோலத்தை அழித்ததால் ஆத்திரத்தில் காரை அடித்து நொறுக்கிய பெண் – அதிர்ச்சி வீடியோ!

  • November 26, 2023
  • 0 Comments

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கோலத்தின் மீது காரை ஏற்றியதால் ஆத்திரத்தில் காரின் கண்ணாடிகளை பெண் ஒருவர் அடித்து நொறுக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் நர்சிங்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மது ஜெயின். இவர் தனது வீட்டு வாசலில் ரங்கோலி கோலமிட்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது அருகாமை வீட்டில் வசித்து வந்த நபர் ஒருவர் அவரது காரை அந்த கோலத்தின் மீது நிறுத்தியுள்ளார். இதில் கோலம் அழிந்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

500 சவரன் நகை.. விலை உயர்ந்த புடவை… பிரம்மாண்டமாக நடந்த ராதாவின் மகள் திருமணம்.. வைரலாகும் ரகசியம்

  • November 26, 2023
  • 0 Comments

நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயரின் திருமணத்திற்கு 500 சவரன் தங்க நகையை ராதா வரதட்சனையாக கொடுத்துள்ளார். நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவுக்கும், ரோஹித் மேனனுக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்தது. திருவனந்தபுரத்தில் நடந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மண மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நடிகை ராதாவின் மகள் தமிழில் கோ படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். 2015ஆம் ஆண்டு வெளியான புறம்போக்கு […]

தமிழ்நாடு

புதுக்கோட்டையில் வேலுப்பிள்ளை பிரபாகரன் 69ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம்

  • November 26, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 69 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டுபுதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் தலைமையிலும் அறந்தாங்கி நகரச் செயலாளர் மணிகண்டன் அறந்தாங்கி தொகுதி செயலாளர் வேங்கை பழனிமற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில் கலந்து கொண்ட ரத்த நன்கொடையாளர்களுக்கு அறந்தாங்கி அரசு […]

இந்தியா

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்ற விபத்தில் 07 பேர் உயிரிழப்பு!

  • November 26, 2023
  • 0 Comments

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி கவிழ்ந்ததில் தொழிலாளர்கள் குழுவொன்று உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு 03 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்

இலங்கை

கொக்குத்தொடுவாய் அகழ்வு பணிகள் இன்று நிறுத்தப்பட்டுள்ளன!

  • November 26, 2023
  • 0 Comments

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்றுடன்  (25.11) நிறைவடைந்துள்ளது. ஆறாவது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியின்போது,   ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தன. நேற்றைய தினத்துடன் 35 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் துப்பாக்கி சன்னங்களும் குண்டு சிதறல்களும் மீட்கப்பட்டுள்ளதோடு கையில் அணியப்படும் இலக்கத்தகடு ஒன்றும், மணிக்கூட்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. ஸ்கானர் இயந்திரம் மூலம் குறித்த புதைகுழியானது எவ்வளவு தூரம் பரந்து வியாபித்துள்ளது என கடந்த இரண்டு தினங்கள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதன் முடிவுகள் […]

உலகம்

கொன்று குவிக்கப்படும் அப்பாவி பொதுமக்கள் ;இஸ்ரேலுக்கு எதிராக ஸ்பெயின், பெல்ஜியம் பிரதமர்கள் கண்டனம்!

  • November 26, 2023
  • 0 Comments

அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பது ஏற்க முடியாதது என இஸ்ரேலுக்கு ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 7ம் திகதி தொடங்கிய ஹமாஸ்- இஸ்ரேல் போரானது ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. பல முறை தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு சர்வதேச சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் அதற்கு இஸ்ரேல் செவிசாய்க்கவில்லை. இஸ்ரேல், காஸா மீது நடத்தி வரும் தாக்குலில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 13,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். […]

இலங்கை

இலங்கையின் மேல் மாகாணத்தில் திடீரென மேற்கொள்ளப்பட் சுற்றிவளைப்பில் 40 பேர் கைது!

  • November 26, 2023
  • 0 Comments

இலங்கையின் வெல்லம்பிட்டிய,  சிங்கபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஏறக்குறைய 4 பெண்கள் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படை (STF) மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து இன்று (26.11) குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகைய மேற்கொண்டுள்ளனர்.  மொத்தம் 138 போலீசார் மற்றும் 200 ராணுவ வீரர்கள் இந்த சோதனையை மேற்கொண்டனர். இதன் போது 61 வீடுகள் மற்றும் 196 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர்களில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

இலங்கையின் சீதுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு!

  • November 26, 2023
  • 0 Comments

இலங்கையின் சீதுவ, கொடுகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.